ஆபத்துக்களை அடியோடு நீக்கும் நரசிம்மர் காயத்ரி மந்திரம்

மந்திரங்களில் சிறந்தது காயத்ரி மந்திரம் ஆகும். ஒவ்வொரு கடவுளுக்கும் வெவ்வேறு காயத்ரி மந்திரம் உள்ளது. இதனை நாள் தோறும் பாராயணம் செய்வதன் மூலம் பல நன்மைகள் கிட்டும். இந்தப் பதிவில் நாம் காண இருப்பது நரசிம்மரின் காயத்ரி மந்திரம் ஆகும்.
விஷ்ணு பகவானின் ஒன்பது அவதாரங்களில் நான்காவது அவதாரம் ஸ்ரீ நரசிம்ம அவதாரம் ஆகும். ஸ்ரீ நரசிம்மரின் காயத்ரி மந்திரத்தை தினமும் பாராயணம் செய்து வருவதன் மூலம் அவரின் அருளாசிகளைப் பெற இயலும்.
சகல ஐஸ்வர்யங்கள் தரும் லட்சுமி நரசிம்மர் காயத்ரி மந்திரம்
ஓம் வஜ்ரநகாய வித்மஹே
தீக்ஷ்ணதம்ஷ்ட்ராய தீமஹி
தன்னோ நாரசிம்ஹாய ப்ரசோதயாத்
ஓம் உக்ரந்ருசிம்ஹாய வித்மஹே
வஜ்ரநகாய தீமஹி
தன்னோ ந்ருசிம்ஹ ப்ரசோதயாத்
ஓம் வஜ்ரநகாய வித்மஹே
தீக்ஷ்ணதன்ஷ்ட்ராய தீமஹி
தன்னோ ந்ருசிம்ஹ ப்ரசோதயாத்
ஓம் நாரசிம்ஹாய வித்மஹே
வஜ்ரநகாய தீமஹி
தன்னோ விஷ்ணுஹ் ப்ரசோதயாத்
ஓம் கராளிணிச வித்மஹே
நாரசிம்ஹ்யைச தீமஹி
தன்னோ சிம்ஹே ப்ரசோதயாத்.
இந்த காயத்ரி மந்திரங்களை தினமும் பாராயணம் செய்வது நல்லது. குறிப்பாக சுவாதி நட்சத்திரம் அன்று இதனைப் பாராயணம் செய்வதன் மூலம் சகல சௌபாக்கியங்களும் கிட்டும். விஷ்ணுவிற்கு உகந்த நாளான புதன் கிழமை அன்று இந்த காயத்ரி மந்திரத்தை கூறி வழிபட்டால், நினைத்த காரியம் வெற்றியில் முடியும்.
