AstroVed Menu
AstroVed
search
search

குறை ஒன்றும் இல்லை பாடல் வரிகள் | Kurai Ondrum Illai Song Lyrics Tamil

dateDecember 14, 2020

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா:

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா, இந்தப் பாடலைக் கேட்டதுமே இசையரசி என போற்றப்பட்ட எம்.எஸ்.சுப்புலட்சுமியின் கணீர் என்ற குரல் நமக்குள் ஒலிப்பதை இன்றளவும் தவிர்க்க முடியாது. இந்தப் பாடல் திருப்பதியில் வீற்றிருக்கும் திருவேங்கடவனைக் குறித்து பாடப்பட்டதாகும். ஆண்டுகள் பல கடந்தும் இன்றளவும் வைணவ ஆலயங்களிலும், நமது வீடுகளிலும் இந்தப் பாடல் ஒலித்துக் கொண்டிருப்பதை நம்மால் காண முடியும். 1925 ஆம் ஆண்டே இந்தப் பாடல் எழுதப்பட்டிருந்தாலும், உலகம் முழுக்க இந்தப் பாடலை பிரபலப்படுத்தியது எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்கள் குரல் தான் என்றால் அது மிகையாகாது. ஆம், 1979 ஆம் ஆண்டு எச்.எம்.வி. நிறுவனம் வெளியிட்ட எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடிய ஸ்ரீ வேங்கடச பஞ்சரத்னமாலா என்ற ஒலித்தட்டில் இந்தப் பாடல் இடம் பெற்றது. இந்தப் பாடலை எழுதியவர் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி ஆவார். 1967ல் இந்தப் பாடல் கல்கி பத்திரிகையில் வெளிவந்தது. இப்பாடலுக்கு இசை வடிவம் தந்தவர் கடையநல்லூர் வெங்கட்ராமன் ஆவார். ஜோதிடம், வாஸ்து, பஞ்சாங்கம், முகூர்த்தம், பரிகாரம், திருமணம், எண் கணிதம், மற்றும் பல தகவல்களை பெற எங்கள் வலைத்தளம் வாருங்கள்.

பாடலின் பொருள்:

கிருஷ்ண பரமாத்மாவிடம் குந்தி தேவி வரம் கேட்ட போது, “எனக்கு எப்போதும் துன்பத்தை மட்டும் தா கண்ணா. அப்போது தான் எப்போதும் உன் நினைவு இருந்து கொண்டேயிருக்கும்.  உன் நினைவோடு இருப்பதை விட துன்பம் ஒன்றும் பெரிதல்ல என்றாராம். இதைத் தான் குறையொன்றுமில்லை என்ற பாடலும் பிரதிபலிக்கிறது.

பாடல் பிறந்த கதை:

1925ம் ஆண்டு இந்தியா முழுக்க விடுதலைப் போராட்டம் நடந்து கொண்டிருந்த கால கட்டம் அது. நாடு முழுவதும் ஒத்துழையாமை போராட்டம் மிகத் தீவிரமாக நடந்து கொண்டிருந்த வேளை அது. அந்த கால கட்டத்தில் தான் ‘குறையொன்றுமில்லை’ பாடல் எழுதப்பட்டிருக்கிறது.

கோவிலுக்குள் செல்ல விதிக்கப்பட்ட தடை:

தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திருப்பதி கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட காலம் அது. இதனை மீறும் பஞ்சமர்களை அன்றைய ஆங்கிலேய நீதிமன்றம் சிறைக்கு அனுப்பியது.  இந்நிலையில் ஒரு தாழ்த்தப்பட்ட மனிதர் பத்து ஆண்டுகளாக திருப்பதி கோவிலுக்குள் சென்று திருவேங்கடவனை தரிசிக்க துடிக்கிறார். ஒரு நாள் பக்திப் பெருக்கில் கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்துடன் கோவிவிலுக்கும் நுழைய காவலர்கள் அவரை கைது செய்து சிறைக்கு அனுப்புகிறார்கள்.

