Mahalaya Paksha is the Ultimate Powertime to invoke Ancestral Blessings for Abundance, Material Comforts, Progress & Success Join Now
AstroVed Menu
AstroVed
search
search

Tamil New Year Rasi Palan 2025 | Tamil Puthandu Rasi Palan 2025

March 27, 2025 | Total Views : 1,797
Zoom In Zoom Out Print

மேஷம் தமிழ் புத்தாண்டு பலன்கள் 2025 | Mesham Tamil Puthandu Rasi Palan 2025

இந்த தமிழ் வருடம் நினைத்தது நிறைவேறும். சந்தோசம் கிட்டும். ஏற்றமான வாழ்விற்கான வழிகள் கிட்டும். குடும்பத்திற்குள் இருந்து வந்த சங்கடங்கள் விலகும். கணவன் மனைவி உறவு மேம்படும் பிணக்குகள்  அகலும். சந்தோஷமான வாழ்க்கை இருக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்கள்  உங்களுக்கு தரும் ஆலோசனை கேட்டு பண முதலீடு செய்யாதீர்கள். குடும்ப வருமானத்தைப் பொறுத்த வரையில் வருமானம் குறையும். பண நெருக்கடி இருக்கலாம். சேமிப்பு பழக்கம் இருந்தால் இந்த வருடம் சிறப்பாக இருக்கும். நோய் நொடிகள், வம்பு வழக்குகள் மற்றும்  கோர்ட் விவகாரங்களில் இருந்து வெளி வருவீர்கள். வேலையில்  இருந்து வரும் பணம் தாமதம் ஆகும். சொத்துக்கள் விஷயத்தில்  எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆன்மீகம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் லாபம் கிட்டும். உங்கள் விருப்பங்கள் பூர்த்தி ஆகும். விசுவாசமான நண்பர்கள் கிடைப்பார்கள். வீட்டில் இருக்கும் பெரியவர்களின் ஆலோசனை கேட்பது சிறப்பு. குழந்தைகள் புத்திசாலியாகச் செயல்படுவார்கள். ஒரு சிலருக்கு வெளி நாடு சென்று படிக்கும் யோகம் கிட்டும். போட்டி பந்தயங்களில் வெற்றி பெற கடின உழைப்பு தேவை. 

Tamil Puthandu Rasi Palan 2025

ரிஷபம் தமிழ் புத்தாண்டு பலன்கள் 2025 | Rishabam Tamil Puthandu Rasi Palan 2025

தொழிலில் மேன்மை மற்றும் வருமானம் வரலாம். சோம்பலைத் தவிர்க்க வேண்டும். உங்கள் சுய முயற்சிகளை நீங்கள் மேற்கொள்ள வேண்டும். தடைகள் நிவர்த்தி ஆகும். நல்ல முன்னேற்றம் கிட்டும். குடும்பம் மற்றும் குடும்ப வருமானம் குறித்து கவனமாக இருக்க வேண்டும். வேலையில் சிறந்து விளங்குவீர்கள். ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு கிட்டும். வாழ்க்கையில் ஏற்றம் உண்டு. என்றாலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தடைகளைத் தாண்டி செயல் பட வேண்டியிருக்கும். உங்கள் ஆசைகளை அதிகமாக வளர்த்துக் கொள்ளக் கூடாது. வீடு ,வாகன பராமரிப்பு செலவுகள் உண்டு. குழந்தைச் செல்வம் வேண்டி காத்திருப்பவர்கள் மருத்துவ ஆலோசனை மேற்கொள்வதை  சிறிது காலம் தள்ளிப் போட வேண்டும். மாணவர்கள்/ குழந்தைகள் சிறப்பாகக் கல்வி பயில்வார்கள் என்றாலும் எதையும் தள்ளிப் போடுவார்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன் மனைவி உறவில் ஒரு சில சண்டைகள் வரலாம். எதையும் ஒத்திப் போடாமல் செய்வதன் மூலம் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண இயலும். 

