AstroVed Menu
AstroVed
search
search

பணத்தை ஈர்க்க எளிமையான பத்து வழிகள்

dateJuly 10, 2023

மூடியுடன் கூடிய ஒரு சிறிய செம்பு கிண்ணம் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் பச்சை பாசிப்பருப்பை நிரப்புங்கள். பூஜை அறையில் இறைவன் முன் வைத்து உங்கள் பிரார்த்தனைகளை மேற்கொள்ளுங்கள். பிறகு அதனை ஓடும் நீரோடையில் விட்டு விடுங்கள்.  

உங்கள் வீட்டில் இருக்கும் அரிசி டப்பாவில்  ஏதாவது ஒரு ரூபாய் நோட்டை ஒரு சுத்தமான சிவப்பு நிறத் துணியில் வைத்து நான்கு பக்கமும் மடித்து வெளியில் தெரியாத வண்ணம் வையுங்கள். இது பணத்தை ஈர்க்கும் சக்தி வாய்ந்தது.

உங்கள் வலது கையில் வெள்ளியால் ஆன மோதிரத்தை அணியுங்கள்.

கோயில் மடப்பள்ளிக்கு உப்பு சர்க்கரை கடலைபருப்பு சுத்தமான நெய் தானம் அளியுங்கள்.

பௌர்ணமி அன்று தொடங்கி ஆல மரம் அடியில் வேருக்கு உங்களால் முடிந்த அளவு சுத்தமான காய்ச்சாத பாலை தொடர்ந்து ஏழு நாட்கள் ஊற்றி வர உங்கள் கையில் பணம் தங்கும்.

ஒரு சின்ன கிண்ணத்தில் அரிசியை எடுத்துக் கொள்ளுங்கள்.  அதில் தினமும் சிறிது நாணயத்தை வையுங்கள். மாதத்திற்கு ஒரு முறை இதில் இருக்கும் நாணயத்தை எடுத்து விட்டு அரிசியை பறவைகளுக்கு போட்டு விடுங்கள். மறுபடியும் வேறு அரிசியை மாற்றி இது போல வைத்து விடுங்கள்.

உங்கள் வீட்டு அரிசி டப்பாவில் ஐந்து துளசி மற்றும் இரண்டு குங்குமப் பூவை போட்டு வையுங்கள். இது பணத்தை ஈர்க்கும் சக்தியைக் கொண்டது.

வீட்டில் தென்கிழக்கு மூலையில் ஒரு சின்ன கண்ணாடி அல்லது மண்பாண்டம் வைத்து அதில் தண்ணீர் ஊற்றி வைத்து சிறிதளவு கொத்தமல்லி தழைகளை மேலே போட்டு வைக்க வேண்டும். இது பணத்தை ஈர்த்துக் கொடுக்கும் தன்மை வாய்ந்தது. தினந்தோறும் தண்ணீரையும் கொத்தமல்லியையும் மாற்றி விட வேண்டும்.

தினமும் நீங்கள் குளிக்கும் தண்ணீரில் சிறிதளவு தயிர் சேர்த்து குளித்துவரவும். இதுவும் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கொண்டது.

நீங்கள் தினமும் வீட்டில் இருந்து வெளியே கிளம்பும் போது குங்குமத்தை கொஞ்சம் பேஸ்ட் போல குழைத்து அதில் ஒரு குச்சியை வைத்து இடது கையால் ரூ என்ற வார்த்தையை போட வேண்டும் அல்லது ஆங்கிலத்தில் ருபீஸ் என எழுத வேண்டும். இதை பௌர்ணமி நாளில் தொடங்கி அமாவாசை வரை செய்ய வேண்டு.ம் அதாவது 15 நாட்கள் தொடர்ந்து செய்து வர வேண்டும்.


banner

Leave a Reply