நீங்கள் சம்பாதிக்கும் பணம் விரயம் ஆகாமல் சேமிக்க வேண்டுமா? இந்த எளிய பரிகாரத்தை மேற்கொள்ளுங்கள்.

இந்த நவீன உலகில் நாம் பணத்தைத் தேடித் தான் ஓடிக் கொண்டிருக்கிறோம். பணம்இருந்தால் தான் இந்த உலகில் வாழ முடியும். அவ்வாறு தேவைப்படும் பணத்தை சம்பாதிக்க நல்ல வேலை வேண்டும். வேலையில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு, தொழில் மேன்மை, தொழிலில் லாபம் என ஒன்றன் பின் ஒன்றாக நமது தேவைகள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அவ்வாறு பணம் சம்பாதித்தால் மட்டும் போதுமா? அந்தப் பணத்தை வைத்து சொத்து சுகம் என்று வசதிகளை பெருக்கிக் கொள்ள வேண்டும். குழந்தைகளின் கல்வி, அவர்களின் வளர்ச்சி, திருமணம் என அனைத்திற்கும் பணம் தேவைப்படுகிறது. மேலும் நமது எதிர்கால பாதுகாப்பிற்கு பணத்தை சேமிக்க வேண்டும். அப்பப்பா! பணத்தின் தேவை தான் எவ்வளவு உள்ளது. நாம் அடுக்கிக் கொண்டே போகலாம்.
அந்த பணத்தை சம்பாதிக்கவும், சம்பாதித்த பணத்த பத்திரமாக பாதுகாக்கவும், சேமிக்கவும் பணம் பெருகவும் ஓரு எளிய தாந்த்ரீக பரிகாரம் ஒன்றை பார்ப்போம்.
பணத்தை ஈர்க்கவும், திருமகளின் அருளைப் பெறவும் நீங்கள் இந்த எளிய பரிகாரத்தை மேற்கொள்ளுங்கள். பணம் வைப்பதற்கென்று தனியாக ஒரு கண்ணாடி இருக்கும் சிறிய பணப் பெட்டி அல்லது பெட்டியின் உட்புறம் பார்த்தால் நமது முகம் தெரியம் வகையிலான எவர்சில்வர் பெட்டி ஒன்றை கடையில் வாங்கி அதில் ஒவ்வொரு மாதமும் சிறிது பணத்தை போட்டுக் கொண்டே வாருங்கள். அந்த பெட்டியை நீங்கள் திறந்து பார்க்கும் போது பணம் பிரதிபலிக்க வேண்டும். அந்தப் பெட்டியில் நீங்கள் முதல் தடவை பணம் போடும் போது ஒரு சிறிய அளவிலான சிகப்பு பட்டுத் துணியை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் எட்டு கிராம்பு போட்டு சுற்றி வைத்துக் கொள்ளுங்கள். பிறகு அதனை பணப் பெட்டியில் வைத்து விடுங்கள். மாதம் ஒரு முறை கிராம்பை மாற்றுங்கள். வெளியே எடுக்கும் கிராம்பை ஓடும் நீரில் விட்டு விடுங்கள். இதனை நீங்கள் புதன், வியாழன், வெள்ளிக்கிழமைகளில் செய்யலாம்.
இவ்வாறு செய்து வந்தால் நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த காசு வீண் விரயம் ஆகாமல் பன் மடங்கு பெருகும். சுப காரியங்களுக்காக மட்டுமே செலவு செய்ய நேரும்.
