நவகிரகங்களின் தன்மைகள்
வானியலில் பல கோள்கள் இருந்தாலும் ஜோதிடத்தில் நவ (ஒன்பது) கோள்கள் முக்கியமானதாக கருதப்படுகிறது. அவை: சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன் (குரு) சுக்கிரன், சனி, ராகு மற்றும் கேது. இவற்றுள் ராகு மற்றும் கேது கோள்கள் அல்ல. அவை வட திசை மற்றும் தென் திசை முடிச்சுகளாக கருதப்படுகின்றன. நவகிரகங்களின் தன்மைகள் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

சூரியன்.
ஒன்பது கோள்களுள் முதன்மையானவர். ஆத்மகாரகன் என்று அழைக்கப்படுபவர்.ஆண் கோள். நெருப்பு கோள். காசியப முனிவரின் குமாரர். ஒளிப் பிழம்பாக காட்சி தருபவர். .
சிம்மராசிக்கு அதிபதி. நவகிரகங்களில் நடுவில் அமர்ந்திருப்பவர்.
சூரிய பகவானின் தன்மைகள்
காரகம் – பிதா
தேவதை – சிவன்
அதிதேவதை – அக்னி
பிரத்யதி தேவதை – ருத்திரன்
க்ஷேத்திரம் – ஆடுதுறை
நிறம் – சிவப்பு
வாகனம் – ஏழு குதிரைகள் பூட்டிய ரதம்
தானியம் – கோதுமை
புஷ்பம் – செந்தாமரை
சமித்து – எருக்கு
திக்கு – கிழக்கு
வஸ்திரம் – சிவப்பு
இரத்தினம் – மாணிக்கம்
பஞ்சபூதம் – நெருப்பு
அங்கம் - மார்பு
தாது – எலும்பு
சுவை – காரம்
உலோகம் – தாமிரம்
குணம் – சாத்வீகம்
ஸ்ரீ சூரிய பகவானின் காயத்ரி மந்திரம்:-
ஓம் அஸ்வ த்வஜாய வித்மஹே:
பாச ஹஸ்தாய தீமஹி
தன்னோ சூர்ய ப்ரசோதயாத்.
2.சந்திரன்.
சந்திரன் மனோகாரகன். நீர் கோள் . பாற்கடலில் தோன்றியவர். தண்ணொளி உடையவர் . வளர்பிறையில் சுபராகவும், தேய்பிறையில் பாபராகவும் விளங்குபவர்.
கடக ராசிக்கு அதிபதி.
சந்திர பகவானின் தன்மைகள்
காரகம் – மாதா
தேவதை – பார்வதி
அதிதேவதை – நீர்
பிரத்யதி தேவதை – கெளரி
க்ஷேத்திரம் – திருப்பதி
நிறம் – வெண்மை
வாகனம் – முத்து விமானம்
தானியம் – பச்சரிசி, நெல்
புஷ்பம் – வெள்ளை அல்லி
சமித்து – முருக்கு
திக்கு – தென் கிழக்கு
வஸ்திரம் – வெள்ளை
இரத்தினம் – முத்து
பஞ்சபூதம் – நீர்
அங்கம் - தோள்
தாது – இரத்தம்
சுவை – இனிப்பு
உலோகம் – ஈயம்
குணம் – சாத்வீகம்
ஸ்ரீ சந்திர பகவானின் காயத்ரி மந்திரம்:-
ஓம் பத்ம த்வஜாய வித்மஹே:
ஹேம ரூபாய தீமஹி
தன்னோ ஸோம ப்ரசோதயாத்.
3 . அங்காரகன் (செவ்வாய்)
இவர் நெருப்புக் கோள். வீரபத்திரர் அம்சம். சுப்ரமணியரை தெய்வமாகக் கொண்ட இவர், பாவ பலனைக் கொடுக்கும் குரூரர். தன்னம்பிக்கை, உடல் பலம், அகங்காரம் ஆகியவற்றிற்கு காரகர்.
மேஷம் , விருச்சிக ராசிகளுக்கு அதிபதி.
செவ்வாய் பகவானின் தன்மைகள்
காரகம் – சகோதரம்
தேவதை – சுப்பிரமணியர்
அதிதேவதை – பூ தேவி
பிரத்யதி தேவதை – க்ஷேத்ராதிபதி
க்ஷேத்திரம் – வைத்தீஸ்வரன் கோவில்
நிறம் – சிவப்பு
வாகனம் – அன்னம்
தானியம் – துவரை
புஷ்பம் – செண்பகம்
சமித்து – கருங்காலி
திக்கு – தெற்கு
வஸ்திரம் – சிவப்பு
இரத்தினம் – பவழம்
பஞ்சபூதம் – நெருப்பு
அங்கம் - தலை
தாது – மஜ்ஜை
சுவை – துவர்ப்பு
உலோகம் – செம்பு
குணம் – சாத்வீகம்
ஸ்ரீ செவ்வாய் பகவானின் காயத்ரி மந்திரம்:-
ஓம் வீர த்வஜாய வித்மஹே:
விக்ன ஹஸ்தாய தீமஹி
தன்னோ பௌம ப்ரசோதயாத்.