மிதுனம் தமிழ் புத்தாண்டு பலன்கள் 2025 | Mithunam Tamil Puthandu Rasi Palan 2025

சிலருக்கு வெளிநாடு அடிக்கடி செல்ல வேண்டி வரும். அதனால் உறக்கம் கெடும். கணவன் மனைவி இடையே சிறு பிரிவுகள் இருக்கும். வம்பு வழக்குகள் தீர்வுக்கு வரும். குழந்தைகளால் லாபம் கிட்டும். முதலீடுகளின் மூலம் நஷ்டம் காண்பீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணை மற்றும் தொழில் கூட்டாளிகள் முதலீடு விஷயத்தில் ஏமாறலாம். அவர்களுக்கு அதைப் பற்றி நீங்கள் தெரிவிக்க வேண்டும். வெளியில் இருந்து வரக் கூடிய பணம் உங்களை வந்து அடையும். தொழிலில்  சிறு சிறு தடைகள் இருக்கலாம். வருமானம் திருப்திகரமாக இருக்கும். பங்கு சந்தை மூலம் லாபங்கள் கிட்டும். குழந்தைகளால் உபரி வருமானம் வரும். வேலையின் மூலம் வரும் வருமானம் சிறிது தடைபடும். அதில் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கணவன் மனைவி இடையே நெருக்கம் ஏற்படும். கர்வத்தை விட்டொழித்தால் வெற்றி காண்பீர்கள். மாணவர்கள் குறிப்பாக முதுகலை பயிலும் மாணவர்கள் சிறப்பாகக்  கல்வி பயில்வார்கள். சக மாணவர்களிடையே பெயர், புகழ்,அந்தஸ்து உயரும். உங்கள் எண்ணங்கள் வெற்றி பெறும். குடும்பத்தில் திருமண நிகழ்வுகள் நிகழும். வாழ்க்கையில் மாற்றம் ஏற்படக் கூடிய வருடம். 

கடகம் தமிழ் புத்தாண்டு பலன்கள் 2025 | Kadagam Tamil Puthandu Rasi Palan 2025

ஆசைகள் காரணமாக பலரை பகைத்துக் கொள்ள நேரும். அதுவே கருத்து வேறுபாடுகளுக்கும் காரணமாக அமையும். குடும்ப வருமானம் தாராளமாக வரும். மே மாதம் முதல் சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் இடம் பொருள் ஏவல் அறிந்து பேச வேண்டும். அவசியமான நேரத்தில் பேசாமலும் இருக்கக் கூடாது. சமயோசித புத்தி  மூலம் ஜெயிக்கலாம்.  யாரையும்,   முக்கியமாக கூட்டாளிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். வீண் வம்பு விவாதங்களைத் தவிர்க்க வேண்டும். மறைமுக பிரச்சினைகளை சமாளிக்க வேண்டியிருக்கும். நீங்கள் பணம். சொத்து போன்ற  சுகத்தை தேடி செல்வீர்கள். அதிகமாக ஆசைப்படாதீர்கள். கடமையில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். எண்ணங்களில் எச்சரிக்கையாக இருந்தால் வெற்றி காணலாம். சேவைத் தொழில் மூலம் வருமானம் தடைபட்டு வரும். சரியான நேரத்தில் பணம் வராது என்பதால் சேமிப்பு பணத்தை பயன்படுத்த வேண்டியிருக்கும்.  போட்டி பந்தயங்களில் வெற்றி கிட்டும். தொழிலில் மேன்மை இருக்கும். உங்கள் கீழ் பணிபுரிபவர்கள் ஒத்துழைப்பாகவும் ஆதரவாகவும் இருப்பார்கள். நீங்கள் இழந்த பணம் மீண்டும் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. உங்கள் தைரியம் குறைவாக இருக்கும். குழந்தைப் பேறு விரும்புபவர்கள் மருத்துவ சிகிச்சை மேற்கொள்வது நல்லது. குழந்தைகள் சிறப்பாகக்  கல்வி பயில்வார்கள்.  

