பிரதோஷம் 2024 தேதிகள் | Pradosham Dates Tamil Calendar | AstroVed.com
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

பிரதோஷம் பிரதோஷம் (Pradosham Dates)

விரத நாட்களில் பிரதோஷ நாட்களும் அடங்கும். இந்தப் பதிவில் தேய்பிறை மற்றும்  வளர்பிறை பிரதோஷ நாட்கள் மற்றும் நேரம் அளித்துள்ளோம். மேலும் பிரதோஷ வேளையில் என்ன செய்ய வேண்டும். இறைவனை எப்படி வணங்க வேண்டும், விரத பலன் மற்றும் பிரதோஷ நேரத்தில் வலம் வரும் முறை போன்றவற்றையும்  இந்தப் பதிவில் அளித்துள்ளோம்.

January 2026
15 Thursday
ராகுகாலம் 01:31 PM - 02:43 PM
குளிகை 09:55 AM - 11:07 AM
எமகண்டம் 07:32 AM - 08:44 AM
திதி ஆரம்பம்: Jan.15,2026 09:46 AM
திதி முடிவு: Jan.16,2026 11:52 AM
January 2026
30 Friday
ராகுகாலம் 11:08 AM - 12:23 PM
குளிகை 08:37 AM - 09:53 AM
எமகண்டம் 02:53 PM - 04:08 PM
திதி ஆரம்பம்: Jan.30,2026 12:39 AM
திதி முடிவு: Jan.30,2026 09:55 PM
February 2026
14 Saturday
ராகுகாலம் 09:45 AM - 11:04 AM
குளிகை 07:06 AM - 08:26 AM
எமகண்டம் 01:43 PM - 03:02 PM
திதி ஆரம்பம்: Feb.14,2026 05:31 AM
திதி முடிவு: Feb.15,2026 06:35 AM
February 2026
28 Saturday
ராகுகாலம் 09:35 AM - 10:59 AM
குளிகை 06:48 AM - 08:11 AM
எமகண்டம் 01:46 PM - 03:09 PM
திதி ஆரம்பம்: Feb.28,2026 10:13 AM
திதி முடிவு: Mar.01,2026 08:39 AM
March 2026
16 Monday
ராகுகாலம் 08:52 AM - 10:21 AM
குளிகை 02:47 PM - 04:16 PM
எமகண்டம் 11:50 AM - 01:18 PM
திதி ஆரம்பம்: Mar.16,2026 12:11 AM
திதி முடிவு: Mar.16,2026 11:53 PM
March 2026
30 Monday
ராகுகாலம் 08:35 AM - 10:08 AM
குளிகை 02:47 PM - 04:21 PM
எமகண்டம் 11:41 AM - 01:14 PM
திதி ஆரம்பம்: Mar.29,2026 09:39 PM
திதி முடிவு: Mar.30,2026 09:26 PM
April 2026
14 Tuesday
ராகுகாலம் 04:26 PM - 06:04 PM
குளிகை 01:10 PM - 02:48 PM
எமகண்டம் 09:54 AM - 11:32 AM
திதி ஆரம்பம்: Apr.14,2026 02:42 PM
திதி முடிவு: Apr.15,2026 01:01 PM
April 2026
28 Tuesday
ராகுகாலம் 04:31 PM - 06:13 PM
குளிகை 01:07 PM - 02:49 PM
எமகண்டம் 09:43 AM - 11:25 AM
திதி ஆரம்பம்: Apr.28,2026 09:22 AM
திதி முடிவு: Apr.29,2026 10:21 AM
May 2026
14 Thursday
ராகுகாலம் 02:52 PM - 04:38 PM
குளிகை 09:34 AM - 11:20 AM
எமகண்டம் 06:02 AM - 07:48 AM
திதி ஆரம்பம்: May 14,2026 01:50 AM
திதி முடிவு: May 14,2026 11:01 PM
May 2026
28 Thursday
ராகுகாலம் 02:56 PM - 04:44 PM
குளிகை 09:30 AM - 11:18 AM
எமகண்டம் 05:52 AM - 07:41 AM
திதி ஆரம்பம்: May 27,2026 10:27 PM
திதி முடிவு: May 29,2026 12:20 AM
June 2026
12 Friday
ராகுகாலம் 11:19 AM - 01:09 PM
குளிகை 07:38 AM - 09:29 AM
எமகண்டம் 04:50 PM - 06:40 PM
திதி ஆரம்பம்: Jun.12,2026 10:06 AM
திதி முடிவு: Jun.13,2026 06:38 AM
June 2026
26 Friday
ராகுகாலம் 11:22 AM - 01:12 PM
குளிகை 07:41 AM - 09:31 AM
எமகண்டம் 04:53 PM - 06:44 PM