மூதறிஞர் ராஜாஜி ஆஜரான வழக்கு:

நாடு முழுவதும் காந்தி தலைமையில் ஒத்துழையாமை இயக்கம் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த கால கட்டத்தில் ஆங்கிலேய நீதிமன்றங்களை அன்றைய வக்கீல்கள் முழுமையாக புறக்கணித்தனர். தங்களுடைய தொழிலுக்கான உரிமையை பார் கவுன்சிலிடம் ஒப்படைத்து விட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவிலுக்குள் நுழைய முயன்று தண்டிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட அந்த ஏழைக்காக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டி, ஆந்திர மாநிலத்திலுள்ள சித்தூரில் உள்ள ஒரு வக்கீல் தனது நண்பர் ராஜாஜியிடம் கோரிக்கை வைக்கிறார்.

சுமார் ஏழு வருடங்களாக காந்தியின் கட்டளையை ஏற்று புறக்கணித்த நீதிமன்ற பணியை இந்த வழக்கிற்காக மீண்டும் ஏற்பதா? வேண்டாமா? என ஒரே குழப்பம் ராஜாஜிக்கு. இறுதியாக அந்த ஏழைக்காக நீதிமன்றத்தில் ஆஜராவது என முடிவெடுக்கிறார். ஆனால் ஏற்கனவே வக்கீல் தொழிலுக்கான உரிமத்தை பார் கவுன்சிலிடம் ஒப்படைத்து விட்டதால் ராஜாஜி எப்படி ஆஜராக முடியும் என வக்கீல் நண்பர் அவரிடம் கேட்டார்.

ஆனால் ராஜாஜியோ குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் வக்கீலாக இல்லாமல் தனி மனிதனாக குற்றவாளிக்கு ஆதரவாக ஆஜராக வழி உண்டு என்பதை சுட்டிக்காட்டி ராஜாஜி சித்தூர் நீதிமன்றத்திற்கு சென்றார். ஆங்கிலேய நீதிபதி முன்னிலையில் வக்கீல் உடையன்றி, சிவில் உடையிலேயே வழக்கை நடத்தி அந்த ஏழைக்கு விடுதலையும் வாங்கித் தருகிறார்.

கோவிலுக்குள் அழைத்துச் சென்ற ராஜாஜி:

அந்த தாழ்த்தப்பட்ட ஏழைக்காக வழக்கில் வாதாடி விடுதலை வாங்கி தந்ததோடு, அவரை தன்னோடு     திருப்பதி கோவிலுக்குள்ளும் அழைத்துச் செல்கிறார். அந்த ஏழை திருவேங்கடவனைப் பார்த்து உணர்ச்சிப் பெருக்கில் கண்ணீர் மல்க கைகூப்பி வணங்கியதை பார்த்து பரவசமடைந்த ராஜாஜி உணர்ச்சி மேலிட எழுதிய பாடல் தான் ‘குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா’. ராஜாஜி அவர்கள் எழுதிய ஒரே தமிழ் கீர்த்தனை இது தான். இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் எவ்வளவு கவலைகள், துன்பங்கள் இருந்தாலும் அவையாவும் நீங்கி ஒரு அமைதியும், பரசவமும் ஏற்படுவதை நம்மால் நிச்சயம் உணர முடியும்.

குறையொன்றுமில்லை பாடல் வரிகள்:

குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா
கண்ணுக்கு தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்கு தெரியாமல் நின்றாலும் எனக்கு
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா

சரணம் 1

வேண்டியதை தந்திட வெங்கடேசன் நின்றிருக்க
வேண்டியது வேறில்லை மறை மூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

சரணம் 2

திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா
திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா
உன்னை மறை ஓதும் ஞானியர் மட்டுமே காண்பார்
உன்னை மறை ஓதும் ஞானியர் மட்டுமே காண்பார்
என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா

சரணம் 3

குன்றின் மேல் கல்லாகி நிற்கின்ற வரதாஞ்
குன்றின் மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

சரணம் 4

கல்லினார்க்கு இறங்கி கல்லிலே இறங்கி
நிலையாக கோவிலில் நிற்கின்றாய் கேசவா
நிலையாக கோவிலில் நிற்கின்றாய் கேசவா
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா

சரணம் 5

யாதும் மறுக்காத மலையப்பா உன் மார்பில்
யாதும் மறுக்காத மலையப்பா உன் மார்பில்
ஏதும் தர நிற்கும் கருணை கடல் அன்னை
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா.


banner

Leave a Reply