AstroVed Menu
AstroVed
search
search

ரிஷப ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2023-2026 | Rishaba Rasi Sani Peyarchi Palangal 2023-2026

dateMarch 8, 2022

ரிஷப ராசி சனி பெயர்ச்சி 2023 பொதுப்பலன் :

உங்கள் இலக்குகளை அடைய இந்த காலக்கட்டத்தில் நீங்கள் உங்கள் பொறுப்புகளை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும். உங்கள் ராசியில் இருந்து பத்தாம் வீட்டிற்கு பெயர்ச்சி ஆகிறார் சனி பகவான். பத்தாம் வீடு தொழிலை மட்டுமின்றி உங்கள் கர்மாவையும் குறிக்கும். உங்கள் ராசிக்கு சனி சுபர். அதனால் நீங்கள் நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம். என்றாலும் அதற்கேற்ற உழைப்பை நீங்கள் போட வேண்டி இருக்கும். உங்கள் உழைப்பிற்கேற்ற நல்ல பலனை நீங்கள் அடைய இயலும். அதற்கு மேல் நீங்கள் எதையும் எதிர்பார்க்க இயலாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். சனி பெயர்ச்சி 2023 இல் அதிர்ஷ்டம் பெரும்பாலும் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

  சனிப்பெயர்ச்சி 2023-2026 - சனி பெயர்ச்சி சிறப்பு ஹோமம் மற்றும் பூஜையில் பங்கு கொள்ளுங்கள்

உத்தியோகம்:

தடுக்க முடியாத சில தடைகளை நீங்கள் சந்தித்தாலும் முன்னேற்றம்  காண்பீர்கள். நீங்கள் கடினமாக உழைத்தாலும் சனி மந்தமாக பலன்களை அளிப்பார்.  சனி நீதி வழங்கக் கூடியவர். எனவே சனி உங்களை கடினமாக உழைக்கச் செய்வார். குறுக்கு வழியில்  முன்னேற்றம் காண இயலாது.  உங்கள் கடமை மற்றும் பொறுப்புகளை உணர்ந்து நடந்து கொள்ளுங்கள். பலனுக்கு பொறுமையுடன் காத்திருங்கள்

காதல் / குடும்ப உறவு:

இளம் வயது ரிஷப  ராசி அன்பர்கள் குறுகிய கால காதல் விவகாரங்களில் ஈடுபடலாம். இருப்பினும், சிலருக்கு இந்த ஆண்டு சரியான துணை கிடைக்காமல் போகலாம். மேலும் திருமணத்திற்குக் காத்திருப்பவர்கள் இந்த ஆண்டின் இறுதியில் திருமண ஏற்பாடுகள் மற்றும் திட்டங்களில் வெற்றி காணலாம். திருமணமான தம்பதியர்கள் 2022 இல் தற்காலிகப் பிரிவினையால் பாதிக்கப்படுவீர்கள். உங்களின் வேலை மற்றும் இலக்குகளுக்கான நேர  அர்ப்பணிப்பு காரணமாக நீங்கள் காதலுக்கு முக்கியத்துவம் அளிக்க இயலாமல் போகலாம். சிலருக்கு காதல் தோன்றிய வேகத்தில் மறையும். ஒரு சிலர் தங்கள் காதல் உறவில் ஏமாற்றங்களை சந்திக்க நேரும்.

திருமண வாழ்க்கை:

திருமணத்திற்குக் காத்திருப்பவர்கள் தங்களுக்கு ஏற்ற துணையை கண்டு கொள்வார்கள். திருமணமான தம்பதிகள் சில சமயங்களில் கருத்து வேறுபாடுகளை சந்திப்பார்கள். இது குடும்ப அமைதியை பாதிக்கும். சிறிது அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் உறவை வலுப்படுத்திக் கொள்ள இயலும். உடன்பிறப்புகள் உங்கள் கருத்துகளுக்கு எதிராக செயல்படுவார்கள். விட்டுக் கொடுத்தவர் கெட்டுப் போவதில்லை என்பதை கருத்தில் கொண்டு நடந்து கொள்ளுங்கள். இதன் மூலம் நல்லுறவை வளர்க்க இயலும்.

நிதிநிலை:

இந்த காலக்கட்டத்தில் உங்கள் நிதிநிலை சிறப்பாக இருக்கும். எதிர்பாராத திடீர் ஏற்றம் சந்திப்பீர்கள். உங்கள் ராசிக்கு பன்னிரண்டாம் வீட்டில் ராகு  இருப்பதால் நீங்கள் சுக போகங்களுக்காக அதிக பணம் செலவு செய்வீர்கள். எனவே உங்கள் செலவுகளில் கவனம் தேவை. உங்களில் ஒரு சிலர் கடன் வாங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளது.  கடன் வாங்கும் போது கவனமாக இருக்க வேண்டும். முதலீடுகளை மேற்கொள்ளும் போது கவனம் தேவை. விதிமுறைகளை ஒன்றிற்கு இரண்டு முறை கவனமாக படித்து பின்னர் மேற்கொள்ளவும்.

மாணவர்கள்:

உங்கள் படைப்பாற்றல் மற்றும் புத்திசாலித்தனம் வெளிப்படும். உங்கள் முயற்சிகளுக்கான அங்கீகாரம் கிட்டும். என்றாலும் உங்கள் முன்னேற்றத்தில் சில தடைகள் காணப்படும்.  எனவே முன்னேற்றம் காண மனதை ஓருமுகப்படுத்தி கவனமாக முன்னேற வேண்டும். உங்களில் ஒரு சிலர் ஆராய்ச்சி சம்பந்தமான கல்வி பயில வெளி நாடு செல்வதற்கான வாய்ப்பு உள்ளது. 

ஆரோக்கியம்:

உங்கள் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளித்து அதில் கவனம் செலுத்த வேண்டும். யோகா, தியானம் போன்றவற்றிற்கு நேரம் ஒதுக்குங்கள். சரிவிகித உணவை உட்கொள்ளுங்கள் . வயதானவர்கள் தங்கள் ஆரோக்கியத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.  

பரிகாரங்கள் :-

  • சனிக்கிழமை உடல் ஊனமுற்றவர்களுக்கு அன்னதானம் மேற்கொள்ளுங்கள்
  • ஒவ்வொரு சனிக்கிழமையும் கணபதி, ஆஞ்சநேயர் மற்றும் விநாயகரை வழிபடுங்கள். ஹனுமார் சாலீஸாவை பாராயணம் செய்யுங்கள்.
  • சனிக்கிழமை ஏழை எளியவர்களுக்கு போர்வை மற்றும் ஆடை  தானம் செய்யுங்கள்
  • அசைவம் மற்றும் மது இவற்றை சனிக்கிழமை தவிருங்கள்
  • சனிக்கிழமை நாய், காகம் மற்றும் பறவைகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் அளியுங்கள்
  • முதியோர் இல்லங்களுக்கு முடிந்த அளவு தொண்டு செய்யுங்கள்   
  • தினமும் பிரார்த்தனைக்கு நேரம் ஒதுக்குங்கள்

banner

Leave a Reply