திதி ஆரம்பம்: Jun.26,2026 12:52 PM
திதி முடிவு: Jun.27,2026 03:13 PM
July 2026
11 Saturday
ராகுகாலம் 09:37 AM - 11:26 AM
குளிகை 05:58 AM - 07:47 AM
எமகண்டம் 03:04 PM - 04:53 PM
திதி ஆரம்பம்: Jul.11,2026 04:34 PM
திதி முடிவு: Jul.12,2026 01:00 PM
July 2026
26 Sunday
ராகுகாலம் 06:35 PM - 08:22 PM
குளிகை 04:49 PM - 06:35 PM
எமகண்டம் 01:16 PM - 03:02 PM
திதி ஆரம்பம்: Jul.26,2026 04:28 AM
திதி முடிவு: Jul.27,2026 06:45 AM
August 2026
10 Monday
ராகுகாலம் 08:06 AM - 09:49 AM
குளிகை 02:57 PM - 04:40 PM
எமகண்டம் 11:32 AM - 01:14 PM
திதி ஆரம்பம்: Aug.09,2026 10:31 PM
திதி முடிவு: Aug.10,2026 07:24 PM
August 2026
25 Tuesday
ராகுகாலம் 04:29 PM - 06:07 PM
குளிகை 01:11 PM - 02:50 PM
எமகண்டம் 09:54 AM - 11:32 AM
திதி ஆரம்பம்: Aug.24,2026 08:51 PM
திதி முடிவு: Aug.25,2026 10:29 PM
September 2026
08 Tuesday
ராகுகாலம் 04:16 PM - 05:50 PM
குளிகை 01:07 PM - 02:41 PM
எமகண்டம் 09:58 AM - 11:32 AM
திதி ஆரம்பம்: Sep.08,2026 05:13 AM
திதி முடிவு: Sep.09,2026 03:01 AM
September 2026
23 Wednesday
ராகுகாலம் 01:01 PM - 02:31 PM
குளிகை 11:32 AM - 01:01 PM
எமகண்டம் 08:32 AM - 10:02 AM
திதி ஆரம்பம்: Sep.23,2026 01:20 PM
திதி முடிவு: Sep.24,2026 01:48 PM
October 2026
07 Wednesday
ராகுகாலம் 12:57 PM - 02:22 PM
குளிகை 11:32 AM - 12:57 PM
எமகண்டம் 08:41 AM - 10:06 AM
திதி ஆரம்பம்: Oct.07,2026 01:46 PM
திதி முடிவு: Oct.08,2026 12:46 PM
October 2026
23 Friday
ராகுகாலம் 11:33 AM - 12:53 PM
குளிகை 08:52 AM - 10:13 AM
எமகண்டம் 03:34 PM - 04:55 PM
திதி ஆரம்பம்: Oct.23,2026 05:06 AM
திதி முடிவு: Oct.24,2026 04:07 AM
November 2026
06 Friday
ராகுகாலம் 10:36 AM - 11:53 AM
குளிகை 08:04 AM - 09:20 AM
எமகண்டம் 02:26 PM - 03:42 PM
திதி ஆரம்பம்: Nov.06,2026 12:00 AM
திதி முடிவு: Nov.07,2026 12:18 AM
November 2026
22 Sunday
ராகுகாலம் 03:33 PM - 04:46 PM
குளிகை 02:21 PM - 03:33 PM
எமகண்டம் 11:55 AM - 01:08 PM
திதி ஆரம்பம்: Nov.21,2026 06:26 PM
திதி முடிவு: Nov.22,2026 04:07 PM
December 2026
05 Saturday
ராகுகாலம் 09:39 AM - 10:50 AM
குளிகை 07:18 AM - 08:29 AM
எமகண்டம் 01:10 PM - 02:21 PM
திதி ஆரம்பம்: Dec.05,2026 02:22 PM
திதி முடிவு: Dec.06,2026 03:52 PM
December 2026
21 Monday
ராகுகாலம் 08:39 AM - 09:49 AM
குளிகை 01:17 PM - 02:26 PM
எமகண்டம் 10:58 AM - 12:08 PM
திதி ஆரம்பம்: Dec.21,2026 07:06 AM
திதி முடிவு: Dec.22,2026 03:53 AM

பிரதோஷம்

தினமும் மாலை 3 முதல் 6 வரையிலான நேரம் பிரதோஷ காலம் என்றே குறிப்பிடப்படுகிறது. இதற்கு நித்ய பிரதோஷம் என்று பெயர். திரியோதசி துவங்கியதில் இருந்து உபவாசம் இருந்து, சிவ நாமங்களை ஜபித்துக் கொண்டிருக்க வேண்டும். . அன்று மாலை சிவன் கோவிலுக்கு சென்று சிவ தரிசனம் செய்த பிறகே உணவு சாப்பிட்டு விரதத்தை முடிக்க வேண்டும்.

