AstroVed Menu
AstroVed
search
search

நவராத்திரியின் ஒன்பது நாளுக்குரிய தேவிகளுக்கான வழிபாட்டு மந்திரங்கள்

dateOctober 21, 2023

நவராத்திரி மிகவும் முக்கியமான மற்றும் புனிதமான இந்து பண்டிகைகளில் ஒன்றாகும். இது துர்கா தேவியின் ஒன்பது வெவ்வேறு வடிவங்களைக் கொண்டாடுகிறது மற்றும் ஒன்பது இரவுகள் வியாபித்து இருக்கிறது.  எனவே 'நவ்' (ஒன்பது) 'ராத்திரி' (இரவு) என்று பெயர். இது தீய சக்திகளின் அழிவு மற்றும் நேர்மறை ஆற்றல்களின் பரிமாற்றத்தை குறிக்கிறது. ஒன்பது நாட்களில் பூஜை செய்யும் முறை மற்றும் பலவற்றைப் பற்றி அறிய இந்தக் கட்டுரையைப் படியுங்கள்.

புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரியை சாரதா நவராத்திரியாக கொண்டாடுகிறோம். இது வெறும் பண்டிகையாக மட்டுமின்றி பக்தி, நல்லிணக்கம், ஒற்றுமை, பகிர்ந்தளித்தல் போன்ற பண்புகளையும் பண்பின் அடையாள விழாவாகவும் கொண்டாடுகிறது. துர்கா தேவி தீமைகளை அழித்து, வாழ்வில் உள்ள இருளை போக்கி, ஒளியை தரக் கூடியவள். அவளின் அருளை பெறுவதற்குரிய காலமே நவராத்திரி ஆகும்.

சிவாகமம் கூறும் நவராத்திரி

முதல் மூன்று நாட்கள் துர்க்கைக்கும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமிக்கும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதிக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. பத்தாவது நாளான விஜயதசமி, வாழ்க்கையின்  மூன்று அம்சங்கள் மீதும் வெற்றியடைவதை குறிக்கிறது.

∙ நவராத்திரியில் முதல் மூன்று நாளும் இச்சா சக்தியின் தோற்றமான துர்க்கையின் ஆட்சிக் காலம். இதில் இறைவன் உலகத்தை வாழ்விக்க விரும்புகின்றான்.

∙ நடுவில் உள்ள மூன்று நாட்களும் ஞானசக்தியின் தோற்றமான இலக்குமியின் ஆட்சிக்காலம். இதில் இறைவன் ஆன்மாக்களுக்கு தனு, கரண, புவன போகங்களைக் கொடுக்கும் முறையை அறிகின்றான்].

∙ இறுதி மூன்று நாட்களும் கிரியா சக்தியின் தோற்றமான சரஸ்வதியின் ஆட்சிக்காலம். இதில் இறைவன் முன் அறிந்தவாறு அருள் வழங்குகின்றான்.

நவராத்திரியின் துர்கா பூஜை

நவராத்திரியை துர்கா பூஜையாகவும் கொண்டாடுவார்கள். அதாவது நவராத்திரியின் ஒன்பத நாட்களும் துர்க்கா தேவியின் ஒன்பது வடிவங்களையும் வழிபடுவதுண்டு.நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் தெய்வீக பெண் சக்தியான துர்கா தேவியின் ஒரு குறிப்பிட்ட வடிவத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. நவராத்திரியின் போது வணங்கப்படும் ஒன்பது அவதாரங்கள் ஷைலபுத்ரி, பிரம்மச்சாரிணி, சந்திரகாண்டா, கூஷ்மாண்டா, ஸ்கந்தமாதா, காத்யாயனி, காலராத்திரி, மகாகௌரி மற்றும் சித்திதாத்ரி.இந்த ஒன்பது தேவிகளையும் வழிபடுவதால் ஒவ்வொரு விதமான பலன் கிடைக்கும். இந்த தேவிகளை மொத்தமாக வழிபடுவதால் அனைத்து விதமான நன்மைகளும், செல்வ வளமும், மகிழ்ச்சியும் கிடைக்கும். குறைகளே இல்லாத நிறைவான, ஒளிமயமான வாழ்க்கையை தேவி பராசக்தி வழங்கிடுவாள் என்பது நம்பிக்கை.

