இந்த பிரபஞ்சத்தை படைத்துக் காத்து அருளும் சிவபெருமான் அருளை பெறுவதற்கு பல விரதங்கள் உள்ளன. அந்த வகையில் கீழே உள்ள இந்த 8 விரதங்களை இருந்தால் சிவபெருமான் அருளை பெறலாம் என்பது ஐதீகம்.
-
சோமவார விரதம் – திங்கட்கிழமை
இந்த விரதம் கார்த்திகை மாத திங்கட்கிழமைகளில் தொடங்கப்பட்டு பின் திங்கட்கிழமை தோறும் பின்பற்றப்படுகிறது.
-
பிரதோஷ விரதம் – பிரதோஷ நாள்
இவ்விரதம் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி மற்றும் அமாவாசையிலிருந்து பதிமூன்றாம் நாள் வரும் திரயோதசியில் கடைப்பிடிக்கப்படுகிறது.
-
திருவாதிரை விரதம் – மார்கழி திருவாதிரை நட்சத்திரம் வரும் நாள்
திருவாதிரை விரதம் மார்கழியில் பௌர்ணமியை ஒட்டிவரும் திருவாதிரை நட்சத்திரம் வரும் நாளில் கடைப்பிடிக்கப்படுகிறது.
-
கல்யாண விரதம் – பங்குனி உத்திர நாள்
இவ்விரதம் பங்குனி மாதம் பௌர்ணமியில் கடைப்பிடிக்கப்படுகிறது. இன்றைய தினத்தில் உமையம்மையை சிவபெருமான் மணந்தார்.
-
உமாமகேஸ்வர விரதம் கார்த்திகை பவுர்ணமி தினம்
இந்த விரதம் கார்த்திகை மாதம் பௌர்ணமி அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. சிவபெருமானின் அங்கத்தில் இட பாகத்தைப் பெற கடுமையான விரதம் மேற்கொண்ட உமையம்மை கார்த்திகை பௌர்ணமி அன்று இறைவனின் இடப்பாகத்தைப் பெற்றார்.
-
மகா சிவராத்திரி விரதம் – மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி தினம்
இவ்விரதம் மாசி மாதம் பௌர்ணமி முடிந்த பதினான்காம் நாளான தேய்பிறை சதுர்த்தசி அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இவ்விரதத்தினை ஆண், பெண் வேறுபாடு இல்லாமல் எல்லோரும் கடைப்பிடிக்கலாம்.
-
ரிஷப விரதம் – வைகாசி விசாக வளர்பிறை அஷ்டமி தினம்
இவ்விரதம் வைகாசி வளர்பிறை அஷ்டமி அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இவ்விரதத்தைப் பின்பற்றியே திருமால் கருடவாகனத்தையும், இந்திரன் ஐராவதத்தையும், குபேரன் முத்து விமானத்தையும் பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன.
-
சூல விரதம்
இவ்விரதம் தை அமாவாசை அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. பரசுராமன் இவ்விரதமுறையைப் பின்பற்றி பலம்மிக்க கார்த்தவீரியராஜனை அழித்தார்.
Leave a Reply