Chitra Purnima: Invoke Chitragupta’s Birthday Blessings On Full Moon Day to Erase Karmic Records JOIN NOW
Search

ரோகிணி நட்சத்திரம், ரோகிணி நட்சத்திரம் குணங்கள் ,பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்

April 23, 2020 | Total Views : 3,094
Zoom In Zoom Out Print

இந்த பூமியில் வாழ்க்கை என்னும் பாதையில் நாம் அனைவரும் பயணம் செய்தாலும் நமது இலக்கு, திசை, நோக்கம் வெவ்வேறாகத் தான் இருக்கின்றது. இதனை நாம் யாரும் மறுக்க இயலாது.  நமது உடல் இயக்கமும், நமது உள்ளம்,  உணர்வு சார்ந்த  அத்தனை இயக்கங்களும் இறையருளால் தான் நடக்கின்றது. நீங்கள் இறை நம்பிக்கை இல்லாதவர்கள் என்றால்,  அது உங்கள் சக்திக்கும் மீறிய ஒரு இயற்கை சக்தி என்று கூட நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். நமது முன்னோர்கள் வகுத்த பாதையில் நாம் நமது வசதிக்கென்று  காலத்திற்கு தக்கவாறு பல மாற்றங்களை செய்து கொண்டு வாழ்வில் முன்னேற நினைக்கிறோம். எது நம்மை வழி நடத்துகின்றது? எது நமது வாழ்க்கையை  தீர்மானிக்கின்றது?  இந்த பிரபஞ்சத்தில் ஒரு துளியாய் இருக்கும் நமது வாழ்வில் நமது அத்தனை இயக்கங்களும்  கிரகங்கள் மூலமாக,  நட்சத்திரங்கள் மூலமாக வழிநடத்தப்படுகின்றன என்று கூறினால் அது தான் நிதர்சனமான உண்மை. ஒருவருடைய ஜாதகப்படி, பிறக்கும் போது, சந்திரன் எந்த நட்சத்திரத்தின், எந்த பாதத்தில் நிற்கிறாரோ அதுவே அவருடைய ஜென்ம நட்சத்திரம் ஆகும். நமது முன்னோர்கள் ஜோதிட சாஸ்திரத்தில் 27 நட்சத்திரங்களை முக்கியமாகக் கருதினார்கள். அவற்றுள் நான்காவதாக  வரும் நட்சத்திரம் ரோகிணி நட்சத்திரம் ஆகும்.

இது வான் மண்டலத்தில் 40 பாகை முதல் 53 பாகை 20 கலை வரை வியாபித்து உள்ளது. இது ஐந்து நட்சத்திரங்களைக் கொண்டது.  இது வண்டி  போல் தோற்றமளிக்கும் நட்சத்திரம் ஆகும். ஒவ்வொரு நட்சத்திரங்களும் நான்கு பாதங்கள் கொண்டது.  இதன் நான்கு பாதங்களும் ரிஷப ராசியில் உள்ளது. இந்த நட்சத்திரத்தின் அதிபதி சந்திரன் ஆவார்.

ஒரு மனிதனின் குண இயல்புகளைத் தீர்மானிக்கும் சக்தி அந்தந்த நட்சத்திரத்திற்கு இருக்கின்றது. அதே சமயம் அந்த நட்சத்திரத்தால் ஏற்படக் கூடிய பாதிப்புகளை தாங்கிக் கொள்ளும் சக்தி பெற அல்லது நிவர்த்தி செய்து கொள்ள இறையருளால் இயலும்.

அவரவர் பிறந்த நட்சத்திரத்திற்கென்று, தேவதை, உருவகம், பறவை, மிருகம், விருட்சம் என்று உள்ளது. அந்த வகையில் ரோகிணி நட்சத்திரத்தின் அதிபதி சந்திரன். இதன் அதி தேவதை பிரம்மா.பிரம்மா படைப்புக் கடவுள் என்பதால் இவர்கள் படைப்பாற்றல் மிக்கவர்கள். இது பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த நட்சத்திரம் ஆகும். இதனால் இந்த நட்சத்திரக்காரர்களுக்கு மாமா என்றால் ஆகாது என்ற பொதுவான கருத்து நிலவுகின்றது.

