இந்த எண்கள் உள்ள மூன்று நோட்டுகள் கிடைத்தால் அதை தவற விடாமல் உடனே உண்டியலில் வைத்து விடுங்கள். நீங்கள் வைக்கும் ஒவ்வொரு ரூபாயும் பல மடங்கு பெருகும்.
உணவு, உடை, இருப்பிடம் என்ற இந்த மூன்றும் மனிதனின் அத்தியாவசியத் தேவைகள் என்று கூறலாம். என்றாலும் இந்த நவீன உலகில் நமது பல தேவைகள் அத்தியாவசியத் தேவைகளாக மாறி விட்டன. உதாரணமாக மின்னணு சாதனங்கள். இவை மனிதனிடம் இருந்து பிரிக்க முடியாததாக உள்ளது. இது மட்டும் இன்றி இன்னும் எத்தனையோ பொருட்கள் நமக்கு அவசியமாக தேவைப்படுகின்றன. இவை அனைத்தையும் பெற நமக்கு பணம் மிகவும் அவசியம் ஆகின்றது. மேலும் முதுமைக் காலத்தில் நமது தேவைக்கென்று பணம் சேமிக்க வேண்டிய கட்டாயமும் உள்ளது. இந்த பணத்தை சம்பாதிப்பதிலும், சேமிப்பதிலும் தான் நமது முழு கவனமும் உள்ளது என்று கூறினால் கூட மிகை ஆகாது. இந்த பணத்தை எப்படி ஈர்ப்பது. அதற்கான வழி உண்டெனில் யாருக்குத் தான் கசக்காது சரி இப்பொழுது பணத்தை எவ்வாறு ஈர்ப்பது என்பதற்கான எளிய பரிகாரத்தைப் பார்ப்போம்.
பணம் என்பது எண்களைக் கொண்டது. நாம் பிறந்த தேதி, மாதம் வருடம் என அனைத்திலும் எண்கள் உள்ளது. எனவே எண்ணிற்கும் நமக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. பிறந்த தேதியின் கூட்டுத் தொகையே உங்கள் பிறவி எண் அல்லது உடல் எண் ஆகும். உதாரணமாக நீங்கள் 19 ஆம் தேதியில் பிறந்து இருந்தால் அதன் கூடுதல் எண் 1 ஆகும். இது உங்கள் பிறவி எண் அல்லது உடல் எண் ஆகும். 19.03.1999 உங்கள் பிறந்த தேதி எனில் அதன் கூட்டுத் தொகை 1+9+3+1+9+9+9 =5 ஆகும்.இது உங்கள் விதி எண் ஆகும். உங்கள் பெயர் S.Arun என்றால் பெயரின் கூட்டுத் தொகை 3+1+2+6+5 = 8 ஆகும். இது உங்கள் பெயர் எண் ஆகும்.
பிறவி எண் =1 விதி எண் = 5 பெயர் எண் =8
உங்களிடம் வரும் ரூபாய் நோட்டில் கடைசி எண் முறையே 1, 5, 8 என முடிய வேண்டும்.இந்த எண்களில் முடியும் மூன்று நோட்டுகளை நீங்கள் பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். அதனை ஒரு உண்டியலில் போட்டுக் கொள்ள வேண்டும். அதனை செலவு செய்தல் கூடாது.
மேலும் அந்த உண்டியலில் புதனை வேண்டி 3 வெந்தயம்,லக்ஷ்மி தேவியை வேண்டி பச்சை கற்பூரம் சிறய துண்டு மற்றும் 1 ஏலக்காய் குபேர பகவானை வேண்டி 1 கிராம்பு போட வேண்டும். மேலும் செலவுகள் சுப செலவுகளாக இருக்க 2 சிறிய டைமண்ட் கல்கண்டு போட வேண்டும். இந்த பரிகாரத்தை புதன் கிழமை காலை பிரம்ம முகூர்தத்தில் செய்வது நல்லது.
இந்த பரிகாரம் செல்வத்தை ஈர்க்கும். மனதில் நம்பிக்கையோடு முயற்சி செய்து பாருங்கள். உங்கள் இல்லத்திலும் செல்வம் செழிக்கும்.
உங்கள் பெயர் எண்ணைக் கண்டுபிடிக்க ஆங்கில எழுத்துக்களுக்கான எண்கள் :
A,L,J,Q,Y=1
B,K,R =2
C,G,L,S =3
D,M,T = 4
E,H,N,X =5
U,V,W = 6
O,Z = 7
F, P = 8

Leave a Reply