AstroVed Menu
AstroVed
search
search

மேஷ ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2023-2026 | Mesha Rasi Sani Peyarchi Palangal 2023-2026

dateMarch 8, 2022

மேஷ ராசி சனி பெயர்ச்சி 2023 பொதுப்பலன் :

மேஷ ராசி அன்பர்களே! லாபத்தைக் குறிக்கும் வீட்டில் சனி சஞ்சரிக்கிறார். எனவே சனி உங்களுக்கு லாபங்களை அனுபவிப்பதற்கான வாய்ப்புகளை வழங்குவார் என்றாலும் அவர் உங்களை கடினமாக உழைக்கச் செய்வார். எனவே இந்த காலம் முழுவதும், உங்கள் வாழ்க்கையில் நடக்கும் அனைத்து வாய்ப்புகளுக்கும் வெற்றிகளுக்கும் எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள் இந்த காலக்கட்டத்தில் நீங்கள் அமைக்கும் இலக்குகள் மற்றும் அவற்றை நீங்கள் எவ்வாறு தொடர்கிறீர்கள் என்பதைப் பற்றி பொறுப்பாகவும் விழிப்புடனும் இருக்க வேண்டும். உங்கள் நோக்கம் என்ன, அதை எவ்வாறு அடைய விரும்புகிறீர்கள் என்பதை நீங்கள் கவனமாக புரிந்து கொள்ள வேண்டும். இந்த நேரத்தில், சில வாய்ப்புகள் உங்களுக்கு எளிதாக வரும், அனால் அவற்றை அடைய கடின உழைப்பும் பொறுமையும் அவசியம். அவற்றை முழுமையாக அடைய  நீங்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். சனி பெயர்ச்சி 2023 இல் அதிர்ஷ்டம் பெரும்பாலும் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

  சனிப்பெயர்ச்சி 2023-2026 - சனி பெயர்ச்சி சிறப்பு ஹோமம் மற்றும் பூஜையில் பங்கு கொள்ளுங்கள்

 

உத்தியோகம்:

இந்தக் காலக் கட்டங்களில் நீங்கள் அதிக பணிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். உத்தியோகத்தின் மூலம் வருமானம் பெருகும். உத்தியோகத்தில்  வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கும், மேலும் நீங்கள் பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம். நீங்கள் ஒரு தொழிலை நடத்தினால், வருமானம் மற்றும் லாபம் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன. நீங்கள் திறம்பட செயலாற்றுவீர்கள் என்றாலும் சில தடைகளை நீங்கள் தாண்ட வேண்டியதும் இருக்கும்.

காதல் / குடும்ப உறவு :

சில சமயங்களில் உங்கள் பிள்ளைகளுடன் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். நீங்கள் நல்ல உறவைப் பேண விரும்பினால் அவர்களுடன் நெகிழ்வாக இருக்க முயற்சி செய்யுங்கள். இந்த காலக் கட்டங்களில் நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய நண்பர்களைப் பெறுவீர்கள். அவர்களிடம் மனம் விட்டுப் பேசுவீர்கள். அவர்கள் மூலம் ஆதாயம்கிட்டும். உங்கள் நட்பு வட்டம் விரிவடையும்.  குடும்பத்தில் மூத்தசகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம்  வாழ்க்கைத் துணையுடன் உறவு சிறப்பாக இருக்கும்.

திருமண வாழ்க்கை:

கணவன் மனைவி பரஸ்பரம் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தும் அனுசரித்தும் நடந்து கொள்வதன் மூலம் அமைதி காணலாம்.  அதன் மூலம் நல்லிணக்க சுமுக உறவை ஏற்படுத்திக் கொள்ள இயலும். திருமண முயற்சியில் இருப்பவர்கள் சில தடைகளை சந்திக்க நேரும். தாமதங்கள் இருக்கும் என்றாலும்  நிச்சயம் திருமணம் நடக்கும்.  

நிதிநிலை :-

உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பதால் உங்கள்  நிதிநிலை சிறப்பாக இருக்கும். நீங்கள் கடினமாக உழைத்து, தெளிவாக திட்டமிட்டு முதலீடு செய்தால், உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். இருப்பினும் வருமானம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். நிதி நிலை வலுவாக இருக்கலாம், மேலும் நீங்கள் சொத்து மற்றும் சேமிப்பில் முதலீடு செய்ய முடியும். நீங்கள் வெற்றி காண இலக்குகளை அமைத்துக் கொண்டு அதனை அடைய கடின உழைப்பை மேற்கொள்ள வேண்டும்.

மாணவர்கள்:

மாணவர்கள் மனதை ஒருமுகப்படுத்தி கவனம் செலுத்தி படிக்க வேண்டும். விடா முயற்சி உங்களுக்கு வெற்றியை அளிக்கும். நீங்கள் எதிர்பார்க்கும் கல்லூரி அல்லது துறையில் சேரும் வாய்ப்பு கிட்டும். வெளிநாடு சென்று படிக்க நினைக்கும் மாணவர்கள் தங்கள் எண்ணங்கள் நிறைவேறக் காண்பார்கள். போட்டித் தேர்வு எழுத நினைக்கும் மாணவர்கள் கடின உழைப்பை மேற்கொள்ள வேண்டும்.

ஆரோக்கியம் :

இந்தக் காலக்கட்டத்தில் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என்றாலும் அதனை தக்க வைத்துக் கொள்ள நீங்கள் உடற்பயிற்சி மேற்கொள்வது நல்லது. உண்ணும் உணவில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். மூத்த வயதினர் தங்கள் உடல் நலத்தில் அக்கறை கொள்ள வேண்டும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

பரிகாரங்கள் :-

  • சனிக்கிழமை உடல் ஊனமுற்றவர்களுக்கு அன்னதானம் மேற்கொள்ளுங்கள்
  • ஒவ்வொரு சனிக்கிழமையும் கணபதி, ஆஞ்சநேயர் மற்றும் விநாயகரை வழிபடுங்கள். ஹனுமார் சாலீஸாவை பாராயணம் செய்யுங்கள்.
  • சனிக்கிழமை ஏழை எளியவர்களுக்கு ஆடை மற்றும் போர்வை  தானம் செய்யுங்கள்
  • அசைவம் மற்றும் மது இவற்றை சனிக்கிழமை தவிருங்கள்
  • சனிக்கிழமை நாய், காகம் மற்றும் பறவைகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் அளியுங்கள்
  • மருத்துவமனைக்கு முடிந்த அளவு தொண்டு செய்யுங்கள் 

banner

Leave a Reply