AstroVed Menu
AstroVed
search
search

மகரம் மே மாத ராசி பலன் 2023 | May Matha Magaram Rasi Palan 2023

dateApril 21, 2023

மகரம் மே மாத பொதுப்பலன்கள் 2023

மகர ராசிக்காரர்கள் உறவு மற்றும் குடும்ப விஷயங்களில் கடினமான காலங்களை சந்திக்கும் வாய்ப்பு அதிகம். தாயின் உடல்நிலையும் இம்மாதத்தில் கவலையை ஏற்படுத்தும். இந்த காலகட்டங்களில் நீங்கள்  மனச்சோர்வு அடையலாம்.  பின்னடைவுகளைத் தாங்கும் வலிமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் மற்றும் எதிர்காலத்திலும் வலுவாக இருக்க வேண்டும். எதிரிகளால் பிரச்சனைகள்  வரலாம்.

காதல் / குடும்ப உறவு

திருமணமான தம்பதிகள் உறவில் கடினமான காலத்தை சந்திக்க நேரலாம். இந்த முக்கியமான காலகட்டத்தில் தாம்பத்திய வாழ்வில் ஈகோ மற்றும் வாக்குவாதங்களைத் தவிர்த்து உறவில் சுயநலமில்லாமல் இருப்பது மிகவும் நல்லது. இம்மாதத்தில் பிரிந்து செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால்  எச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியம்.தாம்பத்திய சுகத்தை அதிகம் எதிர்பார்க்க வேண்டாம். தியானம் மற்றும் ஆன்மீகத்தின் மூலம் கிரகங்களின் எதிர்மறையான விளைவுகளை  குறைக்கக்கூடிய வழிகளைக் கண்டறிய வேண்டும்.

திருமண உறவில் நல்லிணக்கம் காண : அங்காரகன் பூஜை

நிதிநிலை:

மகர ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் நிதிநிலையில் மிதமான பலன் கிட்டும் காலமாக இருக்கலாம். இந்த காலகட்டத்தில் சொத்து சம்பந்தமான விஷயங்களில் அதிகமாக செலவு செய்யலாம். இந்த காலகட்டத்தில் குழந்தைகளின் கல்வி நோக்கத்திற்காக கடன்களைப் பெற வேண்டியிருக்கும். மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கான செலவு இருக்கலாம். பணப்புழக்கம்  மிதமானதாக இருக்கலாம் மற்றும் நீங்கள் பங்குச் சந்தை வர்த்தகம் மற்றும் ஊக வணிகங்களில் ஈடுபடலாம்.

உங்கள் நிதிநிலை மேம்பட : அங்காரகன் பூஜை

உத்தியோகம்:

மகர ராசிக்காரர்களின் உத்தியோக வாழ்க்கை பொதுவாக மிதமான காலகட்டத்தைக் கொண்டிருக்கும். சில விஷயங்களில் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க வாய்ப்பு உள்ளது. பணியிடத்தில் சில கடுமையான சிக்கல்கள் இருக்கலாம் என்றாலும், கடைசி நேரத்தில்   நீங்கள் நிலைமையைக் கையாளலாம். இந்த மாதம் பணியிடத்தில் வாக்குவாதங்கள் ஏற்படலாம். உத்தியோகம் மூலம் பண வருவாய் உண்டாகும்.

தொழில்:

மகர ராசிக்காரர்கள், மாற்றப்பட்ட வணிகச் சூழலுக்கு ஏற்றவாறு வணிக ஒப்பந்தங்களை மாற்றியமைக்க / மறுகட்டமைக்க வேண்டியிருக்கும்.  எதிரிகளையும் போட்டியாளர்களையும் இரும்புக்கரம் கொண்டு கையாள வேண்டியிருக்கும். மாதத்தின் பிற்பகுதியில் அரசு அதிகாரிகளுடனான உறவு மேம்படும். இந்த மாத இறுதியில் வணிகத்தின் பங்குதாரர்களின் ஆதரவு கிடைக்கும்.

தொழில் வல்லுனர்கள்:

மகர ராசிக்காரர்கள், தொழிலில் திறமையை வெளிப்படுத்த, சில வசதிகளை விட்டு வெளியே வர வேண்டும். தொழிலில் கூட்டாளிகளுடன் பிரச்சனைகள் வரலாம். இந்த மாதத்தில் பணவரவும் மிதமாக இருக்கும். பணியிடத்தில்  குழுவை வழிநடத்த மாற்று வழிகளைக் கண்டறிய வேண்டியிருக்கும். சிறந்த அங்கீகாரத்தைப் பெற, பணிச்சூழலில் கோபம் மற்றும் உணர்ச்சிவசப்படுவதைத் தவிர்க்கவும்.

உங்கள் தொழிலில் சிறந்து விளங்க : சுக்கிரன் பூஜை

ஆரோக்கியம்:

இந்த காலகட்டத்தில் பெரும்பாலும் மருத்துவமனைகள் மற்றும் மருந்துகளில் நேரத்தையும் சக்தியையும் செலவிடக்கூடும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியமும் இந்த மாதத்தில் பிரச்சினைக்குரிய காரணியாக இருக்கும். இந்த மாத இறுதியில் உடல்நிலை சற்று மேம்படும். இந்த காலக்கட்டத்தில் கால் சம்பந்தமான காயங்களை சந்திக்க வாய்ப்பு உள்ளது எனவே எச்சரிக்கையுடன் வாகனம் ஓட்டுவது நல்லது.

உங்கள் ஆரோக்கியம் மேம்பட : சூரியன் மற்றும் அங்காரகன் பூஜை

மாணவர்கள் :

இந்த மாதம் நீங்கள் விரும்பும் உயர் கல்வி பெறுவதில் சில தடைகள் இருக்கலாம். கல்வியைத் தொடர்பவர்களுக்கு இந்த மாதத்தில் விரும்பிய உயர்கல்விப் படிப்பைப் பெறுவதில் சற்று கடினமான நேரம் இருக்கும். பற்கள், கண்கள் மற்றும் கால்கள் தொடர்பான உபாதைகள் தொந்தரவுகளை உருவாக்கலாம். இருப்பினும், சில கடின உழைப்புக்குப் பிறகு இந்த மாத இறுதியில் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. மகர ராசி மாணவர்களுள் ஒரு சிலர் வெளிநாட்டில் உயர்கல்வி பெறலாம்.

கல்வியில் சிறந்து விளங்க : அங்காரகன்  & சனி பூஜை

சுப தேதிகள் : 4, 5, 6, 7, 8, 15, 16, 17, 18, 22, 23, 24, 25 & 26.

அசுப தேதிகள் : 1, 9, 10, 11, 12, 27 & 28.


banner

Leave a Reply