4.புதன்.
இவர் சந்திரனுடைய குமாரர். நில தத்துவக் கோள். புத்தி கூர்மை, கற்றல், கற்பித்தல் போன்றவற்றுக்கு காரகன். அலி கோள். தீய கிரகங்கள் விளைவிக்கும் பீடைகளை அழிக்கும் ஆற்றல் இவருக்கு உண்டு.
மிதுனம், கன்னி ராசிகளுக்கு அதிபதி
புதன் பகவானின் தன்மைகள்
காரகம் – மாமன்
தேவதை – விஷ்ணு
அதிதேவதை – விஷ்ணு
பிரத்யதி தேவதை – நாராயணன்
க்ஷேத்திரம் – மதுரை
நிறம் – பச்சை
வாகனம் – குதிரை
தானியம் – பச்சைப்பயறு
புஷ்பம் – வெண்காந்தள்
சமித்து – நாயுருவி
திக்கு – வடகிழக்கு
வஸ்திரம் – பச்சை பட்டு
இரத்தினம் – மரகதம்
பஞ்சபூதம் – நிலம்
அங்கம் - கழுத்து
தாது – தோல்
சுவை – உவர்ப்பு
உலோகம் – பித்தளை
குணம் – ராஜசம்
ஸ்ரீ புதன் பகவானின் காயத்ரி மந்திரம்:-
ஓம் கஜ த்வஜாய வித்மஹே:
சுக ஹஸ்தாய தீமஹி
தன்னோ புத ப்ரசோதயாத்.
5.குரு.
இவர் ஆண் கோள் தேவ குரு என்னும் பட்டத்தை உடையவர். இவருடைய பார்வையால், தோஷங்கள் அனைத்தும் நீங்கும். பூரண சுபர்.புத்திரம், அறிவு விருத்திக்கு காரகன். ஆகாயத் தத்துவம்
தனுசு , மீன ராசிகளுக்கு அதிபதி.
குரு பகவானின் தன்மைகள்
காரகம் – புத்திரம்
தேவதை – பிரம்மன்
அதிதேவதை – இந்திரன்
பிரத்யதி தேவதை – பிரம்மன்
க்ஷேத்திரம் – ஆலங்குடி, திருச்செந்தூர்
நிறம் – மஞ்சள்
வாகனம் – யானை
தானியம் – கடலை
புஷ்பம் – முல்லை
சமித்து – அரசு
திக்கு – வடக்கு
வஸ்திரம் – மஞ்சள்
இரத்தினம் – புஷ்பராகம்
பஞ்சபூதம் – ஆகாயம்
அங்கம் - வயிறு
தாது – மூளை
சுவை – தித்திப்பு
உலோகம் – பொன்
குணம் – சாத்வீகம்
ஸ்ரீ குரு பகவானின் காயத்ரி மந்திரம்:-
ஓம் விருஷப த்வஜாய வித்மஹே:
க்ருணி ஹஸ்தாய தீமஹி
தன்னோ குரு ப்ரசோதயாத்.
6.சுக்கிரன்.
இவர் அசுர குரு. பெண் கோள். நீர்க் கோள் அல்லது மழைக்கோள் என்றும் இவரை அழைப்பர். சுபர். அழகு, கலை ஆடம்பரத்திற்குக் காரகன்.
ரிஷபம்,துலாம் ராசிகளுக்கு அதிபதி.
சுக்கிர பகவானின் தன்மைகள்
காரகம் – களத்திரம்
தேவதை – லக்ஷ்மி
அதிதேவதை – விஷ்ணு
பிரத்யதி தேவதை – இந்திராணி
க்ஷேத்திரம் – இந்திரன்
நிறம் – வெண்மை
வாகனம் – கருடன்
தானியம் – மொச்சை
புஷ்பம் – வெண்தாமரை
சமித்து – அத்தி
திக்கு – கிழக்கு
வஸ்திரம் – வெண் பட்டு
இரத்தினம் – வைரம்
பஞ்சபூதம் – நீர்
அங்கம் - முகம்
தாது – இந்திரியம்
சுவை – தித்திப்பு
உலோகம் – வெள்ளி
குணம் – ராஜசம்
ஸ்ரீ சுக்கிர பகவானின் காயத்ரி மந்திரம்:-
ஓம் அஸ்வ த்வஜாய வித்மஹே:
தநுர் ஹஸ்தாய தீமஹி
தன்னோ சுக்கிர ப்ரசோதயாத்.