இந்த நட்சத்திரம்  ஆண் பாலினத்தை சார்ந்தது.  இதன் நிறம் கருப்பு ஆகும். மனித கணத்தை சார்ந்தது.  இதன் பறவை ஆந்தை  ஆகும். இதற்கு வணங்க வேண்டிய, வளர்க்க வேண்டிய, பராமரிக்க வேண்டிய  மரம் நாவல்  மரம் ஆகும். இந்த நட்சத்திரத்தில் தோன்றியவர் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா மற்றும் பீமன் ஆவர். இந்த நட்சத்திரத்தின் வேறு பெயர்கள் : பண்டி, தேர், ஐம்மீன், வையம்

ரோகிணி நட்சத்திரம் குணங்கள்:

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கல்வியறிவு மிக்கவர்களாக இருப்பார்கள். கருணை உள்ளம் இவர்களது அடிப்படைக் குணம். ஆனால்யாருக்கும் கட்டுப்படாதவர்கள். பேச்சில் இனிமை நிரம்பி இருக்கும். திடமான மனம் உடையவர்கள். சொன்ன சொல் தவறமாட்டார்கள். உண்மையானவர்கள். பெரும்பாலும் சுக போக வாழ்வை அனுபவிப்பார்கள். தாங்கள் அதிகம் உழைத்துச் சம்பாதிப்பதை விட பிறர் சேமித்து வைத்திருக்கும் சொத்தை அனுபவிக்கும் அதிர்ஷ்டசாலிகளாக  இருப்பார்கள்.  நினைத்ததை முடித்திடும் ஆற்றல், வாய்மை, ஆகியவற்றோடு மனப்பக்குவம் நிறைந்தவராகவும்  இருப்பர்கள. அடிக்கடி நோய்வாய்ப்படுவார்கள்.

சுகபோக வாழ்க்கையை வாழும் இவர்களுக்கு, கூடவே சோம்பேறித்தனமும் அதிகமாக இருக்கும். சண்டை போடும் இரு தரப்பினரையும் இனிமையான பேச்சால் சமாதானப்படுத்தி ஒற்றுமை ஏற்படச் செய்வார்கள்.இவர்களுக்கு தண்ணீர் என்றால் மிகவும் பிடிக்கும்.  அடிக்கடி தண்ணீர் குடிக்கவும், அதிக நேரம் நீராடவும் விரும்புவார்கள். பழ ரசம் பானங்கள் போன்றவற்றை விரும்பி அருந்துவார்கள்.

இவர்கள் கற்பனை வளம் மிக்கவர்கள்.எழுத்து, கதை, கவிதை, ஓவியம், இசை, நாட்டியம், நடனம் என கலைகளில் ஆதிக்கம் செலுத்துவார்கள்.இவர்கள் அழகை ரசிப்பவர்கள். அழகானவர்களை ரசிப்பார்கள். மற்றவர்களை விமர்சிப்பார்கள். இவர்களுக்கு நிறைய குழந்தைச் செல்வம் உண்டு. வாழ்வின் மிக உயர்ந்த  அந்தஸ்துக்கு வருவார்கள்.   தான் நினைத்தவற்றை அடைவார்கள்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்

உங்கள் நட்சத்திரக் குறியீடும் உங்கள் குணங்களும்:

ஒரு நபரின் வாழ்க்கை ரகசியம் அவர் பிறந்த நட்சத்திரம் மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்து அம்ஸங்களையும் பொருத்து  அமையும். உதாரணமாக ரோகிணி  நட்சத்திரத்தின் உருவம் வண்டி(தேர்). எனவே ரோகிணிநட்சத்திரக்காரர்களுக்கு  இயல்பாகவே வாகன யோகம் அமையும். வெளியில் செல்வதற்கு பொதுப் பயன்பாட்டு வாகனங்களை பயன்படுத்த விரும்பமாட்டார்கள். உங்கள் சொந்த வாகனங்களையே பயன்படுத்துவார்கள். அது தொலைதூரப் பயணமாக இருந்தாலும், தனி வாகனம் பயன்படுத்துவதில் ஈடுபாடு கொண்டிருப்பார்கள்.