நித்தியப் பிரதோஷப் பெயர்கள் : ஞாயிற்றுக் கிழமை வரும் பிரதோ‌ஷம் ‘ஆதிப் பிரதோ‌ஷம்’ என்றும், திங்கட்கிழமை வரும் பிரதோ‌ஷம் ‘சோமவாரப் பிரதோ‌ஷம்’ என்றும், செவ்வாய்க்கிழமை வரும் பிரதோ‌ஷம் ‘மங்கள வாரப் பிரதோ‌ஷம்’ என்றும், புதன்கிழமை வரும் பிரதோ‌ஷம் ‘புதவாரப் பிரதோ‌ஷம்’ என்றும், வியாழக் கிழமை வரும் பிரதோ‌ஷம் ‘குருவாரப் பிரதோ‌ஷம்’ என்றும், வெள்ளிக்கிழமை வரும் பிரதோ‌ஷம் ‘சுக்ர வாரப் பிரதோ‌ஷம்’ என்றும் அழைக்கப்படுகிறது. ஆனால் மற்ற நாட்களில் வரும் பிரதோஷத்தை காட்டிலும் சனி பிரதோஷத்திற்கே சிறப்புக்கள் அதிகம். இந்த பிரதோஷத்தைத்தான் ‘மகா பிரதோஷம்’ என்று அழைக்கிறோம். சனிதான் அதிகமான தோஷத்தையும், துன்பங்களையும் கொடுக்கக்கூடியவர். எனவே அந்தக் கிழமையில் பிரதோஷம் வந்துவிட்டால், சனியால் ஏற்படக்கூடிய பெரிய பாதிப்புகள் விலகும் என்பது நம்பிக்கை. சுக்ர பிரதோஷத்தில் சிவ வழிபாடு நல்லது. சுக்ர திசை நடப்பவர்கள், சுக்கிரனை லக்னாதிபதியாக கொண்டவர்கள் வெள்ளி அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும். பலன்: உறவு வளப்படும். சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும். 20 வகையான பிரதோஷங்கள்: மொத்தம் 20 வகையான பிரதோஷங்கள் உள்ளதாக சொல்லப்படுகிறது. பிரதோசத்தில் 20 வகைகள் உள்ளன. அவையாவன:

  • தினசரி பிரதோஷம்
  • பட்சப் பிரதோஷம்
  • மாசப் பிரதோஷம்
  • நட்சத்திரப் பிரதோஷம்
  • பூரண பிரதோஷம்
  • திவ்யப் பிரதோஷம்
  • தீபப் பிரதோஷம்
  • அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம்
  • மகா பிரதோஷம
  • உத்தம மகா பிரதோஷம்
  • ஏகாட்சர பிரதோஷம்
  • அர்த்தநாரி பிரதோஷம்
  • திரிகரண பிரதோஷம்
  • பிரம்மப் பிரதோஷம்
  • அட்சரப் பிரதோஷம்
  • கந்தப் பிரதோஷம்
  • சட்ஜ பிரபா பிரதோஷம்
  • அஷ்ட திக் பிரதோஷம்
  • நவக்கிரகப் பிரதோஷம்
  • துத்தப் பிரதோஷம்

அவற்றில் முக்கியமான ஐந்து பிரதோஷங்கள் நித்தியப் பிரதோஷம், பக்ஷப் பிரதோஷம், மாதப் பிரதோஷம், மகா பிரதோஷம், பிரளயப் பிரதோஷம் ஆகும்.

நித்தியப் பிரதோஷம்: தினமும் சூரியன் மறைவதற்கு முன்னால் இருக்கும் ஒன்றரை மணி நேரத்தில் இருந்து (சுமாராக மாலை 4.30 மணியிலிருந்து) நட்சத்திரங்கள் தோன்றக்கூடிய காலம் வரை உள்ள மாலை நேரம் நித்தியப் பிரதோஷம் எனப்படுகிறது.

பக்ஷப் பிரதோஷம்: வளர்பிறை திரயோதசி திதியில் வரும் பிரதோஷம் 'பக்ஷப் பிரதோஷம்’ எனப்படும்.

மாதப் பிரதோஷம் : தேய்பிறை திரயோதசி திதியில் வரும் பிரதோஷம் 'மாதப் பிரதோஷம்’ எனப்படும்.

மகா பிரதோஷம்: சிவ பெருமான் விஷம் அருந்தி, துயர் தீர்த்த (பிரதோஷம்) காலம் ஒரு சனிக்கிழமையன்று என்பதால், சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் 'மகா பிரதோஷம்’ எனப்படும்.

பிரளய பிரதோஷம்: பிரளய காலத்தில் எல்லா ஜீவராசிகளும் சிவபெருமானிடம் ஐக்கியம் ஆகும். உலக முடிவில் உண்டாகும் அந்தக் காலமே பிரளய பிரதோஷம் என அழைக்கப்படுகிறது.