நவராத்திரி மந்திரங்கள் :

நவராத்திரி முதல் நாள் சைலபுத்திரி

பீஜ மந்திரம் -ஓம் ஷம் ஷைலபுத்ரி தேவ்யாய நமஹ

ஓம் ஹ்ரீம் ஸ்ரீ ஷைலபுத்ரி துர்காயே நமஹ
ஓம் தேவி ஷைல்புத்ர்யை ஸ்வாஹா
வந்தே வஞ்சித் லாபாய், சந்த்ரார்தக்ரித்ஷேகராம்
விருஷாருதாம் சூல்தாராம் ஷைல்புத்ரீம் யஷஸ்வினீம்

நவராத்திரி 2ம் நாள் பிரம்மச்சாரினி

பீஜ மந்திரம் - ஹ்ரீம் ஸ்ரீம் அம்பிகையே நமஹ

ஓம் ஹ்ரீம் ஸ்ரீ ப்ரஹ்மச்சாரிணி துர்காயே நமஹ
ஓம் தேவி பிரம்மசாரிண்யை நமஹ
ததானா கர் பத்மாப்யாமக்ஷ்மாலா கமண்டலோ
தேவி ப்ரஸீதது மயி ப்ரஹ்மசாரிண்யனுத்தமா

நவராத்திரி 3ம் நாள் சந்திரகாந்தா

பீஜ மந்திரம் - ஐன் ஸ்ரீம் ஷக்தயே நமஹ

ஓம் ஹ்ரீம் ஸ்ரீ சந்த்ர காண்டா துர்காயே நமஹ
ஓம் தேவி சந்த்ரகாண்டாயை நமஹ
பிண்டஜ் ப்ரவாரூத் சந்த்கோபஸ்த்ர்கைர்யுத
ப்ரஸாதம் தனுதே மத்யம் சந்த்ரகாண்டேதி விஷ்ருதா

நவராத்திரி 4ம் நாள் கூஷ்மாண்டா

பீஜ மந்திரம் - ஐம் ஹ்ரீம் தேவ்யே நமஹ

ஓம் ஹ்ரீம் ஸ்ரீ கூஷ்மாண்ட துர்காயே நமஹ
ஓம் தேவி கூஷ்மாண்டயாயை நம:
ஸுரஸம்பூர்ண கலசம் ருத்திராப்லுதமேவ் ச
ததாநா ஹஸ்த்பத்மாப்யாம் குஷ்மாண்ட ஶுப்தாஸ்து மே

நவராத்திரி 5ம் நாள் ஸ்கந்தமாதா

பீஜ மந்திரம் - ஹ்ரீம் க்லீம் ஸ்வாமினியே நமஹ

ஓம் ஹ்ரீம் ஸ்ரீ ஸ்கந்த மாதா துர்காயே நமஹ
ஓம் தேவி ஸ்கந்தமாதாயை நமஹ்
சிங்கஸங்கதாம் நித்யம் பத்மஞ்சித் கர்த்வாயா
சுப்தாஸ்து சதா தேவி ஸ்கந்தமாதா யஷஸ்வினி

நவராத்திரி 6ம் நாள் காத்யாயனி

பீஜமந்திரம் – க்லீம் ஸ்ரீ த்ரினித்ரயே நமஹ

ஓம் ஹ்ரீம் ஸ்ரீ காத்யாயனி துர்காயே நமஹா
ஓம் தேவி காத்யாயந்யாயை நம:
சந்த்ரஹாஸோஜ்வல் கரா ஷர்துல்வர்வாஹனா
காத்யாயனி ஷுபம் தத்யாத் தேவி தானாவகாதினி

நவராத்திரி 7 ம் நாள் காலாத்ரி

பீஜ மந்திரம் - க்லீம் ஐம் ஸ்ரீ காளிகாயே நமஹ

ஓம் தேவி கல்ராத்ர்யாயை நமஹ
ஏக்வேணி ஜபகர்ண்பூர நக்ன கரஸ்திதா
லம்போஷ்டி கர்ணிகா கர்ணி
தைலாப்யக்தஷரீரிணி வாம் படோல்லசல்லோஹ்லதா காந்தக்பூஷணா
பர்தன் மூர்தம் த்வஜா கிருஷ்ணா கல்ராத்ரிர்பயங்கரி

நவராத்திரி 8 ம் நாள் மகாகெளரி

பீஜ மந்திரம் - ஸ்ரீம் க்லீம் ஹ்ரீம் வரதாயே நமஹ

ஓம் தேவி மஹாகௌர்யாயை நமஹ ஷ்வேதே விருஷேசமாருத ஷ்வேதாம்பரதர ஶுசிஹ்
மஹாகௌரி ஷுபம் தத்யன்மஹாதேவ் ப்ரமோதாதா
சரவ மங்கள மாங்கல்யே ஷிவே ஸர்வார்த்த ஸாதிகே ஶரண்யேயி த்ரயம்பகே கௌரி நாராயணி நமோஸ்துதே

நவராத்திரி 9 ம் நாள் சித்திதாத்ரி

பீஜ மந்திரம் - ஹ்ரீம் க்லீம் ஐம் சித்தாயே நமஹ

ஸித்த கந்தர்வ யக்ஷத்யைரசுரைரமரைரபி

சேவ்யமானா ஸதா ஸித்திதாத்ரிவ ஸம்தேஸ்யமானா

ஸதா ஸித்திதா ஸித்திதாப் ஸ்திதாநமஸ்தஸ்யை

நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ


banner

Leave a Reply