நவரத்தின மாலை அணிவதால் கிடைக்கும் பலன்கள்!

உலகத்தில் நூற்றுக்கணக்கான கற்கள் இருந்தாலும் அவற்றில் சில வகைக் கற்களே மக்களுக்கு நன்மைகளை கொடுக்கும் என ஆன்றோர்கள் கண்டு அறிந்துள்ளனர். இவைகள் தான் மிக ஆற்றல் கொண்ட கற்கள் ஆகும். மேலும் நல்ல அதிர்வுகளைக் கொண்டது. இது வரையிலும் வகை வகையான கற்களை மனிதர்கள் பயன்படுத்தி உள்ளனர். இந்த இரத்தினங்களில் நவ இரத்தினங்களும் அடங்கும். நவ இரத்தினங்களை விலை உயர்ந்த கற்கள் என்றும் மற்ற வகைக் கற்களை உப இரத்தினங்கள என்றும் பிரித்துள்ளனர். அதிர்ஷ்டத்தை மேன்மேலும் பெருகச் செய்யும் ஆற்றல் மிக்கவை நவரத்தினங்கள் ஆகும். நவரத்தினங்களில் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வோர் ஆற்றல் உண்டு. நவரத்தின மாலையால் கிடைக்கும் பலன்கள் குறித்து விரிவாக அறியலாம்.
நவரத்தினங்கள் மற்றும் அவற்றின் தன்மைகள்
நவரத்தின மாலை ஒன்பது வகையான அதிசய ரத்தினங்களால் ஆனது. ஒவ்வொரு ரத்தினமும் தனித்துவமான சக்திகளைக் கொண்டு நம் வாழ்வில் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.
நவரத்தின மாலையில் இடம்பெறும் ஒன்பது ரத்தினங்கள்:
மாணிக்கம் (சூரியன்): மாணிக்கம் சூரியனை பிரதிநிதித்துவப்படுத்துகிறது,. மாணிக்கத்திற்கு ஆங்கிலத்தில் ரூபி (RUBY) என்று பெயர். இது சிகப்பாக இருக்கும் இரத்தினங்களில் ஒன்று இது நல்ல ஆரோக்கியத்தையும் உயிர்ச்சக்தியையும் வழங்கும் என்று நம்பப்படுகிறது.
முத்து (சந்திரன்): இது கடலில் விளையும் இரத்தினம் ஆகும். இது இயற்கை ரத்தினம் வகையில் சேர்ந்தது ஆகும். இது சந்திரனின் சக்தியை ஆகர்ஷிக்கும் இரத்தினம் ஆகும் சந்திரனை குறிக்கும் முத்து, மன அமைதியையும் சமநிலையையும் தருகிறது.
சிகப்பு பவளம் (செவ்வாய்): பவளத்தை அணிந்தால் இரத்த சிகப்பணுக்கள் கூடுகின்றது. உடலில் சுறுசுறுப்பும் உண்டாகிறது. செவ்வாய் தோஷமுடையவர்களும், மனத் தளர்ச்சியடைபவர்களும், எடுக்கும் முயற்சிகளில் வெற்றியினைப் பெறவும், நிலையான ஐஸ்வர்யத்தை அடைய விரும்புபவர்களும் பவளக்கல்லை அணியலாம்.செவ்வாயுடன் தொடர்புடைய இக்கல், தைரியமும் வெற்றியையும் வழங்கும் என்று கூறப்படுகிறது.
மரகதம் (புதன்): மரகதக் கல்லின் ஆங்கிலப் பெயர் எமரால்ட். இது பச்சை நிறமுள்ளது.புதனை பிரதிநிதித்துவப்படுத்தும் மரகதம் அறிவுத்திறனை மேம்படுத்துவதாக நம்பப்படுகிறது. மரகதக் கல் ஒருவரின் மனோபலத்தையும், உள்ளுணர்வையும் அதிகப்படுத்தும். ``
மஞ்சள் பவளம் (குரு): இது குரு பகவானுக்கு உரிய இரத்தினம் ஆகும். குருவின் ஆதிக்கத்திலிருந்து வரும் கதிர்களை உறிஞ்சி குருவின் திருவருளை கனக புஷ்ப ராகம் பெற்று தருகிறது, இது, ஞானம் மற்றும் செழிப்புடன் தொடர்புடையது.
வைரம் (சுக்ரன்): வைரத்தின் ஆங்கிலப் பெயர் டைமண்ட் ஆகும். இது இரத்தினங்களில் மிகவும் விலை உயர்ந்தது. ஒளி மிக்கது.சுக்ரனை குறிக்கும் வைரம் அழகும் ஆடம்பரமும் வழங்குவதாக கருதப்படுகிறது.
நீல பவளம் (சனி): சனியின் கல், ஒழுக்கம் மற்றும் நெகிழ்வுடன் தொடர்புடையது. நீல கற்கள் பொறாமை மற்றும் கண் திருஷ்டியை விரட்டும். சுகமான ஆபத்தில்லாத பயணங்களைத் தரும். மன அமைதி அளிக்கும்.
