சிவன் கோவில்களில் நந்தி குறுக்கே நிற்பது ஏன் தெரியுமா?

Saturn Retrogrades in Aquarius for 140 Days. Time to Refocus, Strategize & Progress towards Your Life Goals Join Now!
India's No. 1
Online Astrology &
Remedy Solution

சிவன் கோவில்களில் நந்தி குறுக்கே நிற்பது ஏன் தெரியுமா?

March 21, 2023 | Total Views : 66
Zoom In Zoom Out Print

நாம் ஏதாவது ஒரு பொருளையோ அல்லது நபரையோ அல்லது வேறு ஒன்றையோ பார்க்கும் பொழுது அதை மறைக்கும் வகையில் யாராவது குறுக்கே வந்தால் ஏன் நந்தி போல குறுக்கே வருகிறாய் என்று கேட்பது வழக்கம்.  

இந்து மதத்தில், நந்தி அல்லது நந்திதேவர்  என்பது சிவனின் நிருஷப (நர்-ரிஷப்) வாகனமான கைலாசத்தின் வாயில் காவலர். புராணங்களின்படி, அவை சிவனின் வாகனம் மற்றும் அவதாரம் ஆகும், நந்தி சிவாலயங்களில் காளையின் வடிவத்தில் வழிபடப்படுகின்றது. சமஸ்கிருதத்தில் 'நந்தி' என்பதன் பொருள் மகிழ்ச்சி. நந்தி சக்தி, வளம் மற்றும் விடாமுயற்சியின் சின்னமாக கருதப்படுகிறது.

இந்த நந்தியானது சிவாலயத்தில் சிவன் சந்நிதிக்கு செல்லும் வழியில்  இருக்கும். நந்தியை வணங்கி விட்டுத் தான் சிவபெருமானை வணங்க வேண்டும் என்பது ஐதீகம்.

புராண காலத்தில் ஷிலாத் என்ற முனிவர் இருந்தார். அவர் புத்திர பாக்கியம் இன்றி இருந்த காரணத்தால் அவரது வீட்டில் மூத்தவர்கள் கவலை தெரிவித்தனர். எனவே அவர் தனக்கு பிறப்பு இறப்பு இல்லாத குழந்தை வேண்டும் என்று வேண்டி இந்திரனை நோக்கி தவம் இயற்றினார். இந்திரன் தனது இயலாமையைக் கூறி சிவனை நோக்கி தவம் செய்யுமாறு ஷிலாத முனிவருக்கு அறிவுறுத்தினார்.  பிறகு ஷிலாத் முனிவர் கடும் தவம் இயற்றி சிவனை  மகிழ்ச்சி படுத்தினார். சிவன் என்ன வரம் வேண்டும் என்று கேட்க அவர் சிவனுடன் உங்களைப் போல உங்களுக்கு சமமான மரணமில்லாத குழந்தை வேண்டும் என்று வரம் கேட்டார்.

சிவபெருமானும் நானே உங்களுக்கு புத்திரன் வடிவில் வருவேன் என்று வரம் அளித்தார்.

சிறிது நாட்களுக்குப் பிறகு நிலத்தை உழும் பொழுது அவருக்கு ஒரு ஆண் குழந்தை கிடைத்தது.ஷிலாத் முனிவர் அக்குழந்தைக்கு நந்தி என்று பெயரிட்டு வளர்த்தார். நந்தி வளர்ந்து வருவதைக் கண்ட சங்கரர், மித்ரன்  மற்றும் வருணன் என்ற இரு முனிவர்களை ஷிலாத்தின் ஆசிரமத்திற்கு அனுப்பினார். நந்தி அவர்களை வணங்கினார். ஷிலாத் நந்தியை ஆசீர்வதிக்கும்படி கூறினார். இருவரும் தயங்கவே ஷிலாத் காரணம் கேட்டார். அப்பொழுது அவர்கள் நந்தியின் அற்ப ஆயுளைப் பற்றி கூறினார்கள். இதையறிந்த நந்தி, தந்தையை வணங்கி மரணத்தை வெல்ல காட்டிற்குச் சென்றார்.காட்டிற்கு சென்று சிவனை நினைத்தது தவம் செய்ய ஆரம்பித்தார். நந்தியின் தவத்தை மெச்சிய சிவன் நந்தி முன் தோன்றி குழந்தாய் நீ மரண பயத்தை வெல்வாய் என்னுடைய அருளால் ஜனன மரணமில்லா பெரு வாழ்வு பெறுவாய் என்று வரமளித்தார். மேலும் பார்வதியின் சம்மதம் பெற்று நந்தியை கணங்களின் அதிபதியாக நியமித்தார்.  மேலும் தன்னைக் காவல் காக்கும் பொறுப்பை அருளினார். இவ்வாறு நந்தி நந்தீச்வர் ஆனார். பிறகு சிவனே நந்தியை சுயஷா என்ற பெண்ணிற்கு திருமணம்  செய்து வைத்ததாக  கூறப்படுகிறது. நந்தி இருக்கும் இடத்தில் எல்லாம் நானும் இருப்பேன் என்ற வரத்தை நந்திக்கு சிவன் அருளினார். அன்றில் இருந்து சிவன் கோவில்களில் சிவனுக்கு எதிரில் நந்தியை பிரதிஷ்டை செய்யும் வழக்கம் வந்தது. அவர் நந்தியின் பாதுகாவலராக நியமிக்கப்ட்டார். எனவே தான் சிவன் கோவிலிகளில் நந்தி குறுக்கே உள்ளது. நந்தியின் அனுமதியின்றி யாரும் சிவனை தரிசிக்கக் கூடாது என்பது ஐதீகம்.

Leave a Reply

Submit Comment
See More

Latest Photos