குழந்தை இல்லாதவர்கள் செய்ய வேண்டிய எளிய பரிகாரம் என்ன? பிள்ளை வரம் தரும் குல தெய்வ வழிபாடு

குழல் இனிது யாழ் இனிது என்பர் கொஞ்சும் மழலை சொல் கேளாதார் என்ற வரிகள் மூலம் குழந்தைகளின் மகத்துவம் நமக்குப் புரியும். திருமணம் ஆன பின் ஒவ்வொருவரும் அடுத்து எதிர்பார்ப்பது குழந்தை தான். திருமண வாழ்க்கை இனிதாக அமைய அவர்களுக்கு பிறக்கும் குழந்தை ஒரு காரணமாக அமைகிறது எனலாம். அப்பொழுது தான் அவர்கள வாழ்க்கை நிறைவாக அமைகிறது. ஒரு சிலருக்கு திருமணம் ஆனவுடன் குழந்தை பிறந்து விடுகிறது. ஆனால் இன்றைய நவீன உலகில் பலருக்கு குழந்தை வரம் கிடைப்பது குதிரைக் கொம்பாக இருக்கிறது. பல மருத்துவர்களை சந்திக்க வேண்டியிருக்கிறது. பல சிகிச்சை எடுக்க வேண்டி இருக்கிறது. இதற்கெல்லாம காரணம் இன்றைய உணவு முறை தான் என்று நிச்சயமாகக் கூறலாம்.
விதியை மதியால் வெல்லலாம் என்பது போல தெய்வத்தின் அருள் இருந்தால் இந்த பிரச்சினைக்கும் தீர்வு காணலாம். தெய்வத்தின் அருள் கிட்ட நமது மனம் ஆன்மீக பாதையிலும் செல்ல வேண்டியது அவசியம் ஆகும். எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு இருப்பது போல குழந்தை இல்லதவர்களுக்கும் ஒரு சில பரிகாரம் தீர்வாக அமைகிறது. அதனை செய்வதன் மூலம் அவர்களுக்கு குழந்தைப் பேறு கிடைகிறது.
கடவுள் அளித்த வரங்களிலேயே மிகவும் முக்கியமானது குழந்தை வரம் ஆகும், திருமணம் ஆகி பல வருடங்கள் ஆகியும் அந்த பாக்கியம் கிட்டாதவர்களுக்கு குழந்தைப் பேறு அமைய இந்த பரிகாரம் உதவும்.
குல தெய்வ அருளால் வாழையடி வாழை என உங்கள் குடும்பம் தழைக்கக் இந்த பரிகாரத்தை மேற்கொள்ளுங்கள். இந்த பரிகாரத்தை உங்கள் குல தெய்வத்திற்கு உகந்த நாளில் மேற்கொள்ளுங்கள். அது வளர்பிறையாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
ஓரு செப்புத் தட்டில் நுனி மற்றும் காம்பு உடையாத ஒரு வெற்றிலையை வைத்து அதன் மீது மஞ்சள் சிறிது போட்டு அதன் மீது ஒரு அகல் விளக்கை வையுங்கள். அகல் விளக்கில் நெய் ஊற்றி வாழைத்தண்டு திரியை வைத்து தீபம் ஏற்றுங்கள். வேண்டுதலை குலதெய்வத்திடம் கூறுங்கள். இவ்வாறு தொடர்ந்து ஒரு மண்டலம் எனப்படும் 48 நாட்கள் செய்து வாருங்கள். தீபம் கிழக்கு முகமாக இருக்க வேண்டும். வெற்றிலையின் காம்பு வடக்குப் புறமாகவும் நுனி தெற்குப் புறமாகவும் இருக்க வேண்டும். தினமும் வைக்கும் மஞ்சளை நீங்கள் குளிக்கும் போது பயன்படுத்திக் கொள்ளுங்கள். மஞ்சளை தேய்த்துக் குளிக்கும் போது புத்திரகாரகனாகிய குருவின் அருள் உங்களுக்குக் கூடுதலாகக் கிட்டும். நிச்சயம் உங்கள் வேண்டுதல் நடக்கும். உங்களுக்கு குழந்தைப் பேறு உண்டாகும். நம்பிக்கையுடன் மேற்கொள்ளுங்கள்.