இந்த நட்சத்திரத்தின் அதிபதி சந்திரன். எனவே சந்திரன் ரோகிணி மீது கொண்ட ஆசை காரணமாக துன்பம் அடைந்தது போல இவர்களும் சில சமயம் தங்கள் ஆசைகள் காரணமாக துன்பம் அடைவார்கள்.

உங்கள் நட்சத்திர விருட்சமும் உங்கள் குணங்களும்:

ரோகிணி நடச்திரத்தின்  நட்சத்திர விருட்சம் நாவல்  மரம் ஆகும். நாவல் மரம் மிகவும் குளிர்ச்சி தரும் மரம் ஆகும். இதன் எல்லா பாகங்களும் மருத்துவ பயன் தரக் கூடியது. இந்த மரத்தை வண்டுகளும் கரு நாகங்களும் சுற்றிச் சுற்றி வரும். அது போல ரோகிணிநட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குளிர்ச்சியானவர்கள். மெல்லிய குரலில் பேசுவார்களே தவிர, அதிர்ந்து பேசமாட்டார்கள். தெளிந்த அறிவுடனும் அதி நுட்ப மதியுடனும் எந்த ஒரு செயலையும் செய்வார்கள். ரோகிணி நடச்திரத்தில் பிறந்த பெரும்பாலோர் திரைத் துறையில் பெரிய கலைஞர்களாக இருப்பார்கள். இவர்களை எப்பொழுதும் ஒரு ரசிகர்கூட்டம் சுற்றி வரும். இவர்கள் விவசாயத்தின் மூலம் அபரிமிதமான வருமானம் ஈட்டக் கூடியவர்கள்

ரோகிணி நட்சத்திரத்தின் அடையாளங்கள் :

தேர், வண்டி, கோவில், ஆலமரம் மற்றும் சக்கரம், உதயம், பசு, சூரியன் நீர், நாகம், ஆந்தை

தொழில் ஆர்வங்கள்:பத்திரிகை, ஊடகம், தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, நூலகம், காப்பீட்டு நிறுவனங்கள், வங்கிகள் போன்ற துறைகளில் பணி செய்வதில் ஆர்வம் உடையவர்கள். இவர்கள் சொந்தத் தொழில் செய்வதற்கு அதிகம் விரும்ப மாட்டார்கள். கலைத்துறையில் இவர்கள் மிகுந்த ஆர்வம் உடையவர்கள். இவர்கள் கலைத்துறை, அரசியல், இனிப்பு சார்ந்த தொழில்கள், பால் தொடர்பான தோழிகளில் ஈடுபட்டால் முன்னேற்றம் அடைவர்.

விருப்பமான செயல்கள் : பிரயாணங்கள்,  கதை, கவிதை, எழுத்து, இசை, நாடகம், நாட்டியம்,கவிதை எழுதுதல், பேச்சாளர்கள். நீரில் அதிக விருப்பம் உடையவர்கள்

நோய் :இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, மூல நோய், வாயு தொல்லை, மூச்சுப் பிரச்சினை, இதயக் கோளாறு, கண் பார்வை கோளாறு, பல் ஈறுகள் பிரச்சினை, மன அழுத்தம் போன்றவை இருக்கக்கூடும். சளித் தொல்லை, நுரையீரல் தொற்று, சளி இருமல், தலை பாரம், தலையில் நீர் கோர்த்துக் கொள்ளுதல் முதலான பிரச்சினைகளை அடிக்கடி சந்திப்பார்கள். வயிறு தொடர்பான பிரச்சினைகள் மற்றும் அஜீரணக் கோளாறு 

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் நான்கு பாதங்கள் உண்டு. ரோகிணி நட்சத்திரத்தின் நான்கு பாதங்களும் ரிஷப  ராசியில் அமைகின்றது. ஒவ்வொரு பாதத்தில் பிறந்தவர்களுக்கும் வெவ்வேறு குணநலன்கள் காணப்படும்.  அதனை இப்பொழுது காண்போம்.

