AstroVed Menu
AstroVed
search
search
x
cart-added The item has been added to your cart.

மேஷம் அக்டோபர் மாத ராசி பலன் 2023 | October Matha Mesham Rasi Palan 2023

dateSeptember 21, 2023

மேஷம் அக்டோபர் மாத பொதுப்பலன்கள் 2023::

மேஷ ராசி அன்பர்களே! நீங்கள் இந்த மாதம்  பொதுவாக உங்கள் திருமண வாழ்க்கையில் கவனம் செலுத்துவீர்கள். மேலும் உங்கள் உறவை நல்லிணக்க உறவாக அமைத்துக் கொள்ள உறவை மறுசீரமைக்கவும் முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உங்கள் எதிரிகளுக்கு எதிரான வெற்றியை பெறுவதற்கும் கிடைத்த வெற்றியை தக்க வைத்துக் கொள்வது பற்றியும் நீங்கள் கவலைப்படலாம். வாகனங்கள் தொடர்பான விஷயங்கள்  சிறப்பான பலனைத் தரும். இருப்பினும், இந்த மாதம் உங்களுக்கு உங்கள் தந்தை மற்றும் பயனற்ற பயணங்கள் தொடர்பான டென்ஷன்கள் இருக்கலாம். உங்களுக்கு கவலையை ஏற்படுத்தக்கூடிய எதிர்பாராத நிகழ்வுகள் இருக்கலாம்.

காதல் / குடும்ப உறவு :

காதல் மற்றும் உறவு விஷயங்களில் மாற்றங்கள் இருக்கலாம்.  மேலும் உங்கள் உணர்வுகளை முழு மனதுடன் வெளிப்படுத்தும் வகையில்  மனதில் உற்சாகமும் புதிய ஆற்றலும் இருக்கும். இந்த மாதத்தில் உங்கள்  வாழ்க்கையில் புதிய துணையை நீங்கள் சந்திக்கலாம். திருமண வாழ்வில் தம்பதியினரிடையே புரிதல் மேம்படும். இந்த மாதம், உங்கள் மனமும் இதயமும் அன்பு மற்றும் காதலால் நிறைந்திருக்கும்.

திருமண உறவில் நல்லிணக்கம் காண : சுக்கிரன் பூஜை

நிதிநிலை :

உங்களுக்கு பல்வேறு மூலங்களிலிருந்து வரும் பணவரவால் உங்கள் நிதி நிலையில்  நல்ல முன்னேற்றத்தைக் காணலாம். நீங்கள் முக்கியமாக உறவுகளுக்காகவும் உங்கள் தந்தைக்காகவும் செலவு செய்யலாம். உங்கள் கடந்தகால வாழ்க்கையின் நல்ல செயல்களின் காரணமாக நீங்கள் நல்ல அதிர்ஷ்டத்தையும் யோகத்தையும் பெற  முடியும் என்பதால், முதலீடு மற்றும் வர்த்தகம் மூலம் நீங்கள் நல்ல தொகையை சம்பாதிக்கலாம். இந்த மாதத்தில் உங்கள் கடன்களை அதிக அளவில் குறைக்கலாம்.

உங்கள் நிதிநிலை மேம்பட : பிருகஸ்பதி பூஜை

உத்தியோகம் :

உங்களின் உத்தியோக வாழ்க்கை இந்த காலகட்டத்தில் சாதகமான மாற்றத்தை அடையலாம். இந்த மாதம் பதட்டங்களுக்கு ஒரு இறுதி கட்டமாக இருக்கலாம். அதன் பிறகு பணியிடத்தில் மன அழுத்தம் அதிக அளவில் குறையலாம்.  இருப்பினும், இந்த குறுகிய காலத்தில்  சோதனை நேரங்களை கடக்க நீங்கள் மனதளவில் தயாராக இருந்தால் அது உங்களுக்கு உதவும். உங்கள் உத்தியோகத்தில்  உங்கள் கடின உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்க ஆரம்பிக்கலாம். உங்கள் குழுத் தலைவர் அல்லது மேலதிகாரி மாறலாம்.

தொழில் :

உங்களால் மேற்கொள்ளப்படும் வியாபாரத்தில் இந்த மாதம் சில சாதகமான முன்னேற்றங்கள் உண்டாகும். வியாபாரத்தில் நிர்வாக நுட்பங்களில் மாற்றம் ஏற்படலாம். வியாபாரக் கடன்களும் குறையலாம். உங்கள் விருப்பப்படி வாடிக்கையாளர் எண்ணிக்கையும் அதிகரிக்கலாம். நீங்கள் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகளையும் சேர்த்துக்கொள்ளலாம். இருப்பினும்,இந்த மாதத்தில் உங்கள் யோசனைகள் பயனற்றதாகத் தெரிகிறது, இது ஒரு தற்காலிக நிகழ்வாக இருக்கலாம்.

தொழில் வல்லுனர்கள் :

மேஷ ராசிக்காரர்கள் தங்கள் தொழிலில் நல்ல காலகட்டத்தைக் கொண்டிருக்கலாம், கூட்டாளர்களிடமிருந்து புதிய யோசனைகள் வரும். ஒரு  சிலர் தங்கள் தொழில்முறை கூட்டாளர்களில் மாற்றத்தை கருத்தில் கொள்ளலாம். வாடிக்கையாளர்கள் தொழில்நுட்ப சிக்கல்களைப் புரிந்துகொண்டு, உங்களின் தொழில்முறை சேவைகளில் நம்பிக்கை/திருப்தி பெறலாம். இந்த மாதத்தில் உங்களுக்கு  பண வருமானம் போதுமானதாக இருக்கும்.  எதிரிகள் மீது வெற்றியைத் தொடரலாம்.

உத்தியோகம் மற்றும் தொழிலில் சிறந்து விளங்க : புதன் பூஜை

ஆரோக்கியம் :

இந்த மாதம் உங்களின் உடல்நிலையில் படிப்படியான முன்னேற்றம் காணப்படும். நீங்கள் மனதளவில் நிம்மதியாக இருக்கலாம். ஆனால் அடிக்கடி பயணம் செய்வதால் உடல் அளவில் சோர்வு  ஏற்படலாம்.

உங்கள் ஆரோக்கியம் மேம்பட : சூரியன் பூஜை

மாணவர்கள் :

மாணவர்கள் தங்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். அவர்களின் செயல்திறன் சிறப்பாக இருக்கும்.  மனதில் நம்பிக்கை அதிகரிக்கும்.  இது அவர்களின் தேர்வுகளில் பிரதிபலிக்கக்கூடும். கூடுதல் திறமைகளைப் பெற சில சான்றிதழ் படிப்புகள் மற்றும் மென் திறன் படிப்புகளை நீங்கள் செய்யலாம்.  இந்த மாதத்தில் நீங்கள் கல்வி விஷயங்களில் மிகவும் எதிர்பார்க்கப்படும் முன்னேற்றத்தைக் காணலாம்.

கல்வியில் சிறந்து விளங்க : ராகு பூஜை

சுப தேதிகள் : 5, 6, 7, 8, 9, 13, 14, 15, 16, 22, 23, 24 & 25.

அசுப தேதிகள் : 1, 2, 17, 18, 19, 26, 27, 28 & 29.


banner

Leave a Reply