Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW

Rishabam Rahu Ketu Peyarchi Palangal | ரிஷபம் ராசி ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020 - 2022

May 6, 2020 | Total Views : 1,465
Zoom In Zoom Out Print

ரிஷபம் ராசி ராகு  கேது பெயர்ச்சி பலன்கள் 2020-2022:

ராகு கேது பெயர்ச்சி 2020

நவகிரகங்களில் நிழல் கிரகங்கள் என்று கூறப்படும், சர்ப்ப கிரகங்களான ராகு மற்றும் கேது, முறையே மிதுனம் மற்றும் தனுசு ராசிகளில் இருந்து, ரிஷபம் மற்றும் விருச்சிக ராசிகளுக்கு பெயர்ச்சி அடைகின்றன. இந்தப் பெயர்ச்சி 23 செப்டம்பர், 2௦2௦ புதன்கிழமை அன்று நடைபெறுகிறது. அன்றிலிருந்து அடுத்த 18 மாதங்களுக்கு, அதாவது 12 ஏப்ரல் 2௦22 செவ்வாய்க்கிழமை வரையிலான ஒன்றரை ஆண்டு காலம், ராகு ரிஷப ராசியிலும், கேது விருச்சிக ராசியிலும் சஞ்சாரம் செய்வார்கள். ரிஷப ராசியினரைப் பொறுத்தவரை, இதன் மூலம் ராகு, உங்கள் ராசியிலும், அதாவது உங்கள் ராசிக்கு முதல் வீட்டிலும், கேது உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டிலும் சஞ்சாரம் செய்வார்கள். இவற்றில், முதலாம் வீடு என்பது உங்களையும், உங்கள் தோற்றம், குணநலங்கள், வாழ்க்கை ஆகியவற்றையும், ஏழாம் வீடு என்பது, உங்கள் வாழ்க்கைத் துணை, திருமணம், தொழில், தொழில் கூட்டாளிகள், கூட்டு வியாபாரம் முதலியவற்றையும் குறிக்கும்.

உங்கள் ராகு கேது பெயர்ச்சி 2020 அறிக்கையைப் பெற இங்கே கிளிக் செய்க

நவகிரகங்களில் மற்ற கிரகங்களைப் போல, ராகு மற்றும் கேது கிரகங்களுக்கு பௌதிக வடிவம் கிடையாது. உண்மையில் இவை, சூரியன் மற்றும் சந்திரனின் சுற்று வட்டப் பாதைகளின் குறுக்கு வெட்டுப் புள்ளிகள் அல்லது முடிச்சுகள் ஆகும். இவற்றில் வடக்குப் புள்ளி அல்லது முடிச்சு ராகு எனவும், தெற்குப் புள்ளி அல்லது முடிச்சு கேது எனவும் அழைக்கப்படுகின்றன. எனவே தான், இந்த இரண்டு கிரகங்களும் நிழல் கிரகங்கள் என்று பெயரிடப்பட்டுள்ளன. இவை இரண்டும், நமது பூர்வ ஜன்ம கர்ம வினைகளையும், அவற்றை நாம் இந்த ஜன்மத்தில் எவ்வாறு அனுபவிப்போம் என்பதையும் சுட்டிக் காட்டும் கிரகங்களாகத் திகழ்கின்றன. மனித வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், இவை, ஜோதிட சாஸ்திரத்தில், அசுப கிரகங்கள் என்றே கருதப்படுகின்றன. மேலும், ராகு உலக சுக போகங்கள் மற்றும் பொருள் சார்ந்த இன்பங்களில் ஆர்வத்தை உண்டாக்கும் கிரகமாகவும், கேது, தொண்டு புரியும் மனநிலை, ஆன்மீகத் தேடல்கள் போன்றவற்றை மேம்படுத்தும் கிரகமாகவும் விளங்குகின்றன. ஒருவரது ஜாதகத்தில் இந்த இரு கிரகங்களும் ஆற்றலுடன் விளங்கும் பொழுது, அவரது எண்ணம், உணர்வு ஆகியவற்றை மாற்றியமைக்கும் வல்லமை படைத்தவையாகவும், இவை திகழ்கின்றன.எங்களது ராகு கேது பெயர்ச்சி 2020 பரிகார சேவைகளில் பங்கு பெற்று இந்த கிரகங்களின் பெயர்ச்சி நடைபெறும் நாளில், விசேஷ அர்ச்சனை, பூஜை செய்து இவர்களை வழிபடுவது,நாக வடிவங்களாகக் கருதப்படும் இந்த சர்ப கிரகங்களால் ஏற்படும் பாதிப்புக்களைக் குறைத்து, வாழ்க்கையில் முன்னேற உதவும்.

               
ரிஷப ராசி அன்பர்களே, 

ராகு உங்கள் ராசியிலேயே சஞ்சாரம் செய்வதன் பலன்! 

