விஷ்ணு பகவான் எடுத்த முக்கியமான பத்து அவதாரங்களில் நான்காவது அவதாரம் ந்ருசிம்ஹ அவதாரம் ஆகும். தனது பக்தன் பிரகலாதனின் கூற்றை உண்மையாக்க தூணில் இருந்து தோன்றிய அவதாரம். இது மற்ற அவதாரங்களை விடவும் தனிச்சிறப்பு வாய்ந்தது. துஷ்டர்களை அழித்து, பக்தர்களை காக்கும் ஒரு அவதாரமாக போற்றப்படுகிறது. மற்ற அவதாரங்கள் எல்லாம் திட்டமிட்டு எடுத்த அவதாரங்கள் ஆகும். இந்த அவதாரம் தனது தீவிர பக்தனை காக்க ஒரு நொடியில் எடுத்த அவதாரம் ஆகும். அதனால் தான் இந்த அவதாரம் சிறப்பு வாய்ந்தது. நாளை என்பதே நரசிம்மருக்கு இல்லை என்று கூறுவார்கள். நரசிம்மரை வணங்கி வழிபடுவதன் மூலம் எத்தகைய துன்பங்களில் இருந்தும் விடுபடலாம்.
இந்த பதிவில் நம் காணவிருப்பது இத்தனை சிறப்பு வாய்ந்த ஸ்ரீ ந்ருசிம்ஹரின் கவசம் ஆகும். இந்த ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்வதன் மூலம் ஸ்ரீ ந்ருஸிம்ஹர், கவசமாய் இருந்து நம்மைக் காத்தருள்வார். இந்த ஸ்தோத்திரத்தை தினமும் பாராயணம் செய்யலாம். குறிப்பாக வியாழக்கிழமை மற்றும் சுவாதி நட்சத்திர நாளில் பாராயணம் செய்வது மிகவும் சிறப்பு. பிரதோஷ நேரம் என்று கூறப்படும் மாலை நேரத்தில் மாலை நான்கு முதல் ஆறு மணி வரையிலான நேரத்தில் இந்த கவசத்தை பாராயணம் செய்து பானகம் நைவேத்தியம் செய்வதன் மூலம் நரசிம்ஹரின் அருளைப் பெறலாம்.
ஸ்ரீ ந்ருஸிம்ஹ கவசம்
ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹலாத நோதிதம் புரா
ஸர்வ ரக்ஷாகரம் புண்யம் ஸர்வோபத்ரவ நாஸனம்
ஸர்வ ஸம்பத்கரம் சைவ ஸ்வர்க்க மோக்ஷ ப்ரதாயகம்
த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேஸம் ஹேம ஸிம்ஹாஸனஸ்த்திதம்
விவ்ருதாஸ்யம் த்ரிநயனம் ஸரதிந்து ஸமப்ரபம்
லக்ஷ்ம்யாலிங்கித வாமாங்கம் விபூதிபி: உபாஸ்ரிதம்
ஸதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ண குண்டல ஸோபிதம்
ஸரோஜ ஸோபிதோரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம்
தப்த காஞ்ஜன ஸங்காஸம் பீத நிர்மல வாஸஸம்
இந்த்ராதி ஸுரமௌளிஸ்தஸ்ஃபுரன் மாணிக்ய தீப்திபி:
விராஜித பத த்வந்த்வம் ஸங்கசக்ராதி ஹேதிபி:
க்ருத்மதா ஸ வினயம் ஸ்தூயமானம் முதா$ன்விதம்
ஸ்வஹ்ருத் கமல ஸம்வாஸம் க்ருத்வா து கவசம் படேத்
ந்ருஸிம்ஹோ மே த்ருஸௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன:
ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரிர் முனிவர்ய ஸ்துதி ப்ரிய:
நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய:
ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம
வக்த்ரம் பாத்விந்து வதன: ஸதா ப்ரஹலாத வந்தித:
ந்ருஸிம்ஹ: பாது மே கண்ட்டம் ஸ்கந்தௌ பூபரணாந்த க்ருத்
திவ்யாஸ்த்ர ஸோபித புஜோ ந்ருஸிம்ஹ: பாதுமே புஜௌ
கரௌ மே தேவ வரதோ ந்ருஸிம்ஹ: பாது ஸர்வத:
ஹ்ருதயம் யோகி ஸாத்யஸ் ச நிவாஸம் பாது மே ஹரி:
மத்யம் பாது ஹிரண்யாக்ஷ வக்ஷ: குக்ஷி விதாரண:
நாபிம் மே பாது ந்ருஹரி: ஸ்வநாபி ப்ரஹ்ம ஸம்ஸ்துத:
ப்ரஹ்மாண்ட கோடய: கட்யாம் யஸ்யாஸௌ பாது மே கடிம்
குஹ்யம் மே பாது குஹ்யானாம் மந்த்ராணாம் குஹ்யரூப த்ருக்
ஊரூ மனோபவ: பாது ஜானூநீ நரரூப த்ருக்
ஜங்கே பாது தரா பாரா ஹர்த்தா யோ$ஸௌ ந்ருகேஸரீ
ஸுர ராஜ்ய ப்ரத: பாது பாதௌ மே ந்ருஹரீஸ்வர:
ஸஹஸ்ரஸீர்ஷா புருஷ: பாது மே ஸர்வஸஸ்தனும்
மஹோக்ர: பூர்வத: பாது மஹா வீராக்ரஜோ$க்னித:
மஹாவிஷ்ணுர் தக்ஷிணேது மஹா ஜ்வாலஸ்து நைர்ருதௌ
பஸ்சிமே பாது ஸர்வேஸா திஸி மே ஸர்வதோ முக:
ந்ருஸிம்ஹ: பாது வாயவ்யாம் ஸௌம்யாம் பூஷண விக்ரஹ:
ஈஸான்யாம் பாது பத்ரோ மே ஸர்வ மங்கள தாயக:
ஸம்ஸாராபயத: பாது ம்ருத்யோர் ம்ருத்யுர் ந்ருகேஸரீ
இதம் ந்ருஸிம்ஹ கவசம் ப்ரஹலாத முக மண்டிதம்
பக்திமான்ய: படேந் நித்யம் ஸர்வ பாபை: ப்ரமுச்யதே
புத்ரவான் தனவான் லோகே தீர்க்காயுருப ஜாயதே
யம் யம் காமயதே காமம் தம் தம் ப்ராப்னோத்ய ஸம்ஸயம்
ஸர்வத்ர ஜய மாப்னோதி ஸர்வத்ர விஜயீ பவேத்
பூம்யந்தரிக்ஷ திவ்யானாம் க்ரஹாணாம் விநிவாரணம்
வ்ருச்ஸிகோரக ஸம்பூத விஷாய ஹரணம் பரம்
ப்ரஹ்ம ராக்ஷஸ யக்ஷாணாம் தூரோத்ஸாரண காரணம்
பூர்ஜே வா தாளபத்ரே வா கவசம் லிகிதம் ஸுபம்
கரமூலே த்ருதம் யேன ஸித்யேயு: கர்ம ஸித்தய:
தேவாஸூர மனுஷ்யேஷூ ஸ்வம் ஸ்வமேவ ஜயம் லபேத்
ஏக ஸந்த்யம் த்ரி ஸந்த்யம் வா ய: படேந் நியதோ நர:
ஸர்வ மங்கள மாங்கல்யம் புக்திம் முக்திஞ்ச விந்ததி
த்வாத்ரிம்ஸச்ச ஸஹஸ்ராணி படேச் சுத்தாத்மனாம் ந்ருணாம்
கவசஸ்யாஸ்ய மந்த்ரஸ்ய மந்த்ரஸித்தி: ப்ரஜாயதே
அனேன மந்த்ர ராஜேன க்ருத்வா பஸ்மாபி மந்த்ரணம்
திலகம் வின்யஸேத்யஸ்து தஸ்ய க்ரஹ பயம் ஹரேத்
த்ரிவாரம் ஜபமானஸ்து தத்தம் வார்யபி மந்த்ரய ச
ப்ராஸயேத்யோ நரோ மந்த்ரம் ந்ருஸிம்ஹ ஸத்ருஸோ பவேத்
தஸ்ய ரோகா: ப்ரணஸ்யந்தி யே ச ஸ்யு: குக்ஷி ஸம்பவா:
கிமத்ர பஹூனோக்தேன ந்ருஸிம்ஹ ஸத்ருஸோ பவேத்
மனஸா ஸிந்திதம் யத்து ஸ தச்சாப்னோத்ய ஸம்ஸயம்
கர்ஜந்தம் கர்ஜயந்தம் நிஜ புஜ படலம் ஸ்ஃபோடயந்தம் ஹடந்தம்
ரூப்யந்தம் தாபயந்தம் திவி புவி திதிஜம் க்ஷேபயந்தம் க்ஷிபந்தம்
க்ரந்தந்தம் ரோஷயந்தம் திஸி திஸி ஸததம் ஸம்ஹரந்தம் பரந்தம்
வீக்ஷந்தம் கூர்ணயந்தம் ஸர நிகர ஸதை: திவ்ய ஸிம்ஹம் நமாமி
இதி ஸ்ரீ ப்ரஹ்மாண்ட புராணே
ஸ்ரீ ந்ருஸிம்ஹ கவசம் ஸம்பூர்ணம்

Leave a Reply