AstroVed Menu
AstroVed
search
search
x
cart-added The item has been added to your cart.

திருவண்ணாமலை கிரிவலம் வருவதன் பலன்கள்

dateSeptember 20, 2023

“நினைத்தாலே முக்தி தரும்” தலம் திருவண்ணாமலை. பஞ்சபூத தலங்களுக்குள் இது நெருப்புக்குரிய தலம். இங்கு மலையே இறைவனின் சொரூபமாக உள்ளது. திருவண்ணாமலை தலத்தைச் சுற்றி 1008 லிங்கங்கள் புதைந்து இருப்பதாகக் கூறப்படுகிறது. திருவண்ணாமலை ஈசனை மனதில் தினமும் நினைத்தால் நிச்சயம் முக்தி கிடைக்கும் என்று மார்க்கண்டேய முனிவரிடம் நந்தி பகவான் அருளியுள்ளார். திருவண்ணாமலை கிரிவலம் மிகவும் பிரசித்தி வாய்ந்த ஒன்று ஆகும்.

அருணாச்சலத்தைச் சுற்றிவருதல்:

திருவண்ணாமலையில் நடைபெறும் இந்தப் புனிதகிரி வல யாத்திரை 16ஆம் நூற்றாண்டில் இருந்து வழக்கத்தில் உள்ளது எனலாம். 1845 ஆம் ஆண்டிலேயே இந்த ஆலயத்தின் பெருமை மனித இனத்திற்கு நன்கு தெரிந்திருந்தது. அருணாசலத்தின் மகிமை பற்றி மக்கள் அப்பொழுதே அறிந்து கொண்டிருந்தார்கள்.பகதர்கள் எப்படி, எப்போது புனித மலையை சுற்றி வர வேண்டும் என்பது பற்றி சிவபெருமானே கௌதமரிடம் கூறியதாக ஓரு ஐதீகம். எல்லா தேவர்களும், முனிகளும் சுற்றி வரும் அருணாச்சலராக அவர் பூமியில் மகிமையுடன் இருக்கிறார் . கிரிவல பாதையில் ஒருவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும், தனது கடந்த ஜென்மத்தில் செய்த பாவங்களில் இருந்து நிவர்த்தி பெறுகிறார்கள். .

கிரிவலம் எப்படி செய்ய வேண்டும்:

இங்கு பெரிய லிங்கத்தைத் தியானித்து, மெதுவாகச் சுற்றி வர வேண்டும். கிரிவலத்தை தவறாது செய்யும் ஒருவன் மீண்டும் பிறக்க மாட்டான், நிச்சயமாக சிவபெருமானுடன் நித்தியமாக ஒன்றாவான். கிரிவலம் சுற்றும் போது கவனமாக, மெதுவாக, சத்தமில்லாமல் நடக்க வேண்டும். குளித்து முடித்து சுத்தமான ஆடைகளை உடுத்தி, புனித சாம்பலை உடலில் பூசி, ருத்ராட்ச மணிகளை அணிந்து கொள்ள வேண்டும். சுற்றி வரும்போது சிவனை தியானிக்க வேண்டும். இந்த முறையில் சுற்றி வரும் ஒரு பக்தருடன் ஆயிரக்கணக்கான வெல்ல முடியாத மனுக்கள், தேவர்கள் சித்தபுருஷர்கள் மற்றவர்கள் உடன் வருவதாக ஐதீகம். சிவபெருமானின் திருநாமங்களைப் பாடிக்கொண்டும் நடனமாடிக்கொண்டும் பக்தர்கள் செல்லலாம்.

ஒரு மண்டலம் அதாவது நாற்பத்தி எட்டு நாட்கள் மலையை வலம் வருவது சிறப்பு. இதை செய்ய முடியாத ஒருவர் பதினோரு நாட்கள் கிரி பிரதக்ஷிணை செய்யலாம். இதுவும் முடியாவிட்டால், தீப நாளில் திருவண்ணாமலை மலையைச் சுற்றி வர வேண்டும். இது கோடிக்கணக்கான யாகங்கள் செய்வதற்குச் சமம். மலை உச்சியில் ஏற்றப்பட்ட தீபத்தை வழிபடுபவர் எண்ணற்ற புண்ணியங்களைப் பெறுகிறார்.

கிரிவலம் செய்வதன் பலன்கள் :

புனித மலையை வலம் வருவதன் மூலம், அனைத்து தீர்த்தங்களிலும் நீராடிய பலன் மற்றும் ஆயிரக்கணக்கான அஸ்வமேத யாகங்கள் செய்த புண்ணியத்தைப் பெறலாம்.

