Arupadai Veedu Muruga Program 2024: Invoke Muruga at His 6 Powerful Abodes During the 6th Moon Powertime Days JOIN NOW

ஸ்ரீ சுப்ரமண்ய அஷ்டோத்ரம் பாடல் | Murugan Ashtothram Lyrics In Tamil

January 12, 2021 | Total Views : 1,697
Zoom In Zoom Out Print

வாழ்க்கையில் ஆன்மீகத்தின் மீது ஆழ்ந்த பற்றுக் கொண்டவர்கள் எங்கும் முருகன், எதிலும் முருகன்  என்ற வழிபாட்டில் ஈடுபடுவார்கள். முருகப்பெருமானுக்கு எத்தனையோ பெயர்கள் உண்டு. அதில் ஒன்று சுப்பிரமணியர். பழங்கால தமிழ் இலக்கியங்கள் சுப்ரமணியரை குறிஞ்சித் திணைக்குரிய கடவுளாகப் போற்றினாலும், சுப்ரமணியர் அகிலம் முழுவதும் நிரம்பியிருக்கிறார். அவரது திருவருள் எங்கும் பரவி அருள்பாலிக்கின்றது. இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் சுப்ரமணியருக்கான ஆலயங்கள் அமைந்திருக்கும். இதுவே சுப்ரமணியரின் தெய்வீகப் பெருமைக்கு சான்றாகிறது.
ஆறுபடை வீடுகளைப் பற்றி எழுதியுள்ள இலக்கியங்களில் சுப்பிரமணியரின் பராக்கிரமங்கள் பற்றி கூறப்பட்டுள்ளது. அகநானூறு, புறநானூறு, கலித்தொகை, நாரினை, தொல்காப்பியம், குறிஞ்சிப்பாட்டு, மலைப்பாடுகளம் போன்றவற்றில் முருகப்பெருமானை பற்றிக் குறிப்பிடுகையில்  அவரை மலைகளின் கடவுள் எனப் பாடியுள்ளார்கள். ஆன்மிகம் குறித்து மேலும் அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்.

ஞாலம், ஐஸ்வர்யம், அழகு, வீரம், வைராக்கியம், புகழ் எனும் ஆறு குணங்களை குறிக்கும் திருமுகங்களைக் கொண்டவர் முருகப்பெருமான். இவர் பிரணவத்தின் சொரூபியாவார். ‘மு’ என்றால் முகுந்தன், ‘ரு’ என்றால் ருத்திரன், ‘கா’ என்றால் பிரம்மா. ‘முருகா’ என்று அழைக்கும் போது மூன்று தெய்வங்களையும் வணங்கியதற்குண்டான பலன்கள் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. மேலும் சிவபெருமானின் அக்னியில் இருந்து தோன்றியதால் சிவமே ஆறுமுகம், ஆறுமுகமே சிவம் என்றும் பொருளாகிறது. கந்தனிடம் கையேந்தி விரதம் இருப்பவர்களின் கவலைகளை அந்த ஈசனும் தீர்த்து வைப்பார் என்பது நிச்சயம்.

முருகப்பெருமானைப் போற்றி பல ஸ்தோத்திரப் பாடல்களும், ஸ்லோகங்களும் பாடப்பட்டிருக்கிறது. அவை ஒவ்வொன்றுக்கும் ஒரு தனித்தன்மையும், சக்தியும் உண்டு. அந்த அடிப்படையில் ஸ்ரீ சுப்ரமணியர் அஷ்டோத்ரத்திற்கும் பல மகிமைகளும், சிறப்புக்களும் உண்டு. சுப்ரமணியருக்கு பல பெயர்கள் உண்டு என்றாலும், ஸ்ரீ சுப்ரமணிய அஷ்டோத்திரத்தில் அவரது 108 திருநாமங்களை மனமுருகி வேண்டி துதித்து பாடுவதன் மூலம் சுப்ரமண்யரின் சகல அருளாசிகளுடன் நல்வாழ்வை பெற்று ஆனந்தமாக வாழலாம்.

ஸ்ரீ சுப்ரமண்யரின் அஷ்டோத்ரம் பாடல் வரிகள்:

1. ஓம் ஸ்கந்தாய நமஹ
2. ஓம் குஹாய நமஹ
3. ஓம் ஷண்முகாய நமஹ
4. ஓம் பால நேத்ரஸுதாய நமஹ
5. ஓம் ப்ரபவே நமஹ
6. ஓம் பிங்களாய நமஹ
7. ஓம் க்ருத்திகா ஸூனவே நமஹ
8. ஓம் சிகிவாஹனாய நமஹ
9. ஓம் த்விஷட் புஜாய நமஹ
10. ஓம் த்விஷண் நேத்ராய நமஹ
11. ஓம் சக்திதராய நமஹ
12. ஓம் பிஸிதாஸ ப்ரபஞ்சனாய நமஹ
13. ஓம் தாரகாஸுர ஸம்ஹாரிணே நமஹ
14. ஓம் ரஷோபல விமர்த்தனாய நமஹ
15. ஓம் மத்தாய நமஹ
16. ஓம் ப்ரமத்தாய நமஹ
17. ஓம் உன்மத்தாய நமஹ
18. ஓம் ஸுரஸைன்ய ஸுரக்ஷகாய நமஹ
19. ஓம் தேவசேனாபதயே நமஹ
20. ஓம் ப்ராக்ஞாய நமஹ
21. ஓம் க்ருபாளவே நமஹ
22. ஓம் பக்த வத்ஸலாய நமஹ
23. ஓம் உமா ஸுதாய நமஹ
24. ஓம் சக்தி தராய நமஹ
25. ஓம் குமாராய நமஹ
26. ஓம் க்ரௌஞ்சதாரணாய நமஹ
27. ஓம் ஸேனான்யே நமஹ
28. ஓம் அக்னிஜன்மனே நமஹ
29. ஓம் விசாகாய நமஹ
30. ஓம் சங்கராத்மஜாய நமஹ
31. ஓம் சிவஸ்வாமினே நமஹ
32. ஓம் கணஸ்வாமினே நமஹ
33. ஓம் ஸர்வஸ்வாமினே நமஹ
34. ஓம் ஸநாதனாய நமஹ
35. ஓம் அனந்த சக்தயே நமஹ
36. ஓம் அக்ஷோப்யாய நமஹ
37. ஓம் பார்வதிப்ரிய நந்தனாய நமஹ
38. ஓம் கங்கா ஸுதாய நமஹ
39. ஓம் சரோத் பூதாய நமஹ
40. ஓம் ஆஹுதாய நமஹ
41. ஓம் பாவகாத்மஜாய நமஹ
42. ஓம் ஜ்ரும்பாய நமஹ
43. ஓம் ப்ரஜ்ரும்பாய நமஹ
44. ஓம் உஜ்ரும்பாய நமஹ
45. ஓம் கமலாஸன ஸம்ஸ்துதாய நமஹ
46. ஓம் ஏகவர்ணாய நமஹ
47. ஓம் த்விவர்ணாய நமஹ
48. ஓம் திரிவர்ணாய நமஹ
49. ஓம் ஸுமனோகராய நமஹ
50. ஓம் சதுர்வர்ணாய நமஹ
51. ஓம் பஞ்சவர்ணாய நமஹ
52. ஓம் ப்ரஜாபதயே நமஹ
53. ஓம் அஹர்பதயே நமஹ
54. ஓம் அக்னிகர்ப்பாய நமஹ
55. ஓம் சமீகர்ப்பாய நமஹ
56. ஓம் விச்வரேதஸே நமஹ
57. ஓம் ஸுராரிக்னே நமஹ
58. ஓம் ஹரித்வர்ணாய நமஹ
59. ஓம் சுபகராய நமஹ
60. ஓம் வடவே நமஹ
61. ஓம் வடுவேஷப்ருதே நமஹ
62. ஓம் பூஷ்ணே நமஹ
63. ஓம் கபஸ்தயே நமஹ
64. ஓம் கஹனாய நமஹ
65. ஓம் சந்த்ரவர்ணாய நமஹ
66. ஓம் களாதராய நமஹ
67. ஓம் மாயாதராய நமஹ
68. ஓம் மஹாமாயினே நமஹ
69. ஓம் கைவல்யாய நமஹ
70. ஓம் சங்கராத்மஜாய நமஹ
71. ஓம் விச்வயோனயே நமஹ
72. ஓம் அமேயாத்மனே நமஹ
73. ஓம் தேஜோநிதயே நமஹ
74. ஓம் அனாமயாய நமஹ
75. ஓம் பரமேஷ்டினே நமஹ
76. ஓம் பரப்ரஹ்மணே நமஹ
77. ஓம் வேதகர்ப்பாய நமஹ
78. ஓம் விராட்ஸுதாய நமஹ
79. ஓம் புளிந்தகன்யாபர்த்ரே நமஹ
80. ஓம் மஹாஸாரஸ்வத வ்ரதாய நமஹ
81. ஓம் ஆச்ரிதாகிலதாத்ரே நமஹ
82. ஓம் ரோகக்னாய நமஹ
83. ஓம் ரோக நாசனாய நமஹ
84. ஓம் அனந்தமூர்த்தயே நமஹ
85. ஓம் ஆனந்தாய நமஹ
86. ஓம் சிகண்டிக்ருத கேதனாய நமஹ
87. ஓம் டம்பாய நமஹ
88. ஓம் பரமடம்பாய நமஹ
89. ஓம் மஹாடம்பாய நமஹ
90. ஓம் வ்ருஷாகபயே நமஹ
91. ஓம் காரணோபாத்ததேஹாய நமஹ
92. ஓம் காரணாதீத விக்ரஹாய நமஹ
93. ஓம் அனீச்வராய நமஹ
94. ஓம் அம்ருதாய நமஹ
95. ஓம் ப்ராணாய நமஹ
96. ஓம் ப்ராணாயாமபராயணாய நமஹ
97. ஓம் விருத்தஹந்த்ரே நமஹ
98. ஓம் வீரக்னாய நமஹ
99. ஓம் ரக்தச்யாமகளாய நமஹ
100. ஓம் குஹாய நமஹ
101. ஓம் குண்யாய நமஹ
102. ஓம் ப்ரீதாய நமஹ
103. ஓம் ப்ராஹ்மண்யாய நமஹ
104. ஓம் ப்ராஹ்மணப்ரியாய நமஹ
105. ஓம் வம்ச விருத்திகராய நமஹ
106. ஓம் வேத வேத்யாய நமஹ
107. ஓம் அக்ஷய பலப்ரதாய நமஹ
108. ஓம் பாலஸுப்ரமண்யாய நமஹ
 

banner

Leave a Reply

Submit Comment