ரோகிணி பாதம் :1

ஆசைகள் அதிகம் கொண்டவராகவும், பெண்களிடம் விருப்பம் கொண்டவராகவும் இருப்பார்கள். பெரும் பணக்காரர்களாக இருப்பார்கள். கற்று அறிந்தவர்கள் நட்பைப் பெறுவார்கள். நல்ல கவர்ச்சியான அழகான தோற்றம் கொண்டவர்கள்   கம்பீரமான தோற்றம் கொண்டவரகளாக இருப்பார்கள். இவர்கள் வெளியிடங்களில் அலைவதில் அதிக விருப்பம் காட்டுவார்கள். வாக்குத் திறமை உடையவர்கள்.

ரோகிணி பாதம் : 2

நல்ல சுபாவம் கொண்டவர்கள். ஆசார அனுஷ்டானங்களை பின்பற்றுபவர்கள். உண்மையானவர்கள். நீதி நேர்மையுடன் இருப்பவர்கள். மாந்திரீகம் மற்றும் சாஸ்திரங்களில் பிரியம் உடையவர்கள். பெண்களிடம் நேசம் கொண்டவர்களாக இருப்பார்கள். நல்ல திறமையான பேச்சாளர்கள். உண்மையானவர்கள். திமிரான நடத்தை உள்ளவர்கள்.

ரோகிணி பாதம் 3 :

சிறந்த கல்வி கற்றவர்களாக இருப்பார்கள். திறமை மிக்கவர்களாக இருப்பார்கள். இவர்கள் கணிதம் மற்றும் சங்கீதம் போன்றவற்றில் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். மாய வித்தை தெரிந்தவர்களாக இருப்பார்கள். கவிதை எழுதுவதில் வல்லவர்களாக இருப்பார்கள்.

ரோகிணி பாதம் :4

பிறர் சொல்லும் சொற்களை பொறுக்க மாட்டார்கள். நீதி மற்றும் நேர்மையுடன் நடந்து கொள்வார்கள். பெண்களிடம் பழகுபவர்களாக இருப்பார்கள். செல்வந்தர்களாக இருப்பார்கள். செல்வாக்குடன் இருப்பார்கள். பெருமைக்குரியவர்கள். அனைவருக்கும் தெரிந்த பிரபலமானவர்கள்.

காயத்திரி மந்திரம்

ஓம் ப்ராஜாவிருத்யைச வித்மஹே 

விச்வரூபாயை தீமஹி 

தன்னோ ரோஹினி ப்ரசோதயாத்

இந்த நட்சத்திரத்தில் செய்யும் சுப காரியங்கள்

சீமந்தம்,விருந்துண்ணுதல், உபநயனம், வித்யாரம்பம், ஆலய ஆரம்பம், கிரகப் பிரவேசம், கும்பாபிஷேகம், யாகம், நவகிரக சாந்தி, வியாபாரம், புத்தகங்கள், பத்திரிகைகள் பிரசுரம், கடன் வாங்குதல், கடன் தீர்த்தல், கிணறு வெட்டுதல், பதவி ஏற்றல், விவாகம்.

இந்த  நட்சத்திரத்தில் செய்யக் கூடாதவைகள்:

இது உத்தமமான நட்சத்திரம் என்பதால் இதில் எல்லா சுப காரியங்களையும் செய்யலாம்.

இந்த நட்சத்திரத்தின் எழுத்துக்கள் :

முதல் பாதம் ஓ

இரண்டாம் பாதம் வ

மூன்றாம் பாதம் வி

நான்காம் பாதம் வ

banner

Leave a Reply

Submit Comment