சித்தர் என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்றும், சிந்தையுடையவர் என்றும் பொருள். சித்தர்கள் நம்மிடையே தோன்றி வாழும் போதே பல அற்புதங்களை நிகழ்த்தி, முக்தியடைந்த பின்பும் தனது பக்தர்களுக்கு திருவருள் புரிந்து கொண்டிருக்கும் சித்தர்களை வணங்குவது அந்த சிவபெருமானையே வணங்குவதற்கு சமம் என பார்க்கப்படுகிறது. சிவத்தை அகக்கண்ணால் உணர்ந்து, தியானித்து, தரிசனம் செய்து ஆத்ம சக்தியை எழுப்பி, செயற்கரிய காரியங்களை செய்வது சித்தர்களது செயலாகும். சித்தர்களுக்கென்று தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் கிடையாது.
மக்களின் பாவங்களையும், மன வேதனைகளையும் சித்தர்கள் உள்வாங்கிக் கொள்வதால் அதன் தாக்கத்தினால் அவர்களுக்கு நோய்கள் ஏற்படும். ஆனாலும் அந்த நோயின் வலியும், வேதனையும் அவர்களைத் தாக்காது. ரமணமகரிஷி, ராம்சுரத்குமார் போன்ற மாபெரும் மகான்களை நோய்கள் பற்றினாலும் கூட அவர்கள் அதை உணர்ந்தது இல்லை. நமது பாவங்களையும், வேதனைகளையும் தாங்கிக் கொண்டு திருவருள் புரிகின்ற சித்தர்களும், மகான்களும் இன்றளவும் நம் வீட்டையும், நாட்டையும் பாதுகாத்து வருகின்றனர்.
சித்தர்கள் என்பவர் யார்?
சித்தர்கள் மூன்று விதமான கட்டுப்பாடுகளை தன்னுள் கடைப்பிடித்து அதன்படி வாழ்ந்து வெற்றி கண்டு, சமத்துவத்தையும், சமநிலையையும் ஏற்படுத்திக் கொள்பவர்கள். அந்த மூன்று வகை கட்டுப்பாடுகள் என்பது, மூச்சை அடக்குதல் (பிராணயாமம்), விந்துவை வெளியிடாது அடக்கிக் காமத்தை வென்று எந்தவித ஆசைகளும் இல்லாத நிலையை அடைதல், இறுதியாக மனதை அடக்குதல் என்பவை ஆகும். சித்தர்களின் சிந்தை எப்போதும் சிவத்தோடு ஒன்றியே இருக்கும்.
மனிதர்களிடையே நிலவும் சாதி வேற்றுமைகளையும், ஏற்றத்தாழ்வுகளையும் கடுமையாக எதிர்த்து புரட்சி செய்வதர்கள் சித்தர்கள். அவர்கள் தனது சித்தத்தால் சிவனைக் காணும் வரை உடலை காக்கும் பொருட்டு திட ஆரோக்கியத்துடன் வைத்திருக்க காயகல்பம் உண்டவர்கள்.
ஏழைகளின் நோய்களை தீர்த்தவர்கள்
சித்தர்கள் வானசாஸ்திரம், மாந்தீரிகம், வைத்தியம், இரசவாதம், சூத்திர சாஸ்திரம், யோகம் போன்ற நுட்பமான விஷயங்களை ஆய்வு செய்து பல அரிய நூல்களை இவ்வுலகுக்கு வழங்கியவர்கள். ஏழைகளின் நோய்களை தீர்ப்பதற்காக எளிய மருந்துகளை கண்டறிந்து அவர்களது துன்பத்தைப் போக்கினர். சித்தர்களில் பலர் யோகப் பயிற்சியாலும், சிலர் ஞானயோகப் பயிற்சியாலும் சித்த ஒழுக்கம் கண்டு சிவநிலை அடைந்தவர்கள். தங்களது மனோசக்தியால் நினைத்ததை சாதித்தவர்கள். பிரபஞ்ச ரகசியங்களை அறிந்து அவற்றை வெளியுலகுக்கு அளித்தவர்கள்.