சிம்மம் தமிழ் புத்தாண்டு பலன்கள் 2025  | Simmam Tamil Puthandu Rasi Palan 2025

வீண் மன பயம் இருக்கலாம். நீங்கள் சில சவால்களை சமாளிக்க வேண்டியிருக்கும். எந்த காரியத்தையும் இதயப் பூர்வமாக செய்யுங்கள். குரு பகவான் நல்ல ஆற்றல் மற்றும் அறிவை அள்ளி வழங்குவார். குழந்தைகள் மூலமாக உங்களுக்கு நல்லது நடக்கும். பங்கு சந்தை, வெளியூர், வெளிநாட்டு விஷயங்களில் நல்லது நடக்கும் என்றாலும்  நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் எதிராளிகள், உங்களிடம் சாமார்த்தியமாக நடந்து கொள்வார்கள். அவர்களிடம் எச்சரிக்கையாக செயல்படுங்கள். உங்களை நீங்கள் வெளிக்காட்டிக் கொள்வீர்கள். உங்கள் எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கும். என்றாலும் பகுத்து ஆய்வு செய்து நடந்து கொள்வீர்கள். குடும்பத்தின் வருமானம் குறைவாக இருக்கும். சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அதன் மூலம் யோகமும் கிட்டலாம். உங்கள் வேலை மற்றும் தொழிலில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த காலக்கட்டத்தில் குழந்தை பாக்கியம் கிட்டும். இது மாற்றங்களைத் தரும் வருடமாக இருக்கும். வாழ்வில் வசந்தம் வரும் வருடமாக இருக்கும். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும் என்றாலும் எதிர்பார்ப்புகள் அதிகம் இருக்கும். மாணவர்கள் கவனமாகப் படிக்க வேண்டும். அடுத்தவர்கள் பொருள் மீது உங்களுக்கு ஆசைகள் வரலாம். அதனை தவிர்க்க வேண்டும்.
 
கன்னி தமிழ் புத்தாண்டு பலன்கள் 2025 | Kanni Tamil Puthandu Rasi Palan 2025

திருமணத்திற்குக் காத்திருப்பவர்களுக்கு நல்ல வரன் அமையும். சந்தோஷமான சில விஷயங்கள் நடக்கலாம். ஆனால் நீங்கள் அதனை தள்ளிப் போடுவீர்கள். உங்கள் எதிர்ப்பார்ப்புகள் அதிகமாக இருக்கும். உங்களுக்கு பகலில் தூக்கம் வரலாம். இரவில் வராமல் போகலாம். அஜாக்கிரதை காரணமாக சில இழப்புகளை சந்திப்பீர்கள். தந்தையாரின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஒரு சிலருக்கு  வீண் செலவு வரலாம். வண்டி வாகனம் பழுது குறித்த செலவுகள் வரலாம். இது போல சில பிரச்சினைகளை சந்திக்க நேரும். பயத்தை விட்டு விடுங்கள். எச்சரிக்கையாக இருங்கள். அசையும் அசையாச் சொத்துக்கள் வாங்கும்  எண்ணம் வரலாம்.  தங்கம் போன்ற மஞ்சள் நிற  பொருட்களை வாங்குவீர்கள். குடும்பம் மற்றும் சொத்து சார்ந்த விஷயங்களில் வம்பு வழக்குகள் வரும். வீண் வாக்குவாதங்கள் வரலாம். என்றாலும் உங்கள் சமயோசித புத்தி மூலம் அதில் இருந்து மீள்வீர்கள். மாணவர்கள் சிரத்தையுடன் படிக்க வேண்டும். பள்ளி இறுதி மாணவர்கள் அதிக மதிப்பெண்களைப் பெறலாம்.

துலாம் தமிழ் புத்தாண்டு பலன்கள் 2025 | Thulam Tamil Puthandu Rasi Palan 2025

இது வரை நீங்கள் சந்தித்து வந்த பிரச்சினைகள் நீங்கும். நீங்கள் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.  வருமானம் பெருகும். அலைச்சல் மூலம் ஆதாயம் உண்டு.  ஆனால் தூக்கம் கெடும். உங்கள் தகவல் தொடர்பு  திறன் மேம்படும். உங்கள் உள்ளுணர்வுத் திறன் மேம்படும். .நீங்கள் யோசிப்பதை செயல்படுத்துவீர்கள். பிள்ளைகள் நன்றாகப் படிப்பார்கள். விளையாட்டுகளில்  பரிசு வாங்குவார்கள். போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவார்கள். குழந்தைகள் மூலம் வெற்றி மற்றும் லாபம் கிட்டும். கூட்டுத் தொழிலில் நல்ல இணக்கம் இருக்கும். புதிய வாடிக்கையார்கள் சேருவார்கள். புதிய தொழில் தொடங்கும் ஆயத்தப் பணிகளை மேற்கொள்வீர்கள். குடும்ப வருமானம் சிறப்பாக இருக்கும். சவால்களை சமாளிப்பீர்கள். மகிழ்ச்சியாக இருக்கும் நபராக மாறுவீர்கள. கஷ்டங்கள் குறையும். நன்மைகள் ஏற்படும். ஒரு சிலருக்கு திருமண முயற்சிகள் வெற்றி கொடுக்கும்.  

