AstroVed Menu
AstroVed
search
search

கடன் பிரச்சனை தீர கூற வேண்டிய ருண விமோசன மந்திரம்

dateJuly 31, 2023

உலகில் அதர்மம் தலை தூக்கும் போதெல்லாம் மகா விஷ்ணு அவதாரம் எடுத்ததாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது. அந்த வகையில் மகாவிஷ்ணு எடுத்த 4-வது அவதாரம் நரசிம்ம அவதாரம். தனது பக்தன் பிரகலாதனைக் காக்க தூணில் இருந்து சிங்க முகத்தோடு கூடிய நரசிம்மர் வெளிப்பட்டார். பிற அவதாரங்களைக் காட்டிலும் நரசிம்ம அவதாரம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.

நாம் பிறக்கும் போதே கடனுடன் தான் பிறக்கிறோம். தேவ கடன் ரிஷி கடன், பித்ரு கடன் என மூன்று கடன்களைக் கூறுவார்கள். இந்தக் கடன்கள் தீரும் போது நமது பிரச்சினைகளும் தீர்கிறது.

பிரச்சினைகள் யாவும் நீங்கி மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ ருண விமோசன மந்திரம் உதவும். ருணம் என்றால் கடன் விமோசனம் என்றால் விடுபடுதல். எந்த வகைக் கடனாக இருந்தாலும் அதில் இருந்து விடுபட ருண விமோசன மந்திரம் உதவும்.

ருண விமோசன மந்திரம்

தேவதாகார்ய ஸித்யர்த்தம் ஸபாஸ்தம்ப ஸமுத்பவம்

ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே

லக்ஷ்ம்யாலிங்கித வாமாங்கம் பக்தாநாம் வரதாயகம்

ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே

ஆந்த்ரமாலாதரம் சங்க சக்ராப்ஜாயுத தாரிணம்

ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே

ஸ்மரணாத் ஸர்வ பாபக்நம் கத்ரூஜ விஷநாசனம்

ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே

ஸிம்ஹநாதேந மஹதா திக்தந்தி பயநாசநம்

ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே

ப்ரஹலாத வரதம் ஸ்ரீசம் தைத்யேஸ்வர விதாரிணம்

ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே

க்ரூரக்ரஹை: பீடிதாநாம் பக்தாநா மபயப்ரதம்

ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே

வேதவேதாந்த யஞ்ஞேசம் ப்ரஹ்மருத்ராதி வந்திதம்

ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே

ய இதம் பட்யதே நித்யம் ருணமோசந ஸம்ஞிதம்

அந்ருணீ ஜாயதே ஸத்யோ தநம் சீக்ரமவாப்நுயாத்

இதி ஸ்ரீ ந்ருஸிம்ஹபுராணே ருணவிமோசன ந்ருஸிம்ஹ ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்.

banner

Leave a Reply