சித்தர்கள் தாங்கள் கண்ட அனுபவங்களை மக்கள் பயன்படுத்தும் விதமாக, மிக மிக எளிமையான நடையிலும், இலக்கண நடையிலும் பாமர மக்களும் புரிந்து கொள்ளும் விதத்தில் ஓலைச்சுவடிகளில் எழுதி வைத்துள்ளனர்.
இத்தகைய சிறப்பு பெற்ற சித்தர்கள் தங்கள் திருமேனியை மறைத்துக் கொண்ட (சமாதி) இடங்கள் எல்லாம் தெய்வீக சக்தி நிறைந்த திருக்கோயில்களாக கருதப்பட்டு போற்றப்படுகின்றன. மக்களும் சித்தர்களின் அருமை, பெருமைகளை உணர்ந்து அவர்களது திருவருள் வேண்டி அந்தந்த தலங்களுக்கு சென்று சித்தர்களை வழிபட்டு நன்மைகளைப் பெறுகின்றனர். அவ்வாறு அமையப்பெற்ற சித்தர் தலங்களில் முக்கியமாக கருதப்படும் 18 சித்தர்கள் முக்தியடைந்த தலங்களுக்கு சென்று வழிபாடுகள் செய்து வருகின்றனர். அதன்படி அந்த சித்தர் தலங்களுக்கு செல்ல இயலாதவர்கள் வீட்டிலிருந்தபடியே சித்தரை மனதில் நிறுத்தி அவருக்கான மூல மந்திரத்தை ஜெபித்து வணங்கி வந்தால் சிறந்த வாழ்வையும், அவர்களது திருவருளையும் நிச்சயம் பெறலாம்.
18 சித்தர்களின் மூல மந்திரம்
அகத்தியர் மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் க்ரீம் ஸ்ரீ அகத்திய சித்த சுவாமியே போற்றி
போகர் மூல மந்திரம்
ஓம் ஆம் ஊம் ஸ்ரீ மகாபோகர் சித்த சுவாமியே போற்றி
திருமூலர் மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் கெம் ஸ்ரீ மூலநாத சித்த சுவாமியே போற்றி
இடைக்காடர் மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் ருணம் ஸ்ரீ இடைக்காட்டு சித்த சுவாமியே போற்றி
கருவூரார் மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் வம் லம் ஸ்ரீ கருவூர் சித்த சுவாமியே போற்றி
கோரக்கர் மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் க்லம் ஸ்ரீ கோரக்க சித்த சுவாமியே போற்றி
குதம்பை சித்தர் மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் சம் ஸ்ரீ குதம்பைச் சித்த சுவாமியே போற்றி
கொங்கணர் மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் நசீம் ஸ்ரீ கொங்கண சித்த சுவாமியே போற்றி
வான்மீகர் மந்திரம்
ஓம் வான்மீகர் திருவடிகள் போற்றி
கமலமுனி மந்திரம்
ஓம் கமலமுனி திருவடிகள் போற்றி
மச்சமுனி மந்திரம்
ஓம் மச்சமுனி திருவடிகள் போற்றி
பதஞ்சலி மந்திரம்
ஓம் பதஞ்சலி முனிவர் திருவடிகள் போற்றி
இராமத்தேவர் மந்திரம்
ஓம் இராமத்தேவர் திருவடிகள் போற்றி
தன்வந்த்ரி மந்திரம்
ஓம் தன்வந்த்ரி திருவடிகள் போற்றி
பாம்பாட்டி சித்தர் மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் வசி ஸ்ரீ பாம்பாட்டி சித்த சுவாமியே போற்றி
சட்டைமுனி மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் சம் வம் சட்டைமுனி சுவாமியே போற்றி
சிவவாக்கியர் மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீ சிவவாக்கிய சித்த சுவாமியே போற்றி
சுந்தரானந்தர் மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் ஆம் ஊம் ஸ்ரீ சுந்தரானந்த சித்த சுவாமியே போற்றி

Leave a Reply