விருச்சிகம் தமிழ் புத்தாண்டு பலன்கள் 2025 | Viruchigam Tamil Puthandu Rasi Palan 2025

திருமணத்திற்கான சாத்தியக் கூறுகள் உண்டு. குடும்ப விருத்தி இருக்கும். சோம்பல் நிலை மாறி நீங்கள் சுறுசுறுப்பாக இயங்குவீர்கள். நல்ல தெளிவு கிட்டும். வெளியூர், வெளிநாட்டு அழைப்புகள் வரும். நிரந்தர வேலை கிடைக்கும். வேலை முன்னேற்றம் கிடைக்கும். ஊதிய உயர்வு கிட்டும். நீங்கள் கேட்கும் இடத்திற்கு மாற்றம் கிடைக்கும். செல்வம் கொழிக்கும்.சம்பத்து சேரும். தங்கத்தில் நீங்கள் முதலீடு செய்யலாம். இந்த வருடம் உங்கள் முயற்சிகளில் வெற்றியைக் கொடுக்கும். அலைச்சல்கள் அதிகமாக இருக்கும். அதன் மூலம் வெற்றி கிட்டும். என்றாலும் தூக்கம் கெடும். எதிராளிகளை நீங்கள் புரிந்து கொள்ளும் சந்தர்ப்பம் கிட்டும். உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களின் குடும்பத்தாரின் மூலம் ஆதாயம் காண்பீர்கள்.  உங்கள் வாழ்க்கையில் ஏற்றம் மற்றும் மறுமலர்ச்சியை குரு அருளுவார். உங்கள் வைராக்கியத்தை குறைத்துக் கொள்ளுங்கள். 

தனுசு தமிழ் புத்தாண்டு பலன்கள் 2025 | Dhanusu Tamil Puthandu Rasi Palan 2025

உங்கள் உள்ளுணர்வுத் திறன் மேம்படும். தெளிவு கிட்டும். நல்ல புரிந்துணர்வு இருக்கும். உங்களுக்கு பிரச்சினை அளிப்பவர்களை நீங்கள் இனம் கொண்டு கொள்வீர்கள். சோம்பல் வரலாம். தங்கத்தில் முதலீடு செய்வது, அதிக பணம் வரும் என்று நம்பி முதலீடு செய்வது போன்ற விஷயங்களில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். தந்தையார் சொத்துக்கள் உங்களுக்கு வரலாம். தந்தையார் வழி உறவினர்களின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உங்கள் தகவல் தொடர்பு திறன் மேம்படும். பெயர், புகழ், கௌரவம், மற்றும் அந்தஸ்து கூடும். உங்களுக்கு விசுவாசமானவர்கள் உங்களுக்கு உறுதுணையாக  இருபார்கள். இருந்தாலும் சில சங்கடங்கள் இருக்கும். சில சமயம் படபடப்புகள் வரலாம். யோகா மற்றும் தியானம் மேற்கொள்ளுங்கள். குழந்தைகள் நன்றாகப் படிப்பார்கள். அதீத தன்னம்பிக்கை தவிர்க்க வேண்டும். வெளிநாடு செல்ல நினைப்பவர்கள் நிதானமாக செயல்பட வேண்டும். தேவையில்லாத கூட்டாளிகள் மூலம் தேவையற்ற பழக்க வழக்கங்கள் ஏற்படலாம். எனவே கவனம் தேவை. முதலீட்டு விஷயங்களில் கவனம் தேவை. 

