AstroVed Menu
AstroVed
search
search

சிம்ம ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2023-2026 | Simmam Rasi Sani Peyarchi Palangal 2023-2026

dateMarch 10, 2022

சிம்ம ராசி சனி பெயர்ச்சி 2023 பொதுப்பலன் :

சனி உண்மை, கண்டிப்பு, நியாயம் மற்றும் விதிமுறைகளை குறிக்கக் கூடியவர். அவர் விதிகளை வகுப்பதில் பெயர் பெற்றவர். அவற்றைக் கடைப்பிடிப்பவர்களுக்கு நன்மை செய்வார். ஆனால் அவர் தனது விதிகளை மீறுபவர்களுக்கு ஒரு கொடூரமான நீதிபதியாக செயல்படுவார். உங்கள் ராசியிலிருந்து 7வது வீடான கும்ப ராசியில் சனிப்பெயர்ச்சி நடக்கிறது. நீங்கள் சேவை சார்ந்தவராகவும் கடின உழைப்புடனும் இருக்க வேண்டியது அவசியம். இது உங்களுக்கு வெற்றியைத் தரலாம். இந்த காலகட்டத்தை சிறந்த எதிர்காலத்திற்கான அடித்தளமாக பயன்படுத்தவும். சவால்கள் மற்றும் சோதனைகள் தவிர்க்க முடியாதவை, ஆனால் அவை உங்களில் சிறந்ததை வெளிப்படுத்தும். மேலும், சோதனை நேரங்களில் பிரார்த்தனை மூலம் உங்கள் நம்பிக்கையை அதிகரிக்க முடியும் என்பதால், பிரார்த்தனைகளுக்கு நேரத்தை செலவிடுங்கள். சனி பெயர்ச்சி 2023 இல் உங்கள் தொழிலில் கூடுதல் சுமை மற்றும் பல பொறுப்புகளை நீங்கள் சுமக்க வேண்டியிருக்கும்.

 சனிப்பெயர்ச்சி 2023-2026 - சனி பெயர்ச்சி சிறப்பு ஹோமம் மற்றும் பூஜையில் பங்கு கொள்ளுங்கள்


உத்தியோகம் :

இந்த பெயர்ச்சி உங்கள் தொழில் வாழ்க்கையில் சவால்களை கொண்டு வரலாம். உங்கள் நெருங்கியவர் கூட உங்களுக்கு எதிராக மாறலாம். வேலையில் உங்கள் நண்பர்களாக நடிப்பவர்களிடம் கவனமாக இருங்கள். பதவி உயர்வுகள் தாமதமாகலாம், ஆனால் மனம் தளராதீர்கள். அளிக்கப்படும் பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க முடியும் என்பதை நிரூபியுங்கள். நீங்கள் வேறு நிறுவனத்திற்கு செல்ல முயற்சி செய்யலாம். உங்கள் பொறுப்புகளைக் கையாளுவதில் சுறுசுறுப்பாக இருங்கள். தொழிலதிபர்கள் கூட்டாண்மை ஒப்பந்தங்களில் பணிபுரியும் போது கவனமாக இருக்க வேண்டும். ஒப்பந்தங்களில் கையொப்பமிடுவதற்கு முன் நீங்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் பற்றி தெளிவாக இருக்க வேண்டும்.

காதல் / குடும்ப உறவு

இளம் வயதினர் மனதில் காதல் அரும்பு மலர வாய்ப்புள்ளது. அவர்கள்  தங்கள் அன்புக்குரியவர்களிடம் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தலாம்.  இது உறவை கட்டியெழுப்ப உதவும். உங்கள் பெற்றோரின் ஆதரவு தாமதமாகும். விஷயங்களை அவசரப்படுத்த வேண்டாம். அதிர்ஷ்டம் மற்றும் பொருள் சார்  இன்பங்கள் தாமதமாக கிட்டும் பொறுமை முக்கியம். குறிப்பாக விஷயங்கள் உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாதபோது, உங்கள் நடத்தையில் மென்மையாக இருங்கள்.

திருமண வாழ்க்கை:

இந்த சனிப் பெயர்ச்சி உங்கள் குடும்ப வாழ்க்கையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தாது, இது ஒரு நல்ல விஷயம். தனிப்பட்ட ஜாதகரின் கிரக நிலை சில தடைகளை கொண்டு வரலாம். இருப்பினும், 2 வது வீட்டை குரு பகவான் பார்ப்பதால் அவரது ஆதரவின் மூலம் நீங்கள் சவால்களை எளிதாக வெல்வீர்கள். கணவன் மனைவி இருவரும் நல்ல புரிதலுடன் இருப்பீர்கள் மற்றும் நிறைய பாசத்தைப் பகிர்ந்து கொள்வீர்கள். நெகிழ்வாக இருப்பது நல்லிணக்கத்தையும் அமைதியையும் உறுதி செய்யும்.

நிதிநிலை:

உங்கள் வருமானம் திருப்திகரமாக இருக்கலாம். பணப் புழக்கம் நன்றாக இருக்கும். உங்கள் மனைவி அல்லது ஆரோக்கியத்திற்காக அதிக செலவு செய்ய வாய்ப்புகள் உள்ளன. ஊக வணிகம் மற்றும் சரக்கு வர்த்தகத்தில் லாபம் காணப்படும் மற்றும் பயனுள்ள முடிவுகளை ஈர்க்கலாம். முதலீட்டுத் திட்டங்களை உருவாக்கலாம், மேலும் நீங்கள் இக்கட்டான நிலையில் இருந்தால் மற்றும் சில தெளிவு தேவைப்பட்டால், கசப்பான அனுபவங்களைத் தவிர்க்க உங்கள் அன்பானவர்களிடமிருந்து யோசனைகளைப் பெறுங்கள்.

மாணவர்கள் :

படிப்பில் சாதனைகள் சாத்தியமாகும். படிப்பில் உங்கள் ஈடுபாடு உங்களை உயர்நிலை அடையச் செய்யும். போட்டித் தேர்வுகளுக்கு முயற்சிப்பவர்கள்  தேர்வில் வெற்றி பெறுவது எளிதாக இருக்கும். ஒரு சிலர் தங்கள் துறைகளில் பிரகாசிக்கலாம் மற்றும் புதிய விஷயங்களைக் கண்டுபிடிப்பார்கள், அது அவர்களுக்கு புகழையும் பாராட்டையும் கொண்டு வரும். ஆராய்ச்சி அடிப்படையிலான ஆய்வுகளில் நன்றாக முன்னேறலாம். மேலும் உயர்கல்விக்காக வெவ்வேறு நாடுகளுக்கு இடம்பெயர்பவர்களுக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கலாம்.

பரிகாரங்கள் :-

  • சனிக்கிழமை உடல் ஊனமுற்றவர்களுக்கு அன்னதானம் மேற்கொள்ளுங்கள்
  • ஒவ்வொரு சனிக்கிழமையும் கணபதி, ஆஞ்சநேயர் மற்றும் விநாயகரை வழிபடுங்கள். ஹனுமார் சாலீஸாவை பாராயணம் செய்யுங்கள்.
  • சனிக்கிழமை ஏழை எளியவர்களுக்கு போர்வை மற்றும் ஆடை தானம் செய்யுங்கள்
  • அசைவம் மற்றும் மது இவற்றை சனிக்கிழமை தவிருங்கள்
  • சனிக்கிழமை நாய், காகம் மற்றும் பறவைகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் அளியுங்கள்
  • மருத்துவமனைக்கு முடிந்த அளவு தொண்டு செய்யுங்கள்   

banner

Leave a Reply