கோமேதகம் (ராகு): இது குளிர்ச்சி தன்மை கொண்டது. தோஷமற்ற கோமேதகம் அணிவதால், அது பயங்கரமான எதிரிகளைக்கூட வெல்லக்கூடிய ஆற்றலைக் கொடுக்கும். உடல் ஆரோக்கியமும், நல்ல செல்வச் செழிப்பும் உண்டாகும்.குழப்பத்தை அகற்றி தெளிவை வழங்கும்.
வைடூரியம் (கேது): வைடூரியத்திற்கு கேட்ஸ்ஐ என்ற ஆங்கிலப் பெயர் கேதுவை பிரதிநிதித்துவப்படுத்தும் இக்கல், ஆன்மீக விழிப்புணர்வையும் மறைமுக சதிகளிலிருந்து பாதுகாப்பையும் வழங்குகிறது.
நவரத்தின மாலையின் ஆன்மீக பலன்கள்
நவரத்தின மாலையை அணிவதால் உடல் நலன், மனநலன், செல்வச் செழிப்பு போன்ற பல நன்மைகள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
நவரத்தின மாலையின் பயன்கள்:
∙ தீய ஆற்றலை நீக்கும்
∙ உடல் நலன், மனநலன் மேம்படும்
∙ கோள்களின் தாக்கத்தை குறைக்கும்
∙ வாழ்க்கையில் செல்வச் செழிப்பு கிடைக்கும்
∙ சமநிலையான சக்திகளை அளிக்கும்
∙ மன அமைதி அளிக்கும்
∙ நல்ல உடல் நலத்தை அளிக்கும்.
∙ தொழிலில் வளர்ச்சி ஏற்படுத்தும்
∙ குடும்ப ஒற்றுமையை அதிகரிக்கும்.
தீய ஆற்றலை நீக்கும்: நவரத்தினங்கள் அதிர்வலையை வெளிப்படுத்தும். ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு ஆற்றல் உண்டு. இந்த அதிர்வலைகள் நம்முள்ளும் நம்மைச் சுற்றி இருக்கும் எதிர்மறை ஆற்றலை விலக்கக் கூடியது. அதன் மூலம் நேர்மறை ஆற்றல் பெருகும். நம்மால் புத்துணர்ச்சியுடன் செயல்பட முடியும்.
உடல் நலன் மேம்படும்: இந்த நவரத்தினக் கற்கள் உடல் நலனை மேம்படுத்தும். உடல் நலன் மட்டும் இன்றி மன நலத்தையும் மேம்படுத்தும் தன்மை கொண்டது இந்த நவரத்தினக் கற்கள்.
கோள்களின் தாக்கத்தை குறைத்தல்: ஒவ்வொரு ரத்தினமும் ஒரு குறிப்பிட்ட கிரகத்துடன் தொடர்புடையது. நவரத்தின மாலை அணிவதால், கிரகங்களின் தீய தாக்கங்களை குறைத்து, நல்ல பலன்களை பெறலாம் என நம்பப்படுகிறது.
செல்வச் செழிப்பு : இதன் தாக்கங்கள் மற்றும் அதிர்வலை காரணமாக நம்மைச் சிறப்பாக செய்லபட வைக்கும். மற்றும் வாழ்க்கையில் செல்வச் செழிப்பை ஏற்படுத்தும். :
சக்திகளை சமநிலைப்படுத்துதல்: நவரத்தினங்கள் நம் உடலில் உள்ள சக்திகளை சமநிலைப்படுத்தி, நேர்மறை ஆற்றலை அதிகரிக்கின்றன.
மன அமைதி: நவரத்தினங்கள் மனதை அமைதிப்படுத்தி, மன அழுத்தத்தை குறைக்கின்றன.
உடல் நலம்: நவரத்தினங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, பல வகையான நோய்களிலிருந்து பாதுகாக்கின்றன.
தொழில்: நவரத்தின மாலை தொழில் வளர்ச்சிக்கு உதவுகிறது என நம்பப்படுகிறது.
குடும்ப ஒற்றுமை: குடும்பத்தில் அமைதி மற்றும் ஒற்றுமையை ஏற்படுத்துகிறது.
நவரத்தின மாலையை அணியும்போது கவனிக்க வேண்டியவை
ஜாதகப் பொருத்தம்: ஒவ்வொரு நவரத்தினமும் ஒரு குறிப்பிட்ட கிரகத்துடன் தொடர்புடையது. நம் ஜாதகத்தில் எந்த கிரகங்கள் பலமாக இருக்கின்றன, எந்த கிரகங்கள் பலவீனமாக இருக்கின்றன என்பதை அறிந்து கொண்டு, அதற்கேற்ப நவரத்தினங்களை தேர்வு செய்ய வேண்டும்.
தரமான ரத்தினங்கள்: நல்ல தரமான ரத்தினங்களை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும்.போலியான ரத்தினங்களை பயன்படுத்தக் கூடாது.
சுத்தமாக வைத்திருத்தல்: நவரத்தின மாலையை சுத்தமாக வைத்திருப்பது அவசியம்.
பூஜை: நவரத்தின மாலையை அணிவதற்கு முன், அதை பூஜித்து வழிபடுவது நல்லது.
ஜோதிட ஆலோசனை: நவரத்தின மாலை அணிவதற்கு முன், ஒரு ஜோதிடரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.
