ஒவ்வொரு நாளும் காலை எழுந்தவுடன் அருமையான சுற்றுச் சூழல் இருப்பது நமது உடலுக்கும் மனதிற்கும் மிகவும் நல்லது. தூங்கி எழுந்தவுடன் நமது உடலிலும் மனதிலும் ஒரு புத்துணர்ச்சி இருக்கும். நாம் ஒவ்வொரு நாள் காலை எழும் போதும் அன்றைய நாள் முழுவதும் நல்ல நாளாக மகிழ்ச்சிகரமான நாளாக இருக்க வேண்டும் என்று விரும்புவோம். அவ்வாறு மங்களகரமான நாளாக அமைய நாம் சில பொருட்களை பார்த்தால் நன்றாக இருக்கும். அவை என்ன என்னவென்று இந்தப் பதிவில் காண்போம்.
காலையில் எழுந்தவுடன் இரண்டு கைகளையும் தேய்த்து உள்ளங்கையை பார்ப்பது நல்லது. நல்ல இயற்கை காட்சிகள் பூரண கும்பம், அருவிகள், நல்ல மலர்கள், மங்களகரமான பொருட்கள் இவைகளைப் பார்த்தால் அந்த நாள் முழுவதும் மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும்.
கோவில் மற்றும் கோவில் மணி
நமது வீட்டின் மாடி அல்லது ஜன்னல் வழியாகத் தெரியம் கோவிலைப் பார்ப்பது மிகவும் சிறப்பான ஒன்றாகும். அன்றைய தினம் முழுவதும் இறை ஆற்றல் நிரம்பி இருக்கும். மேலும் கோவில் மணி ஓசை கேட்டல் சிறந்தது. கோவில் மணி ஓசை கேட்டால் நீங்கள் நினைத்த காரியம் நடக்கும் என்பது ஐதீகம்.
கன்றுக் குட்டி மற்றும் பசுமாடு
பசுமாட்டின் தேகத்தில் முப்பத்து முக்கோடி தேவர்கள் வசிப்பதாக ஐதீகம். எனவே காலையில் எழுந்து பசுமாடு மற்றும் கன்று பார்ப்பது சிறப்பு. பசுவின் பின்புறத்தில் லட்சுமி தேவி வாசம் செய்வதாக ஐதீகம். எனவே பசுவின் பின் புறத்தை வணங்க வேண்டும். அவ்வாறு செய்தால் இலட்சுமி கடாட்சம் பொங்கும். மாடு உங்கள் இல்லம் தேடி வருவது உங்களுக்கு செல்வ வளத்தை அளிக்கும். அவ்வாறு வந்தால் அந்தப் பசுமாட்டிற்கு உணவு அளியுங்கள்.
சிலந்தி மேலே ஏறுவதை பார்ப்பது மங்களகரமானது
சிலந்தி மிகவும் சுறுசுறுப்பான ஒரு பூச்சி. நீங்கள் காலையில் எழுந்ததும் வீட்டிற்குள்ளேயோ அல்லது வெளியிலோ சிலந்தி ஏறுவதைக் கண்டால், அது உங்கள் முன்னேற்றத்தின் அடையாளம். இது போன்ற சிலந்தியை காலையில் பார்ப்பது சுபமாக கருதப்படுகிறது.
மங்களகரமான இசைக் கருவிகள் மற்றும் அவற்றின் நாதங்கள்
காலையில் எழுந்து இசைக் கருவிகளைக் காண்பது சிறப்பு. அவற்றின் நாதங்களை கேட்பது மிகவும் சிறப்பு. இவை மனதிற்கும் உடலுக்கும் புத்துணர்ச்சி அளிக்கும். உங்கள் சோம்பல் அனைத்தும் நீங்கி நீங்கள் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.
பறவைகளின் குரல்
காலையில் எழுந்தவுடன் புறா, கிளி அல்லது பிற பறவைகள் சிலிர்த்தால், அது நல்ல அறிகுறியாகக் கருதப்படுகிறது. உங்களுக்கு நல்ல நாட்கள் தொடங்கப் போகிறது என்று அர்த்தம். உங்கள் வீட்டுக் கடவுள் மகிழ்ச்சியடைந்து பறவைகள் வடிவில் தனது தூதர்களை அனுப்புகிறார் என்று அர்த்தம். பறவைகளுக்கான உணவு தானியங்கள் மற்றும் தண்ணீரை வீட்டில் வைக்க மறக்காதீர்கள்.
சிவப்பு நிற ஆடை அணிந்த ஒரு பெண்
நீங்கள் காலையில் வேலைக்குச் செல்லும்போது சிவப்பு நிற உடையணிந்த ஒரு பெண்ணைப் பார்ப்பது உங்களுக்கு அதிர்ஷ்டத்தைத் தருவதாகக் கருதப்படுகிறது. குறிப்பாக திருமணமான பெண்ணைக் கண்டால் அது மிகவும் சுபம்.
குடும்ப உறுப்பினர்களின் முகம்
கணவன் மனைவி முகத்தில் மற்றும் மனைவி கணவன் முகத்தில் விழிக்கலாம். பெற்றோர் குழந்தைகள் முகத்தில் விழிக்கலாம். பெற்றோரின் முகத்தில் குழந்தைகள் விழிக்கலாம்.
Leave a Reply