வாராஹி வரலாறு மற்றும் மூல மந்திரம்
வல்லமை என்ற சொலின் வடிவம் தான் வாராஹி சொல் வல்லமை செயல் வல்லமை இரண்டுக்குமே அதிகாரி இவள். அச்வரூபா, மகாவாராஹி லகு வாராஹி மந்திர வாராஹி, வார்த்தூளி என்று பல வடிவங்கள். நான்கு கரம் எட்டு கரம் பத்து கரம் என்று பலப்பல கோலங்கள் கொண்டவள். .
சப்த மாதர்களில் நடுநாயகமாகத் திகழ்கிறாள் வாராஹி. படைத் தளபதியாக திகழ்கிறாள் தேவி என்கிறது வாராஹி புராணம். பராசக்தியின் படைத் தளபதியாகி பண்டாசுரனை அழித்தவள்.இந்த தேவிக்கு பஞ்சமீ தண்டநாதா, சங்கேதா, சமயேச்வரி, சமய சங்கீதா, வாராஹி, சிவா, போத்ரிணி, வார்த்தாளி, மகாசேனா, அரிக்னி, ஆக்ஞா சக்ரேஸ்வரி ஆகிய பெயர்களும் உண்டு. இவளது திருமாம் ஜெபித்து வழிபட்டால் எந்த காரியத்திலும் வெற்றி கிட்டும். ஸ்ரீ நகரம் எனும் ஸ்ரீ சக்ர தேவதைகளுள் மிகவும் மேன்மையானவர். வேண்டுவோருக்கு வேண்டியவற்றை விரைவில் அருளுபவள். நமது உடலில் இருக்கும் ஆறு ஆதார சக்கரத்தில் நெற்றியில் விளங்கும் ஆக்ஞா சக்கரத்திற்கு உரிய தேவி.

வாராஹி அம்மன் தோற்றம்
வராகமூர்த்தியின் சக்தி வாராஹி என்றும் கருதப்படுகிறாள். பன்றியின் முகத்தினையும் பெரிய வயிற்றினையும் கொண்டிருப்பார். இவருக்கு ஆறு கரங்கள் காணப்படும். வலது கரங்களில் ஒன்று வரத முத்திரையிலிருக்கும். மற்றையனவற்றில் தண்டம், வாள் என்பன இடம் பெற்றிருக்கும். இடது கரங்களில் ஒன்று அபய முத்திரையினைக் காட்ட மற்றையன கேடயம், பாத்திரம் என்பனவற்றினை ஏந்தியவாறு காட்சி தருகிறாள் வாராஹி அன்னை.
ஸ்ரீ தத்துவநிதி என்னும் நூல் தண்டநாத வாராஹி, சுவப்ன வாராஹி, சுத்த வாராஹி என்னும் மூன்று வகையான வாராஹியின் உருவ அமைப்பு பற்றி விவரிக்கின்றது.
தண்டநாத வாராஹி தங்க நிறமானவர். பன்றி முகத்தை கொண்ட அன்னை. இவரது கரங்களில் சங்கு, சக்கரம், கலப்பை, உலக்கை, பாசம், அங்குசம், தண்டம் என்பன காணப்படும். இரு கரங்கள் அபய, வரத முத்திரையிலிருக்கும்.
சுவப்ன வாராஹி மேக நிறமானவர். மூன்று கண்களைக் கொண்டிருப்பார். பிறைச்சந்திரனைச் சூடியிருப்பார். வாள், கேடயம், பாசம், அரிவாள் என்பன கரங்களில் இடம்பெற்றிருக்கும். இரு கரங்கள் அபய, வரத முத்திரையிலிருக்கும்.
சுத்த வாராஹி நீல நிறமானவர். பன்றியின் முகத்தினை ஒத்த முகத்தினைக் கொண்டவர். வெண்மையான பற்கள் வெளியே நீட்டப்பட்டவாறிருக்கும். தலையில் பிறைச்சந்திரனைச் சூடியிருப்பார். சூலம், கபாலம், உலக்கை, நாகம் என்பன கரங்களிற் காணப்படும்.
வராஹி அம்மன் வழிபாடு
வாராஹி அம்மன் பெரும்பாலும் தாந்திரீக வழிபாட்டு முறையில் வழிபடப்படுகிறாள். இதனால் இவளை பெரும்பாலும் இரவில் வழிபடுவார்கள். பஞ்சமி திதி இவளுக்கு மிகவும் உகந்த நாள் ஆகும். எதிரிகளின் தொல்லை, திருஷ்டி தோஷங்கள் நீங்க வாராஹி அம்மனை வழிபடுவார்கள். உண்மையான பக்தியுடன் வேண்டினால் துரிதமாக வந்து தனது பக்தர்களை காத்து அருள் பாலிக்கும் தெய்வமாகவும் இவள் விளங்குகிறாள்.
திருஷ்டி தோஷங்கள் விலகவும் எதிரிகளின் தொல்லை நீங்குவதற்கு வராஹி அம்மனின் மூல மந்திரத்தை 48 நாட்கள் சொல்லி வழிபாடு செய்து வந்தால் வராகி அம்மனுடைய அருள் உங்களுக்கு கிடைக்கும்.
வாராஹி மூல மந்திரம் :
ஓம் ஐம் க்லெளம் ஐம்
நமோ பகவதீ வார்த் தாளி . வார்த்தளி
வாராஹி வாராஹமுகி வராஹமுகி
அந்தே அந்தினி நம :
ருத்தே ருந்தினி நம :
ஜம்பே ஜம்பினி நம :
மோஹே மோஹினி நம :
ஸ்தம்பே ஸ்தம்பினி நம:
ஸர்வ துஷ்ட ப்ரதுஷ்டானாம் ஸ்ர்வே ஷாம்
ஸர்வ வாக் சித்த சதுர்முக கதி
ஜிஹ்வாஸ்தம் பனம், குரு குரு
சீக்ரம் வச்யம் ஐம்க்லெளம்
ஐம் ட:ட:ட:ட:ஹும் அஸ்த்ராயபட்
இதி ஸ்ரீ வாராஹி மூல மந்திரம்