ராகு பகவான், இப்பொழுது, உங்களது ராசியான ரிஷப ராசிக்கே பெயர்ச்சி ஆகிறார். இது, உங்கள் முதலாவது வீடாகும். பொதுவாக இது, அணுகுமுறை, நடத்தை என இரண்டிலும் நீங்கள் கவனமாக இருக்க வேண்டிய காலமாக இருக்கும். பிறரை ஏமாற்றும் விதத்தில் நடந்து கொள்ளவும், நண்பர்கள், சமுதாயம், குடும்பம், தொழில்துறை சகாக்கள் போன்றவர்கள் மத்தியில் பெயர், புகழ் பெறுவதற்காக நேர்மையற்ற முறையில் செயல்படவும் தூண்டும் எண்ணங்களுக்குப்  பலியாகாமல் நீங்கள் இருப்பது அவசியம். உங்கள் உடல்நிலை, மனநிலை ஆகியவற்றை நன்கு கவனித்துக் கொள்வதும் நன்மை தரும். ஆரோக்கியத்தைப் பொருத்தவரை, உங்களில் சிலர், தலைப் பகுதி அல்லது அதிலுள்ள உறுப்புகள் ஆகியவை குறித்து, சிறப்பு கவனம் செலுத்த வேண்டியிருக்கலாம். எனினும், புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதிலும், புதிய சூழ்நிலைகளைச் சமாளிப்பதிலும் இப்பொழுது உங்கள் திறமை பளிச்சிடும். மேலும், உலகம் மற்றும் வாழ்க்கையைப் பற்றிய உங்கள் விழிப்புணர்வை நீங்கள் மேம்படுத்திக் கொண்டால் இந்தப் பெயர்ச்சி காலத்தில் உங்கள் அறிவாற்றல் மேலும் வளரும். ஆனால், உங்களில் சிலருக்கு சற்றே அகங்கார உணர்வு தலை தூக்கும் வாய்ப்புள்ளது. இது உங்கள் பலவீனத்திற்கும், துக்கத்திற்கும் காரணமாக அமையக் கூடும். எனவே எச்சரிக்கை தேவை. மொத்தத்தில் உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக அமைத்துக் கொள்வது உங்கள் கையில் தான் உள்ளது.

கேது உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் சஞ்சாரம் செய்வதன் பலன்! 

கேது பகவான், இப்பொழுது, உங்களது ராசியான ரிஷபத்திற்கு ஏழாம் வீடான விருச்சிக ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். அவர், அங்கு சஞ்சாரம் செய்யும் இந்தக் கால கட்டம் மகிழ்ச்சியான மற்றும் இணக்கமான உறவைப் பேணிப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நேரமாக இருக்கும். குறிப்பாக உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவைப் பேண வேண்டியது அவசியம். நீங்கள் உங்கள் துணையுடன் தேவையற்ற வாக்கு வாதத்தில் ஈடுபடும் வாய்ய்புள்ளது. ‘நான் செய்வதே சரி’ போன்ற தேவையற்ற விவாதங்கள் செய்து, உங்கள் வலிமையை நிரூபிக்கவும் நீங்கள் முயலக் கூடும். ஆனால் இதற்காக முடிவில் நீங்கள் வருத்தப்பட நேரிடும். எனவே, உங்கள் கணவர் அல்லது மனைவியுடனான பிரச்சினைகளை முடிந்தவரை இணக்கமாகத் தீர்க்க முயற்சி செய்வது பலவகையிலும் நன்மை தரும். இந்த நேரத்தில் அமைதியாகச் செயல்படுவதும் நல்ல பலனளிக்கும். தொழில் துறையில் உள்ள ரிஷப ராசி அன்பர்களுக்கு ஒரு எச்சரிக்கை! நீங்களும், உங்கள் தொழில் கூட்டாளியும் மேற்கொள்ளும் அனைத்து பரிவர்த்தனைகளிலும் நீங்கள் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். உங்கள் இருவருக்கும் இடையேயான இணக்கமான நல்லுறவை நீங்கள் மேம்படுத்திக் கொள்ளும் தேவையும் உள்ளது. அயல்நாடுகளிலோ அல்லது வெளிநாட்டு வியாபார முயற்சிகளிலோ இப்பொழுது நீங்கள் அதிக நற்பலன்களை எதிர்பார்க்க இயலாது. மேலும், இந்தக் காலக் கட்டத்தில் நீங்கள் எது சரி, எது தவறு என்பதை நன்கு பகுத்தறிந்து செயல்பட வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்வது நல்லது. 

ராகு கேது பெயர்ச்சி பரிகாரங்கள்

ராகு, கேது தோஷங்களை நிவர்த்தி செய்யவும், இவர்களின் அருளால் நற்பலன்களைப் பெறவும் 
    அர்ச்சனை
    அபிஷேகம்
    ஹோமம்
    பூஜை
ஆகியவை செய்து, ராகு கேதுவை வணங்கி வழிபடுங்கள்.மேலும் ராகு, கேது வழிபாட்டில் பங்கு கொண்டும், இந்த நிழல் கிரகங்களின் நல்லாசிகளைப் பெற்றிடுங்கள். 

ராகு கேது பெயர்ச்சி எளிய வீட்டுப் பரிகாரங்கள்

    கீழ்க்கண்ட மந்திரத்தை தினமும் 108 முறை ஜபம் செய்யவும்
‘ஓம் ஸ்ட்ரம் ஸ்ட்ரிம் ஸ்ட்ரௌம் சஹ கேதுவே நமஹ’
    செவ்வாய்க்கிழமைகள் மற்றும் சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயரை வழிபடவும்
    ஏழைகளுக்கு சமையல் எண்ணெய் தானமாக அளிக்கவும் 
    உங்கள் கழுத்து அல்லது மணிக்கட்டில் நீல நிற நூலில் சந்தனத் துண்டு ஒன்றை கட்டி அணிந்து கொள்ளவும்
    மிச்சமாகிப் போன அல்லது கெட்டுப் போன பழைய ஆகாரங்களை உட்கொள்ளாமல் தவிர்த்து விடவும் 
    முடியும் என்றால், செவ்வாய்க்கிழமைகளில் உபவாசம் (உண்ணா நோம்பு) இருக்கவும்

banner

Leave a Reply

Submit Comment