திருமணத்தடை நீக்கும் வாராஹி வழிபாடு | Kettadhai kodukkum Varahi Amman Vazhipadu Tamil

வல்லமை என்ற சொல்லின் வடிவம் தான் வாராஹி, சொல் வன்மை செயல் வன்மை இரண்டுக்குமே அதிகாரி இவள். லலிதா திரிபுரசுந்தரி யின் படைத் தலைவியாக விளங்குபவள். அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியாம் ஆதிபராசக்தியின் தலைமை அதிகாரியாக அருள்பவளே வாராஹி ,சப்த மாதர்களில் ஒருத்தியான ஸ்ரீ வாராஹி பராசக்தியின் படைத் தளபதியான பண்டாசுரனை அழித்தவள். சப்த கன்னியர் என்னும் பிராம்மி, மகேஸ்வரி, வைஷ்ணவி, கௌமாரி, வராகி, இந்திராணி மற்றும் சாமுண்டி. இவர்களில் பெரிதும் மாறுப்பட்டவள் இந்த வராஹி மனித உடலும், பன்றி முகமும் கொண்டவள். எட்டு கரங்களையும் உடையவர். பின் இரு கரங்களில் தண்டத்தினையும், கலப்பையையும் கொண்டவராவார். இவர் கருப்பு நிற ஆடையுடுத்தி எருமை மீது அமர்ந்திருக்கிறார். இந்த தேவிக்கு பஞ்சமீ, தண்டநாதா, மகாசேனா, வார்த்தாளி, ஆக்ஞா சக்ரேஸ்வரி, அரிக்னி என்ற பெயர்களும் உண்டு.
வராஹி தோற்றத்தின் புராண விளக்கங்கள்
மார்கண்டேயபுராணத்தின் தேவி மகாத்மியத்தின்படி வாராஹி சப்த கன்னியர்கள் போன்ற பெண் கடவுளர்களின் தோற்றத்துடன் சக்தியின் வடிவமாக, கடவுளர்களின் உடல்களிலிருந்து வந்ததாகக் கருதப்படுகிறது. வராகி வராகாவிலிருந்து உருவாக்கப்பட்டது என்று வேதங்கள் கூறுகின்றன. மகா புராணங்களின் பதினான்காம் புராணமாகிய வாமன புராணத்தின்படி தெய்வீக தாய் எனப் போற்றப்படும், சண்டிகாவின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து சக்திகள் தோன்றுகின்றன என்று கூறப்பட்டுள்ளது; இந்த சக்திகளில் ஒருவரான வராகி, சண்டிகாவின் முதுகில் இருந்து தோன்றியதாக கருதப்படுகிறது. தேவி பாகவதம் துர்க்கை அன்னையால் உருவாக்கப்பட்ட தெய்வம் வாராஹி என்று கூறுகிறது. இவை யாவும் தீமையை அழிக்க சக்தி எடுத்த வடிவங்கள் ஆகும். விஷ்ணு புராணத்தின்படி வைஷ்ணவியின் பின்புறத்தில் இருந்து வாராஹி அன்னை தோன்றியதாக கூறப்படுகிறது. மச்ச புராணம் வாராஹி, அந்தகாசுரனை அழிக்க சிவ பெருமானால் உருவாக்கப்பட்ட அன்னை என்று கூறுகிறது.
வாராஹி வழிபாடு:
அம்பாள் பல உருவங்களை எடுத்து இருக்கிறாள். அம்பாளின் வழிபாடுகளில் ஒன்று வாராஹி வழிபாடு ஆகும். இவள் பன்றி முகமும் மனித உடலும் கொண்டவள்.தேவி மகாதியத்தில் வராஹி வாராஹ அவதாரத்தில் இருந்து தோன்றியவள் என்று கூறப்படுகிறது. இவள் கருணை உள்ளம் கொண்டவள்.வாராஹிக்கு விசேஷமான வழிபாடு சக்தி வழிபாடு. நினைத்தவுடன் ஓடி வந்து அருள் புரியும் வாராஹி அம்மனை வழிபடுவதன் மூலம் அவளது அருளைப் பெறலாம். ஒருவர் தமது வாழ்வில் எல்லா அம்சங்களிலும் வெற்றி பெற வாராஹி அம்மனை வழிபட வேண்டும். தன்னை நம்பும் பக்தர்களுக்கு செய்வினை அண்டாது காப்பவள் இவளே.
திருமணத் தடை நீக்கும் வாராஹி வழிபாடு
திருமணத்தடை, வியாபார விருத்தி, குடும்ப ஒற்றுமைக்கு, வாராஹியை வழிபடுவோருக்கு காரியம் சித்தியாகிறது. காரியசித்திக்கு ஒரு வழிபாட்டு முறை உள்ளது. 108 விரலி மஞ்சளை மாலையாகக் கோர்த்து வாராஹிக்கு சார்த்தி வழி பட வேண்டும். வாராஹி ஆலயத்தில் இது செய்வது மிகச் சிறப்பு வாய்ந்தது ஆகும். பொதுவாக இந்த வழிபாடு திருமணத் தடைகளை நீக்குகிறது. ஆலயம் சென்று வழிபட இயலாதவர்கள் இந்த வழிபாட்டை வீட்டிலேயே செய்யலாம். வாராஹி படம் அல்லது விக்கிரகம் வைத்து விளக்கேற்றி இந்த மாலையை அன்னை வாராஹிக்கு சாற்றி வழிபடலாம்.
பௌர்ணமி வழிபாடு
பொதுவாக இந்த வழிபாட்டை ஒரு நல்ல நாளில் மேற்கொள்ளலாம். குறிப்பாக பௌர்ணமி நாளில் வாராஹி அம்மனை வழிபடுவதன் மூலம் திருமணத்தடைகள் அகலும். உங்கள் மனதில் நினைத்த காரியங்கள் உடனே நிறைவேறும். மேலும் வியாபபரம் குடும்ப ஒற்றுமை போன்றவற்றில் காணப்படும். உங்களின் தீர்க்க முடியாத பிரச்சனைகளை கூட எளிதில் தீர வாராஹி அம்மனை இந்த முறையில் வழிபாட்டு வாருங்கள். இப்படி வழிபாடு செய்தால் அடுத்த பௌர்ணமி அன்று இந்த பூஜையை செய்வதற்கு முன்பாகவே உங்கள் வேண்டுதலை நிறைவேற்றித் தரக் கூடிய ஆற்றல் உடையவள் இந்த வாராஹி அம்மன்.
