Rahu Ketu Transit 2023 – 2025 : 18-Month Period to Remedy Snake Planet Afflictions & Boost Success, Self-Growth & Balance Join Now
India's No. 1
Online Astrology &
Remedy Solution

2018 April Month’s Rasi Palan for Mithunam

February 23, 2018 | Total Views : 1,532
Zoom In Zoom Out Print

மிதுனம் ராசி - பொதுப்பலன்கள் இந்த மாதம் சூழ்நிலைகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். அதனால் நீங்கள் வலிமையுடனும் நம்பிக்கையுடனும் காணப்படுவீர்கள். உங்கள் முயற்சிக்கு உங்கள் தகவல் தொடர்பு திறமை மூலம் நற்பலன்கள் கிடைக்கும். கலாச்சார நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வதன் மூலம் மகிழ்ச்சியும் நிம்மதியும் கிடைக்கும். உங்கள் எண்ணங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்படும். உங்கள் தொழிலில் நீங்கள் சவால்களை மேற்கொள்வீர்கள். உங்கள் தொழில் சார்ந்த பணிகளை முடிக்க நீங்கள் தொலை தூர பயணம் ஒன்றை மேற்கொள்ள வாய்ப்பு கிடைக்கும். நீங்கள் சமூக வாழ்வில் ஓர் அடையாளத்தைப் பெறுவீர்கள். இந்த மாதம் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மிதுனம் ராசி - காதல் / திருமணம் நீங்கள் உங்கள் துணையுடன் நட்புணர்வோடு பழகுவீர்கள். மனம் திறந்து பேசி உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். உங்கள் முறையான தகவல் தொடர்பு மூலம் நீங்கள் உங்கள் உறவை புதுப்பித்துக் கொள்வீர்கள். திருமண வாழ்க்கை அனுகூலமாக காணப்படும். உங்கள் உறவு மற்றும் நட்பு வட்டாரத்தில் உள்ள வரன்களுக்கு முக்கியத்துவம் அளிப்பீர்கள். அதுவே உங்களுக்கு பொருத்தமாக அமைய வாய்ப்பு உள்ளது. திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம் : சுக்கிரன் பூஜை 2018-april-months-rasi-palan-for-mithunam மிதுனம் ராசி - நிதிநிலைமை நிதிநிலைமையில் ஸ்திரத்தன்மை காணப்படும். நீங்கள் தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்துவதன் மூலம் அதிக பணத்தை சேமிக்கலாம். இந்த மாதம் நிலுவையில் உள்ள பணத்தை வசூல் செய்வீர்கள். எதிர்காலத் தேவைக்காக பணம் சேமிக்க திட்டமிடுவீர்கள். பணத்தை முதலீடு செய்வதற்கு நிதித்துறை நிபுணர்களின் ஆலோசனை கேட்டு அதன்படி செயல்படுங்கள். உங்கள் நிதிநிலை மேம்பட பரிகாரம் : ராகு பூஜை மிதுனம் ராசி - வேலை பணியைப் பொறுத்தவரை இந்த மாதம் உங்களுக்கு சாதகமாக உள்ளது. உங்கள் பணி மேலதிகாரிகளின் கவனத்திற்கு செல்லும். அவர்கள் உங்கள் திறமை கண்டு திருப்தியடைவார்கள். உங்களின் விரைவான முன்னேற்றம் உங்களுக்கு திருப்தி அளிக்கும். சிறிய விஷயங்களுக்காக உங்கள் மேலதிகாரிகளை தொந்தரவு செய்யாதீர்கள். நீங்கள் சுய வளர்ச்சி காண பணியில் ஸ்திரத்தன்மையை பராமரிக்க வேண்டும். உங்கள் பணியில் நீங்கள் விரும்பிய அடையாளத்தை பெறலாம். வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி பெற பரிகாரம் : குரு பூஜை மிதுனம் ராசி - தொழில் தொழிலில் எதிர்கால வாய்ப்புகளுக்கான திட்டங்களை நீங்கள் செயல்படுத்த இயலும். இந்த மாதம் புதிய தொடக்கங்களுக்கு அவசரப்படாதீர்கள். நீங்கள் பூர்த்தி செய்த பணிகளில் உங்களுக்கு லாபம் கிடைக்கும். நீங்கள் சமூக தொடர்புகளை மேம்படுத்தவும் உங்கள் வாடிக்கையாளர்களை விரிவுபடுத்தவும் கவனம் செலுத்த வேண்டும். வியாபாரம் தொடர்பான உங்கள் முடிவு வெற்றியை பெற்றுத் தரும். மிதுனம் ராசி - தொழில் வல்லுனர்கள் தொழில் வல்லுநர்களுக்கு இது திருப்திகரமான மாதம். நீங்கள் சகபணியாளர்களுடன் நட்புணர்வோடு இருப்பீர்கள். இந்த மாதம் நீங்கள் சிறப்பு சலுகைகள் அல்லது சம்பள உயர்வு பெறும் தகுதியடைவீர்கள். நிர்வாகத்தில் உங்களுக்கு கூடுதல் பொறுப்பு அளிப்பார்கள். பணியில் உங்கள் அறிவார்ந்த முடிவுகள் திறம்பட செயல்படும். மிதுனம் ராசி - ஆரோக்கியம் இந்த மாதம் உங்கள் ஆரோக்கியம் சாதரணமாக இருக்கும். இரத்தத்தில் சிகப்பணுக்கள் குறைந்து காணப்படும் காரணத்தால் நீங்கள் சோர்வாக காணப்படுவீர்கள். நீங்கள் சில பணிகளை தள்ளிப்போடலாம். சுய மருத்துவத்தால் சிக்கல்கள் ஏற்படலாம். வயிறு சம்பந்தமான பிரச்சினைகளை அலட்சியப்படுத்தாதீர்கள். ஆரோக்கியமான வாழ்விற்கு பரிகாரம் : புதன் பூஜை மிதுனம் ராசி - மாணவர்கள் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். இருமடங்கு ஆற்றலுடன் செயல்பட்டு பணிகளை முடிப்பார்கள். கல்வி நிறுவனத்தில் நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைப் பற்றி நிச்சயமான தன்மையுடன் புகார் கூறுங்கள். உங்கள் சமூக தொடர்பு பாராட்டத்தக்கதாக இருக்கும். கல்வியில் சிறந்து விளங்க பரிகாரம் சரஸ்வதி ஹோமம் சுப தினங்கள்: 4,5, 6, 7, 17, 20, 24, and 25 அசுப தினங்கள்: 3, 10, 15, 19, 28 and 30

Leave a Reply

Submit Comment