Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW

மீனம் செப்டம்பர் மாத ராசி பலன் 2020 | September Matha Meenam Rasi Palan 2020

August 11, 2020 | Total Views : 1,095
Zoom In Zoom Out Print

மீனம் செப்டம்பர் மாத பொதுப்பலன்கள்:

மீன ராசி அன்பர்களே! பொதுவாக இது உங்களுக்கு ஒரு நல்ல மாதமாக இருக்கும். ஆனால், தொழில் விஷயங்களில் மட்டும், நீங்கள் சிறு பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம். எனவே, வேலை, தொழில் தொடர்பான நடவடிக்கைகளில் அதீத தன்னம்பிக்கையைத் தவிர்க்கவும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். இருப்பினும் கோபமாகப் பேசுவது, கடும் வார்த்தைகளைப் பயன்படுத்துவது போன்றவற்றைத் தவிர்ப்பது அவசியம். தம்பதிகள் ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து செல்வதும் நல்லது. உங்களுக்குப் பலவகையிலும் தன வரவு உண்டு. முதலீடுகளும் லாபம் தரக்கூடும். வெளியூர்ப் பயணங்களாலும் நன்மை விளையக்கூடும். எதிரிகள் விலகிச் செல்வார்கள். சிலருக்கு முக்கியப் பிரமுகர்களின் நட்பும் கிடைக்கலாம். எனினும், வீடு, சொத்து, வாகன விஷயங்களில் கவனம் தேவை. உங்களில் சிலர், வாகனத்தைப் பழுது பார்த்து சரி செய்யக்கூடும். குழந்தைகள் உடல் நிலையில் பாதிப்பு உண்டாகலாம். மருத்துவ செலவுகளும் ஏற்படலாம். ஜோதிடம், ராசி பலன், நட்சத்திர பலன், இன்றைய பஞ்சாங்கம், வார ராசி பலன்கள், வருடாந்திர ராசி பலன்கள், பரிகாரங்கள் பற்றி மேலும் அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்.  

காதல் மற்றும் திருமண வாழ்க்கை:

காதலர்களுக்கிடையே மனக் கசப்புகள் வந்து நீங்கக்கூடும். எனவே, வீண் விவாதங்களைத் தவிர்ப்பது அவசியம். புதிய காதல் முயற்சிகளும், இப்பொழுது வேண்டாம். கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும் வாய்ப்புள்ளது. ஆகவே, தம்பதிகள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, அனுசரித்துச் செல்வது நல்லது.

நிதி:

பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத பண வரவுகளும் உண்டு. பரம்பரை சொத்து விஷயங்கள் சாதகமாகலாம். நீங்கள், உங்கள் குடும்பத்தினர், குழந்தைகள் ஆகிய அனைவரின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு, நீங்கள் புதிய சேமிப்பு யூகங்களை அமைத்துத் செயல்படக்கூடும். 

வேலை:

பணி சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனம் தேவை. உங்களைப் பற்றிய தவறான வதந்திகளும், விமர்சனங்களும் பரவக்கூடும். சக ஊழியர்களும் உங்களுக்கு எதிராகச் செயல்படலாம். உங்களைப் பற்றிய சில தவறான தகவல்கள், உயரதிகாரிகளைச் சென்றடையும் வாய்ப்பும் உள்ளது. எனவே, பணிகளை சரியாக திட்டமிட்டு செயல்பட்டால் நீங்கள் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம்.

தொழில்:

தொழில் நடவடிக்கைகளில் கவனத்துடன் இருப்பது நல்லது. கூட்டாளிகள் மற்றும் பணியாட்களால் தேவையற்ற பிரச்சினைகளும், விரையங்களும் ஏற்பட வாய்ப்புள்ளதால், அவர்களைக் கண்காணிப்பில் வைத்துக் கொள்வது நல்லது. இந்த நேரத்தில், நீங்கள் புதிய தொழில் முயற்சிகளைத் தவிர்ப்பதும் அவசியம்.

தொழில் வல்லுநர்கள்:

மீன ராசி தொழில் வல்லுநர்களுக்கு இந்த மாதம், சாதாரணமான ஒன்றாக இருக்கக் கூடும் உங்கள் தனித்திறன், செயல்பாடு போன்றவற்றை நிலை நிறுத்திக் கொள்வதற்காக, நீங்கள் கடுமையாகப் போராடுவீர்கள். எதிலும் உங்களுக்கு, இப்பொழுது, பொறுமை தேவைப்படும். எனினும், சேவை மனப்பான்மையுடன் நீங்கள் செயல்படும் பொழுது, உங்களுக்கு வெற்றி கிடைக்கும் வாய்ப்புள்ளது. 

ஆரோக்கியம்:

உங்கள் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. மனக்கவலை, வீண் குழப்பம், எதிர்காலம் பற்றிய பயம் ஆகியவற்றைத் தவிர்க்கவும். உங்கள் மனப் பிரச்சினைகளே உடல் பிரச்சினைகளாக வெளிப்படலாம் என்பதால், எச்சரிக்கை தேவை. மனதைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதும், யோகா, தியானம் பயில்வதும் நலம் தரும். 

மாணவர்கள்:

இந்த மாதம் மாணவர்கள், படிப்பில் தடைகளையும், பிரச்சனைகளையும் சந்திக்கக்கூடும். உங்கள் உடல் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. நண்பர்களுடன் ஏதாவது பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதால், அதிலும் கவனத்துடன் இருப்பது அவசியம். எனினும், ஆசிரியர் மற்றும் பெற்றோர்களின் அன்பும், வழிகாட்டுதலும் உங்களுக்கு உண்டு.

சுப தினங்கள் : 2,4,5,6,7,8,9,12,13,14,15,19,22,23,26,27,28,29
அசுப தினங்கள் : 1, 3, 10, 11, 16, 17, 18, 20, 21, 24, 25, 30

பரிகாரம்:

  • திருச்செந்தூர் ஸ்ரீ முருகப்பெருமான் மற்றும் சித்தர்கள் வழிபாடு, பூஜை மற்றும் ஆலயங்கள் சென்று வழிபடுதல்.
  • குரு, சனி, ராகு, கேது கிரக மூர்த்திகளுக்குப் பூஜை, ஹோமம் செய்து வழிபடுதல்.
  • மீன்களுக்கு உணவு இடுதல், பாம்புப் புற்றுக்குப் பால் வார்த்தல்.
banner

Leave a Reply

Submit Comment