மகரம் தமிழ் புத்தாண்டு பலன்கள் 2025  |Makaram Tamil Puthandu Rasi Palan 2025

இத்தனை நாள் இருந்து வந்த தடைகள் நீங்கும். குழந்தைகள் படிப்பில் இருந்து வந்த தடைகள் நீங்கும். குடும்ப விருத்தி நடக்கும். குடும்பத்தில் திருமணம் நடக்கும்.புதிய வரவு உண்டு. அலைச்சல்கள் நீங்கும். அயன சயன சுகம் கிட்டும். குடும்பத்துடன் பயணம் செல்லும் வாய்ப்பு கிட்டும். குடும்ப வருமானம், செல்வம் கூடும். கூட்டுத் தொழில் சமுகமாக நடக்கும். புதிய ஒப்பந்தம் மேற்கொள்வீர்கள். வளர்ச்சி இருக்கும் நேரத்தில் தடைகளும் இருக்கும். உங்கள் வருமானம் தடைபடலாம். அதற்கான விஷயங்களில் நீங்கள் ஆயத்தமாக இருக்க வேண்டும். தனப் பிராப்தி இருக்கும். கோர்ட், கேஸ், வம்பு, வழக்கு பிரச்சினைகள் வரலாம். இதில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க, மற்றும் இதில் இருந்து விடுபட உங்கள் பேச்சில் கவனமாக இருக்க வேண்டும். பிறருக்கு ஆலோசனை வழங்குவதை தவிர்க்க வேண்டும். உங்கள் செயல்பாட்டில் கவனம் வேண்டும். ஞாபக மறதிக்கு இடம் கொடுக்காதீர்கள். குறிப்பாக மாணவர்கள் படித்ததை மறந்து விடலாம். போட்டி பந்தயங்களில் வெற்றி பெறுவதற்கான சாத்தியக் கூறுகள் உண்டு. உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். 

கும்பம் தமிழ் புத்தாண்டு பலன்கள் 2025  | Kumbham Tamil Puthandu Rasi Palan 2025

உங்கள் புத்திசாலித்தனம், ஞானம், அறிவு சிறக்கும். நீங்கள் எல்லா விஷயங்களையும் நன்கு புரிந்து கொள்வீர்கள். லாபங்கள் மற்றும் முன்னேற்றம் வரலாம். இதுவரை இருந்து வந்த பிரச்சினைகள் தீர்வுக்கு வரும். வாழ்வில் நீங்கள் அனுகூலமான மாற்றம் சந்திக்கலாம். குடும்பத்தின் மூலம் சொத்துக்கள் கிட்டும். அறிவுப் பூர்வமான அனுகூலங்கள் கிட்டும். வண்டி வாகனம் மாற்றலாம். வீட்டில் மராமத்து பணிகளை மேற்கொள்வீர்கள். கஷ்டங்களில் இருந்து வெளிவருவீர்கள். லாபங்கள் மறைமுக வடிவில் வந்து சேரும். அது சேமிப்பாகவும் இருக்கலாம். மூத்த சகோதர சகோதரி வீட்டில் விசேஷங்கள் நடக்கும். அவர்களுடன் இருந்து வந்த பிரச்சினைகள் விலகும். முதலீடு விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். இந்த வருடம் லாபம் அதிகரிக்கும். பணியிடத்தில் அங்கீகாரம் கிட்டும். 
 
மீனம் தமிழ் புத்தாண்டு பலன்கள் 2025 | Meenam Tamil Puthandu Rasi Palan 2025

தொழில் சார்ந்த விஷயங்களில் முன்னேற்றம் கிட்டும். அதிக வேலை இருக்கும். அதன் நிமித்தமாக பயணம் அதிகம் இருக்கும். குடும்பத்தை விட்டுப் பிரிந்து இருக்க நேரும். அயன சயன சுகம் கெடும். குடும்பத்தினர்கள் ஆதரவாக இருப்பது நல்லது.குடும்பத்தார் இவர்களின் ஆசைகளை புரிந்து கொண்டு பூர்த்தி செய்வது நல்லது. அதன் மூலம் சந்தோசம் கொண்டு பிரச்சினைகளில் இருந்து வெளி வரலாம்.இது வரை தள்ளிப்போன திருமண முயற்சிகள் கை கூடும். திருமண ஆயத்தங்களை நீங்கள் தைரியமாக மேற்கொள்ளலாம்.  ஆசைகள் மற்றும் அபிலாஷைகள் அதிகமாகும். கணவன் மனைவி உறவில் நெருக்கம் குறையும். இதுவரை இருந்து வந்த வம்பு வழக்குகளுக்கு தீர்வு கிட்டும். ஆரோக்கியப் பிரச்சினைகளில் இருந்தும் வெளிவருவீர்கள். 

banner

Leave a Reply

Submit Comment