AstroVed Menu
AstroVed
search
search
x
cart-added The item has been added to your cart.

2018 April Month’s Rasi Palan for Makara

dateSeptember 19, 2018

மகர ராசி - பொதுப்பலன்கள் இந்த மாதம் நீங்கள் விரும்பிய பலன்கள் கிடைக்கும். நீங்கள் உங்கள் பணிகளை திறம்பட ஆற்றுவீர்கள். நிலுவைப் பணிகளை முடிப்பீர்கள். உங்கள் குடும்பப் பணிகளில் கவனம் செலுத்த முயலுங்கள். உங்கள் குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் நீங்கள் சிறந்த ஆலோசகராக செயல்படுவீர்கள். அனைவரிடத்திலும் உங்களின் உணர்ச்சிப்பூர்வமான இயல்பு உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்கள் தனிப்பட்ட வாழ்விலும் சரி அலுவல் மற்றும் தொழிலிலும் நீங்கள் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் காணப்படும் மகிழ்ச்சி உங்களுக்கு திருப்தி அளிக்கும். உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் நீங்கள் உல்லாசப் பயணம் மேற்கொள்வீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மகர ராசி - காதல் / திருமணம் இந்த மாதம் நீங்கள் உங்கள் துணையுடன் விரும்பிய புது வாழ்வு வாழ்வீர்கள். காதலில் புதிய அத்தியாயம் உருவாகும். உங்கள் துணையுடன் நல்ல புரிந்துணர்வு காணப்படும். திருமணத்திற்கு நல்ல வரன் அமையும். உங்கள் திருமணம் நிச்சயமாகும் திருமண வாழ்வில் நல்லிணக்கம் மேம்பட பரிகாரம் : சுக்கிர பூஜை 2018-april-months-rasi-palan-for-makara மகர ராசி - நிதிநிலைமை நிதிநிலைமையை பொறுத்தவரை இந்த மாதம் உங்களுக்கு சாதகமாக உள்ளது. இரண்டாவது வருமானம் காண சிறந்த சாத்தியம் உள்ளது. உங்கள் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள பணப்புழக்கம் சிறப்பாக காணப்படும். இந்த மாதம் நீங்கள் புதிய முதலீடுகளில் பங்கு கொள்வீர்கள். உங்கள் நண்பர்களிடமிருந்து நிலுவைப் பணம் வசூல் செய்வீர்கள். நிதிநிலைமை மேம்பட பரிகாரம் : குரு பூஜை மகர ராசி - வேலை இந்த மாதம் பணியில் வளர்ச்சி திருப்திகரமாக இருக்கும்.மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். உங்களின் சிரத்தையான பணிக்கு சம்பள உயர்வு பெறுவீர்கள். முக்கியமான வேலைகள் உங்களுக்கு கொடுக்கப்படும். நீங்கள் பணிகளை குறித்தநேரத்தில் முடிப்பீர்கள். பணியிடத்தில் நல்லுறவு பராமரிப்பீர்கள். வேலை மற்றும் தொழில் வளர்ச்சி பெற பரிகாரம் : அங்காரக பூஜை மகர ராசி - தொழில் தொழில் தொடர்புகளுக்கு இந்த மாதம் மிகவும் உகந்த மாதம். என்றாலும் நீங்கள் வாய்ப்புகளை கவனமாகவும் நம்பிக்கையுடனும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் உங்கள் கூட்டாளிகள் தங்கள் பாணியில் பணிகள் முடிக்க அவர்களுக்கு உரிமை வழங்க வேண்டும். நீங்கள் விரும்பிய பணி உங்களுக்கு கிடைக்கும். ஆவணங்களை தவறின்றி சமர்ப்பிக்கவும். மகர ராசி - தொழில் வல்லுநர்கள் தொழில் சார்ந்த நேர்மறை விளைவுகள் உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும். நீங்கள் உங்கள் இலக்குகளை படிப்படியாக அடைவீர்கள். கூடுதல் பணிகளை நீங்கள் முழுமையாக அங்கீகரிக்கலாம்.இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் திறமைகளை நிரூபிப்பீர்கள். உங்கள் தொழிலில் ஸ்திரத்தன்மை காண்பீர்கள். அர்ப்பணிப்புடன் பணி செய்யும் ஒரு குழுவை பணிக்காக நிர்ணயிப்பீர்கள். மகர ராசி - ஆரோக்கியம் ஆரோக்கியத்தில் காணப்படும் படிப்படியான முன்னேற்றம் உங்களுக்கு திருப்திகரமாக இருக்கும். கவனம் மற்றும் மன அமைதி பெற தியானம் மேற்கொள்ளுங்கள். ஆரோக்கியம் தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வதன் மூலம் உங்களுக்கு சில பயனுள்ள குறிப்புகள் கிடைக்கப்பெறுவீர்கள். இரத்த அழுத்தம் சிறிது அதிகரிக்கும். ஆரோக்கியமான வாழ்விற்கு பரிகாரம் : ஸ்ரீ வைத்தியநாத பூஜை மகர ராசி - மாணவர்கள் இந்த மாதம் உங்களுக்கு படிப்பில் நீங்கள் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். உங்களிடம் காணப்படும் மாற்றம் கண்டு பெற்றோர்கள் திருப்திகரமாக உணர்வார்கள். நீங்கள் உங்கள் தேர்வை வெற்றிகரமாக எழுதுவீர்கள். உங்களுடைய தொழில் நுட்ப அறிவை வளர்த்துக் கொள்ள நீங்கள் ஏதாவது ஒரு வகுப்பில் சேருவீர்கள் அல்லது முகாம்களில் பங்கு கொள்வீர்கள். கல்வியில் சிறந்து விளங்க பரிகாரம் : சரஸ்வதி ஹோமம் சுப தினங்கள்: 1, 2, 3, 4, 5, 10, 13, 14, 20, 21 and 29 அசுப தினங்கள்: 6, 9, 11, 15, 17, 23 and 28


banner

Leave a Reply