6 தேய்பிறை அஷ்டமி அன்று கால பைரவருக்கு சஹஸ்ரநாம அர்ச்சனை செய்ய வேண்டும். இந்த வழிபாட்டை இருவரும் சேர்ந்து செய்வதன் மூலம் கண்டிப்பாக குழந்தைப் பேறு கிட்டும்.
வியாழக்கிழமை அன்று விரதம் இருந்து தட்சிணாமூர்த்திக்கு நெய் விளக்கு போடுத்வன் மூலம்
அம்மனுக்கு வளையல் சாற்றி பெரு விசேஷமாக கொண்டாடப்படுவது உண்டு. இதனால் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும் என்றும், கர்ப்பிணி பெண்களுக்கு சுகப்பிரசவம் ஆகும் என்கிற நம்பிக்கையும் உண்டு. அது போல அம்மனுக்கு நீங்கள் பச்சை நிற அல்லது சிகப்பு நிற வளையலை வெள்ளிக்கிழமையில் சாற்றி வேண்டிக் கொள்ளலாம். இதனால் குழந்தை வரும் சீக்கிரமே கிடைக்கும் என்பது நியதி! அது மட்டுமல்லாமல் வெள்ளிக் கிழமையில் நீங்களும் சிகப்பு நிற அல்லது பச்சை நிற வளையலை அணிந்து கொண்டு, வெள்ளி தோறும் நெய் விளக்கு ஏற்றி வந்தால் அம்மனின் அருளை பெறலாம். அன்றைய நாளில் ஒரு வேளை விரதமிருந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து, மஞ்சள் நிற புடவை கட்டி, சர்க்கரை பொங்கல் நைவேத்யம் படைத்து கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு படையலை தானம் செய்து வந்தால் தீராத பிரச்சனை எல்லாம் ஒரு முடிவுக்கு வரும்.
கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் நீங்கள் வீட்டிலேயே எளிமையாக இதை செய்யலாம். காலையில் எழுந்ததும் குளித்து முடித்துவிட்டு முதல் வேலையாக அடுப்பில் பாலை தான் காய்ச்ச வேண்டும். காய்ச்சிய பாலை ஒரு டம்ளர் கொண்டு போய் பூஜை அறையில் வையுங்கள். அம்மனுக்கு பால் வைத்து மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். எத்தகைய பாவங்களையும், தோஷங்களையும் நிவர்த்தி பெற செய்து குழந்தை வரம் கிடைக்க வேண்டிக் கொள்ளுங்கள். சிறிது நேரத்திற்கு பிறகு அந்த பாலை நீங்கள் பருகிவிடலாம். சர்க்கரை மற்றும் தண்ணீர் எதுவும் சேர்க்காத பாலாக இருக்க வேண்டும். முடிந்த வரை பசும்பாலாக இருப்பது நன்மை தரும். இதையும் படிக்கலாமே: பணத்தைத் தேடி நீங்கள் ஓடாமல் பணம் உங்களைத் தேடி ஓடி வர இந்த ரகசிய ஐந்து தாந்திரீக முறைகளை தெரிந்து கொள்ளுங்கள். இப்படி ஒவ்வொரு வாரமும் நீங்கள் வெள்ளிக்கிழமையில் மட்டும் பால் வைத்து வழிபட்டு, பாலாபிஷேகம் செய்து வேண்டிக் கொண்டால் அம்மன் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. மேலும் அம்மனின் மனம் குளிர வெள்ளிக்கிழமை தோறும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உங்களால் முடிந்த உதவிகளையும் நீங்கள் செய்து வர வேண்டும். தானத்தை விட சிறந்த பரிகாரம் இந்த உலகில் எதுவும் இருக்க முடியாது. நம்மால் இயன்ற உதவிகளை இயலாதவர்களுக்கு செய்யும் பொழுது கிடைக்கும் புண்ணியத்தை விட உயர்ந்த புண்ணியம் எதுவும் இல்லை எனவே வெள்ளிக்கிழமையில் நீங்கள் செய்யும் தானம் மிகவும் உயர்ந்த பலன்களை கொடுக்கக் கூடியது. செய்து பாருங்கள் பலன் நிச்சயம் இருக்கும்.