7.சனி
இவர் சூரியனுடைய குமாரர். அலி கோள். ஈசுவர பட்டம் பெற்றவர். சனியைப் போல கெடுப்பாரும் இல்லை, கொடுப்பாரும் இல்லை என்பது பழமொழியாகும்.சுப பலனோ கெடு பலனோ நியாயமாக அளிப்பவர். ஆயுள், சுய கட்டுப்பாடு மந்தத்துக்கு காரகன்.
மகரம் , கும்பம் ராசிகளுக்கு அதிபதி.
சனி பகவானின் தன்மைகள்
காரகம் – ஆயுள்
தேவதை – எமன்
அதிதேவதை – பிரஜாபதி
பிரத்யதி தேவதை – எமன்
க்ஷேத்திரம் – திருநள்ளாறு
நிறம் – கருப்பு
வாகனம் – காக்கை
தானியம் – எள்
புஷ்பம் – கருங்குவளை
சமித்து – வன்னி
திக்கு – மேற்கு
வஸ்திரம் – கருப்பு பட்டு
இரத்தினம் – நீலம்
பஞ்சபூதம் – காற்று
அங்கம் - தொடை
தாது – நரம்பு
சுவை – கசப்பு
உலோகம் – இரும்பு
குணம் – தாமசம்
ஸ்ரீ சனீஸ்வரர் காயத்ரி மந்திரம்:-
ஓம் காக த்வஜாய வித்மஹே:
கட்க ஹஸ்தாய தீமஹி
தன்னோ மந்த ப்ரசோதயாத்.
8.ராகு
இவர் அசுரத்தலையும் , நாக உடலும் உடையவர். மிக்க வீரம் உடையவர். கருநாகம் என்று அழைக்கப் படுபவர். தந்தை வழி முன்னோர்கள், பிரம்மாண்டம், விஷம் ஆகியவற்றுக்கு காரகன். பெண் கோள்.
ராகு பகவானின் தன்மைகள்
காரகம் – பிதாமகன்
தேவதை – பத்திரகாளி
அதிதேவதை – சர்ப்பம்
பிரத்யதி தேவதை – நிருருதி
க்ஷேத்திரம் – காளஹஸ்தி
நிறம் – கருப்பு
வாகனம் – ஆடு
தானியம் – உளுந்து
புஷ்பம் – மந்தாரை
சமித்து – அறுகு
திக்கு – தென் மேற்கு
வஸ்திரம் – கருப்பு
இரத்தினம் – கோமேதகம்
பஞ்சபூதம் – ஆகாயம்
அங்கம் - முழங்கால்
சுவை – புளிப்பு
உலோகம் – கருங்கல்
குணம் – தாமசம்
ஸ்ரீ ராகு பகவானின் காயத்ரி மந்திரம்:-
ஓம் நாக த்வஜாய வித்மஹே:
பத்ம ஹஸ்தாய தீமஹி
தன்னோ ராகு ப்ரசோதயாத்.
9.கேது
இவர் நாகத்தலையும் அசுர உடலும் உடையவர். சிகி என்றும் , செந்நாகம் என்றும் அழைக்கப்படுபவர். தாய் வழி முன்னோர்கள், மன வெறுப்பு ஆகியவற்றுக்கு காரகன்.
கேது பகவானின் தன்மைகள்
காரகம் – மாதாமகன்
தேவதை – இந்திரன்
அதிதேவதை – பிரம்மன்
பிரத்யதி தேவதை – சித்திர குப்தன்
க்ஷேத்திரம் – காளஹஸ்தி
நிறம் – சிகப்பு
வாகனம் – சிங்கம்
தானியம் – கொள்ளு
புஷ்பம் – செவ்வல்லி
சமித்து – தரப்பை
திக்கு – வடமேற்கு
வஸ்திரம் – பல வர்ணம்
இரத்தினம் – வைடூரியம்
பஞ்சபூதம் – நீர்
அங்கம் - உள்ளங்கால்
சுவை – புளிப்பு
உலோகம் – துருக்கல்
குணம் – தாமசம்
ஸ்ரீ கேது பகவானின் காயத்ரி மந்திரம்:-
ஓம் அஸ்வ த்வஜாய வித்மஹே:
சூல ஹஸ்தாய தீமஹி
தன்னோ கேது ப்ரசோதயாத்











