AstroVed Menu
AstroVed
search
search

மகரம் செப்டம்பர் மாத ராசி பலன் 2020 | September Matha Magaram Rasi Palan 2020

dateAugust 11, 2020

மகரம் செப்டம்பர் மாத பொதுப்பலன்கள்:

மகர ராசி அன்பர்களே! இந்த மாதம் நீங்கள் சுமாரான பலன்களையே எதிர்பார்க்க முடியும். சில நேரங்களில் உங்களுக்கு மன குழப்பமும், உங்களது செயல்களில் தடுமாற்றமும் ஏற்படலாம். எனவே, அவசரப்பட்டு எந்த ஒரு முக்கிய முடிவையும் எடுக்காமல், நிதானமாகச் செயல்படுவது அவசியம். புதிய விஷயங்களைத் தொடங்கவோ, அவற்றில் தலையிடவோ வேண்டாம். வெளியூர்ப் பயணங்களையும் தவிர்ப்பது நல்லது. உங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிறு உடல் உபாதைகள் வந்து நீங்கும் வாய்ப்புள்ளது. தந்தையின் உடல்நிலையிலும் பதிப்பு உண்டாகலாம். எதிர்பாராத செலவினங்களும் ஏற்படலாம். பொதுவாக உங்கள் முயற்சிகளில் தடைகளும், பிரச்சினைகளும் எற்படலாம். எனினும், கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். ஆனால், காதல் விவகாரங்களில் கவனம் தேவை. தாய் மற்றும் உறவினர்களால் ஆதாயம் உண்டு. வீடு, வாகன சேர்க்கைக்கான முயற்சிகளும் கைகூடலாம். உங்களில் சிலர் ஆலயங்களுக்குப் புனித யாத்திரை செல்லக்கூடும். ஜோதிடம், ராசி பலன், நட்சத்திர பலன், இன்றைய பஞ்சாங்கம், வார ராசி பலன்கள், வருடாந்திர ராசி பலன்கள், பரிகாரங்கள் பற்றி மேலும் அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்.  

காதல் மற்றும் திருமண வாழ்க்கை:

காதலர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகளும், பிரச்சனைகளும் வந்து நீங்கக்கூடும். இந்த நேரத்தில் புதிய காதல் முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. உங்கள் காதலில், மற்றவர்களின் தலையீட்டையும் தவிர்க்கவும். எனினும், மணவாழ்க்கையில் தம்பதிகள், ஒருவருக்கொருவர் இணக்கமாக நடந்து கொள்வார்கள். 

நிதி:

பொருளாதார நிலையில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யப் போதுமான நிதிவசதி, உங்களிடம் இருக்கும். எனினும் வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. மற்றவர்களிடம் கொடுக்கல், வாங்கல் போன்றவற்றையும் தவிர்ப்பது நல்லது. உங்கள் மருத்துவ செலவுகள் அதிகரிக்கவும், சேமிப்புகள் குறையவும் வாய்ப்புள்ளது. எனவே எச்சரிக்கையாக இருக்கவும்.  

வேலை:

இந்த மாதம் உங்கள் வேலையில் நல்ல முன்னேற்றம் உண்டு. பணியில் எழும் அனைத்து சிக்கல்களையும், நீங்கள் துணிச்சலுடன் எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள். உங்கள் உழைப்பும் உயரதிகாரிகளால் நன்கு மதிக்கப்படும். எனினும் சக ஊழியர்களுடன் வெளிப்படையாகப் பேசுவதைத் தவிப்பது நல்லது. 

தொழில்:

உங்கள் தொழிலில் பல முன்னேற்றங்கள் ஏற்படக்கூடும். துறை சார்ந்த நிபுணர்களிடமிருந்து, உங்களுக்கு சில நல்ல ஆலோசனைகளும் கிடைக்கலாம். உங்கள் நிர்வாகத் திறமையால், அனைத்துப் பொறுப்புகளிலும் திறம்படச் செயல்பட்டு, நீங்கள் சாதனை படைப்பீர்கள். தொழிலில் ஒரு உயர்ந்த நிலையும் உங்களைத் தேடி வரக்கூடும்.

தொழில் வல்லுநர்கள்:

மகர ராசி தொழில் வல்லுநர்கள், இந்த மாதம் பல சாதனைகளைப் படைக்கும் வாய்ப்புள்ளது. உங்கள் துறையில் நீங்கள் புதுமைகளைப் புகுத்தி வெற்றி பெறக்கூடும். முக்கியமானவர்கள் சிலரின் ஆலோசனையும், வழிகாட்டுதலும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும். உங்கள் உழைப்பும், அர்ப்பணிப்பும் பலரின் பாராட்டையும் பெறக்கூடும்.

ஆரோக்கியம்:

இந்தக் காலகட்டத்தில், உங்களில் சிலருக்கு வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் உருவாக வாய்ப்புள்ளதால், உணவுக் கட்டுப்பாடு அவசியம். யோகா, தியானம் போன்ற பயிற்சிகளும் நன்மை தரும். எனினும், நீண்ட நாளாக உடல் பாதிப்படைந்த சிலரது உடல்நிலையில், இப்பொழுது நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது. 

மாணவர்கள்:

படிப்பில் நல்ல முன்னேற்றம் உண்டு. புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வதிலும், உங்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும். உங்கள் கடின உழைப்பின் பலனும் உங்களுக்குக் கிடைக்கக்கூடும். ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் ஆதரவும் கிடைக்கும். எனினும், நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்கவும். 

சுப தினங்கள் : 2,4,5,6,7,8,9,12,13,14,15,19,21,22,23,26,27,28,29
அசுப தினங்கள் : 1, 3, 10, 11, 16, 17, 18, 20, 24, 25, 30

பரிகாரம்:

  • ஸ்ரீ ஆஞ்சநேயர் மற்றும் சனி பகவான் வழிபாடு, பூஜை மற்றும் ஆலயங்கள் சென்று வழிபடுதல்.
  • சனி, குரு, ராகு, கேது கிரக மூர்த்திகளுக்குப் பூஜை, ஹோமம் செய்து வழிபடுதல். 
  • வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவுதல்.

banner

Leave a Reply