பிரதோஷத்தின்போது வலம் வரும் முறை: மற்ற நாட்களில் சிவன் கோயிலில் வலம் வருவதற்கும் பிரதோஷத்தின்போது வலம் வருவதற்கும் வித்தியாசம் உண்டு. பிரதோஷத்தன்று வலம் வரும் முறையை, 'சோமசூக்தப் பிரதட்சிணம்’ அல்லது சோமசூத்ரப் பிரதட்சிணம் என்று சொல்வார்கள்.

சோமசூக்தப் பிரதட்சிணம் செய்யும் முறை

முதலில் நந்தியை வணங்கி, பிறகு அதன் பிரணவ வடிவமான கொம்புகளின் நடுவே சிவபெருமானை தரிசனம் செய்ய வேண்டும். அதன் பிறகு வழக்கமாக வலம் வருவதற்கு மாறாக, அப்பிரதட்சிணமாக (எதிர் வலமாக) சண்டிகேஸ்வரர் சந்நிதி வரை போய்த் திரும்ப வேண்டும். அபிஷேகத் தீர்த்தம் வரும் வழியைத் தாண்டக் கூடாது!

இதன்பின் போன வழியே திரும்ப வேண்டும். நந்தியை தரிசித்து, தினந்தோறும் செய்யும் வழக்கப்படி வலம் வர வேண்டும். அப்போதும், அபிஷேகத் தீர்த்தம் வரும் வழியைத் தாண்டாமல் அப்படியே திரும்பி, நந்தி வரை வர வேண்டும். இந்த முறைப்படி மூன்று தடவை செய்ய வேண்டும். இதுவே 'சோமசூக்தப் பிரதட்சிணம்’.

ஆலகால விஷம் வெளிப்பட்டபோது, பயத்துடன் அனைவரும் கயிலையை நோக்கி ஓடினர். அப்போது விஷம் அப்பிரதட்சிணமாக - அவர்களுக்கு எதிராக வந்து விரட்டியது. எனவே, அவர்கள் வந்த வழியே திரும்பி ஓடினர். அங்கும் அவர்களுக்கு எதிராக விஷம் வந்து துன்புறுத்தியது. இப்படி இட-வலமாக அவர்கள் வலம் வந்த முறைதான் 'சோமசூக்தப் பிரதட்சிணம்’ என்று கடைப்பிடிக்கப்படுகிறது.

பிரதோஷ விரதம்:

பிரதோஷ விரதம் மேற்கொள்ள எண்ணுபவர்கள், வளர்பிறை, தேய்பிறை என இரு பிரதோஷ தினங்களிலும் கடைப்பிடிக்கலாம். விரதம் இருப்பவர்கள் காலையில் எழுந்து குளித்துவிட்டு அந்த நாள் முழுவதும் சிவ நாமத்தையோ, ஓம் நமசிவாய என்னும் மந்திரத்தையோ ஜெபிக்கலாம். சிவபுராணத்தைப் படித்தால் இன்னும் சிறப்பு.

மாலை பிரதோஷ வேளையில் சிவன் கோயிலுக்கு சென்று, நந்தி தேவருக்கு அருகம்புல் மாலை சார்த்தி, நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். சிவனுக்கு வில்வத்தால் அர்ச்சனை செய்வது சிறப்பு. நந்தி தேவரிடமும், சிவபெருமானிடமும் நமது பிரார்த்தனைகளை நிறைவேற்றி வைக்குமாறு வேண்டி ஆலயத்தை வலம் வரலாம். பிரதோஷ தரிசனத்தை முடித்து பிரசாதம் உண்டு விரதத்தை முடிக்கலாம். இதில் இன்னொரு சிறப்பு என்னவென்றால் பிரதோஷ வேளையில் அனைத்து தெய்வங்களும், மகா முனிவர்களும், சித்தர்களும் சிவபெருமானை வணங்கி வழிபடுவார்கள். அந்த நேரத்தில் நாம் சிவபெருமானை தரிசிக்கும் போது அவரது அருள் கடாட்சமும், அனைத்து தெய்வங்களின் அருளாசிகளும் கிடைக்கப் பெறலாம்.

பிரதோஷ விரதத்தின் பலன்கள்

சிவபெருமான் அபிஷேகப் பிரியர் என்பதால் ஒவ்வொரு அபிஷேகத்திற்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் உண்டு. பிரதோஷ விரதம் மேற்கொள்பவர்களுக்கு பாவங்கள் விலகும், திருமணம் கைகூடும், குழந்தைப் பேறு கிடைக்கும், வறுமை விலகும், தீராத நோய்களும் நீங்கும், சகல காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். சகல சௌபாக்கியங்களையும் தரக்கூடியது பிரதோஷ விரதம்.