AstroVed Menu
AstroVed
search
search

மேஷம் நவம்பர் மாத ராசி பலன் 2022 | November Matha Mesham Rasi Palan 2022

dateOctober 14, 2022

மேஷம் நவம்பர் மாத பொதுப்பலன்கள் 2022

மேஷ ராசிக்காரர்களுக்கு 2022 நவம்பரில் பழைய வாகனங்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. மேற்படிப்புக்கு சேர விரும்பும் மாணவர்கள் வெளிநாட்டில் உயர்கல்வியைத் தொடர வாய்ப்புகள் கிடைக்கும். வெளிமாநிலங்களில் வேலை வாய்ப்பு தேடுபவர்களுக்கும் அங்கே பொருத்தமான வேலை கிடைக்கும். உங்கள் தாயாருக்கு அஜீரணக் கோளாறு போன்ற பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன, எனவே துரித உணவைத் தவிர்ப்பது நல்லது.

காதல்/ குடும்ப உறவு

அன்பின் மென்மையான உணர்வு சில இதயங்களில் மலரலாம். மேலும் இது உங்கள் காதல் உணர்வுகளை வெளிப்படுத்த ஏற்ற மாதமாகத் தெரிகிறது. உங்கள் அன்பும் இப்போது பலனளிக்கலாம். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் வரலாம். இவை குறுகிய காலத்திற்கு மட்டுமே இருந்தாலும், உங்கள் வெளிப்பாட்டில் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் உள்ள அனைத்து நிதி சார்ந்த பிரச்சனைகளும் இந்த மாதம்  தீர்க்கப்படும்.

காதல் உறவு மேம்பட சுக்கிரன் பூஜை

நிதிநிலை

தொழிலதிபர்கள் அல்லது சுயதொழில் செய்பவர்கள் இந்த மாதம் வேலை செய்பவர்களை விட சிறந்த பணவரவைக் கொண்டிருக்கலாம். உயர்கல்வி, நீதி, மருத்துவம் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வெளிநாடுகளில் ஏற்றுமதி செய்யும் தொழிலில் ஈடுபடுபவர்களும் கணிசமான வருமானம் ஈட்டுவார்கள் என்று நம்பலாம்.   

நிதி நிலையில் உயர்வு பெற ராகு பூஜை

உத்தியோகம்:

அரசு உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வுடன் வேலையில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. தனியார் துறையில் பணிபுரிபவர்கள் மேலதிகாரிகளுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்வார்கள். உயர் அதிகாரிகள் பணியிடத்தில் கூடுதல் பொறுப்புகளை உங்களிடம் ஒப்படைக்கலாம். அதை நீங்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வீர்கள். 

தொழில்

 இறக்குமதி வியாபாரம் செய்பவர்கள், முக்கியமான வணிகம் தொடர்பான முடிவுகளை எடுப்பதற்கு முன், நன்மை தீமைகளை கவனமாக ஆராய்வது நல்லது. உங்கள் தந்தையால் தொடங்கப்பட்ட தொழிலை விரிவுபடுத்தலாம் மற்றும் இந்த மாதம் குறிப்பிடத்தக்க லாபத்தைப் பெறலாம்.  

தொழில் வல்லுனர்கள்

தனியார் வேலைகளில் ஈடுபடும் மேஷ ராசிக்காரர்களுக்கு வெளிநாட்டில் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும். இருப்பினும், சில அரசு ஊழியர்கள் வெளிமாநிலங்களில் இருந்து பணிபுரிய வேண்டிய வாய்ப்புகள் பெறுவார்கள். சமீபகாலமாக மருத்துவத் துறையில் பணிபுரிபவர்கள் அதிகப் பணிச்சுமையைத் தாங்க வேண்டியிருக்கும்.       

உத்தியோகம் மற்றும் தொழிலில் ஏற்றம் காண சூரியன் பூஜை

ஆரோக்கியம்:

இந்த மாதம் மாசு காரணமாக ஆஸ்துமா போன்ற உடல் நலப் பிரச்சினைகள்  உங்களுக்கு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. கூடுதலாக, நீங்கள் அஜீரணத்தால் பாதிக்கப்படலாம். எனவே, துரித உணவுப் பொருட்களைத் தவிர்ப்பது நல்லது. தியானம் மற்றும் உடல் பயிற்சிகள் உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும்.

நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு வைத்தியநாத பூஜை

மாணவர்கள்:

பள்ளி மாணவர்கள் படிப்பில் கவனம் சிதறும் வாய்ப்பு உள்ளது. படிப்பில் அர்ப்பணிப்பு மற்றும் பாடங்களில் முழு கவனம் செலுத்துவது அவர்களின் கல்வி முயற்சிகளில் வெற்றிபெற உதவும். கலை மற்றும் அறிவியல் மாணவர்கள் தங்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களுடன் வெற்றி பெறலாம். ஆராய்ச்சி மாணவர்கள் வெளிநாட்டில் தங்கள் ஆராய்ச்சிப் பணியைத் தொடர வாய்ப்புகளைப் பெறலாம்.

கல்வியில் சிறந்து விளங்க புதன் பூஜை

சுப தேதிகள் : 3, 4, 5, 6, 8, 10, 11, 13, 14, 15, 26, 28, 29, 30

அசுப தேதிகள் : 1, 2, 7, 9, 12, 16, 17, 18, 23, 24, 25, 27


banner

Leave a Reply