ஞாயிற்றுக்கிழமையன்று திருவண்ணாமலை மலையை வலம் வரும் பக்தர் சூரிய மண்டலத்தை ஊடுருவி முக்தி அடைகிறார். அவன் சிவலோகத்தைப் பெறுகிறான்.திங்கட்கிழமையன்று மலையை வலம் வருபவர் முதுமை மற்றும் இறப்பு போன்ற துன்பங்களிலிருந்து விடுபடுகிறார். செவ்வாய்கிழமையன்று மலையை வலம் வருபவர் அனைத்து கடன்களிலிருந்தும் விடுபட்டு சக்கரவர்த்தி ஆகிறார். புதன் கிழமையில் பிரதக்ஷிணை செய்தால் அவர் சர்வ ஞானியாக மாறுகிறார். வியாழன் அன்று அனைத்து தேவர்களாலும் வணங்கப்பட்டு குருவாக புகழ் பெறுகிறார். வெள்ளிக்கிழமையன்று வலம் வருவது செழிப்பைத் தருகிறது மற்றும் அவரை விஷ்ணுவின் இருப்பிடத்திற்கு அழைத்துச் செல்கிறது. சனிக்கிழமை பிரதக்ஷிணை உலக வெற்றியைத் தருகிறது மற்றும் ஒருவரின் ஜாதகத்தில் கிரகங்களால் ஏற்படும் தீமைகளைத் தடுக்கிறது. உடல், மனநலம் பாதிக்கப்பட்டவர்களும், உடல் தளர்ச்சியுடையவர்களும், இவரைத் தரிசனம் செய்தால், அவர்களின் நோய்கள் குணமாகும்.

கார்த்திகை மாதத்தில், பிரதோஷ காலத்தில் கிருத்திகை நட்சத்திரத்தன்று  கிரி பிரதட்சிணம் செய்யும் அதிர்ஷ்டசாலிகள் மீண்டும் பிறப்பதில்லை. மலையை சுற்றி வருவதால் தீய கர்மங்கள் அனைத்தும் அழிந்துவிடும்.

கிரிவலம் வரும் பாதையில் அஷ்ட லிங்கங்கள் உள்ளன. அவற்றையும் தரிசிக்க வேண்டும்.  அஷ்ட லிங்கங்கள் பற்றிக் காண்போம்.

  1. பெயர் : இந்திர லிங்கம்

மூலஸ்தான திசை : கிழக்கு

நிறுவியவர் : தேவர்களின்தலைவன் இந்திரன்  

நவகிரகம் : சூரியன் மற்றும் சுக்கிரன்

வழிபாட்டின் பலன்கள் : நீண்ட ஆயுள் மற்றும் புகழ்

 

  1. பெயர் : அக்னி லிங்கம்

அதிஷ்டான திசை : தென்கிழக்கு

நிறுவியவர் : அக்னி தேவன்

நவகிரகம் : சந்திரன்  

வழிபாட்டின் பலன்கள் : நோய் மற்றும் பயத்திலிருந்து நிவாரணம்

 

  1. பெயர் : யம லிங்கம்

மூலஸ்தான திசை : தெற்கு

நிறுவியவர் : மரணத்தின் கடவுள் யமன்

நவகிரகம் : செவ்வாய்

வழிபாட்டின் பலன்கள் : நீண்ட ஆயுள்

 

  1. பெயர் : நிருதி லிங்கம்

அதிஷ்டான திசை : தென்மேற்கு

நிறுவியவர் : பூதங்களின் தலைவன் நிருதி

நவகிரகம் : ராகு

வழிபாட்டின் பலன்கள் : ஆரோக்கியம், செல்வம் மற்றும் புகழ், குழந்தைப் பேறு.

 

  1. பெயர் : வருண லிங்கம்

அதிஷ்டான திசை : மேற்கு

நிறுவியவர் : மழையின் ஆதிக்க கடவுள் வருணன்

நவகிரகம் : சனி

வழிபாட்டின் பலன்கள் : நோய் குறிப்பாக நீர் சம்பந்தமான நோய்களில் இருந்து நிவாரணம்

 

  1. பெயர் : வாயு லிங்கம்

அதிஷ்டான திசை : வடமேற்கு

நிறுவியவர் : வாயு, காற்றின் கடவுள்

நவகிரகம் : கேது

வழிபாட்டின் பலன்கள் : நோய் குறிப்பாக இதய நோய், சுவாசம் மற்றும் வயிற்று பிரச்சனைகளில் இருந்து நிவாரணம்

 

  1. பெயர் : குபேர லிங்கம்

மூலஸ்தான திசை : வடக்கு

நிறுவியவர் : செல்வத்தின் கடவுள் குபேரன்

நவகிரகம் : குரு

வழிபாட்டின் பலன்கள் : செல்வம் மற்றும் வாழ்வில் முன்னேற்றம்

 

  1. பெயர் : ஈசான்ய லிங்கம்

அதிஷ்டான திசை : வடகிழக்கு

நிறுவியவர் : ஈசான்யன் (சிவன்)

நவகிரகம் : புதன்

வழிபாட்டின் பலன்கள் : மன அமைதி

 


banner

Leave a Reply