AstroVed Menu
AstroVed
search
search

வீட்டில் அதிர்ஷ்டம் பெருக உதவும் குலதெய்வ கோவில் மண்

dateMay 9, 2025

நமது வாழ்வில் இறைவழிபாடு இன்றியமையாதது ஆகும். அதிலும் குல தெய்வ வழிபாடு மிகவும் அவசியமான ஒன்றாகும். குலத்தைக் காக்கும் தெய்வம் குல தெய்வம். ஒவ்வொருவருக்கும் அவரவர் முன்னோர்கள் பரம்பரை பரம்பரையாக வழிபட்டு வந்த தெய்வம் குல தெய்வம் ஆகும். வருடம் ஒரு முறையாவது குல தெய்வம் கோவிலுக்கு சென்று வழிபட வேண்டியது அவசியம் ஆகும். மற்ற தெய்வ வழிபாடுகள் நல்ல பலன்களை பெற்றுத் தரும் என்றாலும் குலதெய்வ வழிபாடு அபரிமிதமான பலன்களை பெற்றுத் தரும். எனவே குல தெய்வம் மிகவும் வலிமையான தெய்வம் ஆகும். அளவிடமுடியாத ஏராளமான ஈடு இணை இல்லாத சக்தி வாய்ந்த தெய்வம் குல தெய்வம் ஆகும். அது சிறு தெய்வமாக இருந்தால் கூட சக்தி அதிகம் மிக்கதாக இருக்கும். எமன் கூட ஒருவரின் குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் உயிரை எடுக்கமுடியும். குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் என்று கூட கூறுவார்கள். அந்த புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினை சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவை. எனவே தான் அந்த தெய்வங்கள் "குலதெய்வங்கள்" என்று சிறப்புடன் அழைக்கப்படுகின்றன. குலதெய்வங்கள் கர்மவினைகளை நீக்க வல்லவை.

பொதுவாக நாம் குல தெய்வம் கோவிலுக்கு நேர்ந்து கொண்டு செல்லுவோம். நமது நேர்த்திக்  கடனை செலுத்தி விட்டு நமது வேண்டுதல் மற்றும் பிரார்த்தனையை  செலுத்துவோம். கோவிலில் கிடைக்கும் சில பொருட்களை வீட்டிற்கு வாங்கு வருவோம். அவ்வாறு குல தெய்வம் கோவிலுக்கு சென்று வரும் போது நாம் எடுத்துக் கொண்டு வர வேண்டிய முக்கியமான பொருள் அந்தக் கோவில் மண் ஆகும். அதன் சிறப்பு பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

குல தெய்வம் கோவிலுக்கு செல்பவர்கள் முதலில் குலதெய்வத்தை வழிபட வேண்டும். விளக்கு ஏற்ற வேண்டும். அபிஷேகம் அர்ச்சனை முதலியவற்றில்  பங்கு கொள்ள வேண்டும். பிறகு குலதெய்வ கோயிலில் இருந்து ஒரு கைப்பிடி மண்ணை எடுக்க வேண்டும். குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து மண் எடுக்கலாம். எடுத்து வரும் மண்ணை ஒரு மஞ்சள் துணியில் முடிந்து வைக்கலாம். அல்லது ஒரு பாத்திரத்தில் வைத்து, பூஜை அறையில் வைக்கலாம். குலதெய்வ கோயிலில் இருந்து மண் எடுத்து வந்து வழிபாடு செய்வதன் மூலம், வீட்டில் உள்ள பிரச்சனைகள் தீரவும், நல்ல பலன்கள் கிடைக்கவும் வழிவகுக்கிறது. 

சில சமயங்களில் திடீரென்று நமக்கு தொடர்ந்து சில பிரச்சினைகளை சந்திக்க நேரலாம். அல்லது இனம் புரியாத பயம் துன்பம் போன்றவற்றை சந்திக்க நேரலாம். அந்த சமயங்களில் குலதெய்வம் கோவிலுக்கு சென்று வந்தால் அவை தீரும் என்று சொல்வதுண்டு. அது மட்டும் இன்றி  திருமணத்தடை, குழந்தையின்மை, கடன் போன்ற பிரச்சனை தீரவும் குலதெய்வம் கோவிலுக்கு போய்வருவது நல்லது. கோவில் மண்ணை வீட்டிற்கு கொண்டு வந்து மஞ்சள் துணியில் விபூதி, குங்குமத்தையும் சேர்த்து கட்டி வைத்து 48 நாட்கள் பூஜை செய்வது குலதெய்வத்தின் சக்தியை மேலும் அதிகரிக்கும்.

இந்த மண்ணை வீட்டிற்கு கொண்டு வந்து ஒரு மஞ்சள் நிற துணி எடுத்து அதில் மூட்டையாகக் கட்டி வைத்து வீட்டு நிலை வாயிலில் கட்டி வைப்பதன் மூலம் எந்தவிதமான எதிர்மறை சக்திகளும் வீட்டிற்குள் அணுகாது. பில்லி, சூனியம், ஏவல், கண் திருஷ்டி போன்ற பிரச்னைகள் நீங்கி குடும்பத்திற்கு மென்மேலும் உயர்வு கிடைக்கும். ஒரு தடவை சென்று வந்து வீட்டு நிலை வாயிலில் கட்டி வைத்த மண் மூட்டையை அடுத்த தடவை சென்று புதிய மண் கொண்டு மாற்ற வேண்டும். பழைய மண்ணை கால் படாத இடத்தில் போட்டு விட வேண்டும். அல்லது நீர் நிலைகளில் கரைத்து விட வேண்டும்.


banner

Leave a Reply