மீனம் ஜூலை மாத பொதுப்பலன் 2023:
மீன ராசிக்காரர்களுக்கு குழந்தைகளால் பிரச்சனைகள் வரலாம் மற்றும் இந்த மாதத்தில் கருத்து மோதல்கள் வரலாம். உடல்நிலையும் கவலையை ஏற்படுத்தும். அது நீண்ட தூர பயணங்கள் மற்றும் சட்ட வழக்குகள் / தகராறுகள் காரணமாக ஏற்படும் தேவையற்ற டென்ஷன்களாக இருக்கலாம். இந்த காலகட்டத்தில் தகவல்தொடர்பு அம்சங்களில் கவனமாக இருக்க வேண்டும். இந்த மாதத்தில் நிதி மற்றும் சொத்து விஷயங்களில் சர்ச்சைகள் ஏற்படலாம்
காதல் / குடும்ப உறவு :
மீன ராசிக்காரர்களின் உறவு விவகாரங்களில் மாதத்தின் இரண்டாம் பாதியில் எதிர்பாராத மாற்றம் ஏற்படலாம். சிக்கல் அல்லது பிரச்சனை நீங்கள் நிர்வகிக்கும் வகையில் வரம்பிற்குள் இருக்கும். காதலர்களுக்கு, காதல் உறவு திருமண உறவாக மாறும் வகையில் இந்த மாதத்தின் கடைசி வாரத்தில் திருமணம் நிச்சயம் ஆவதற்கான வாய்ப்புகள் உள்ளன. உறவு விஷயங்களில் தேவையற்ற சச்சரவுகள் மற்றும் மூன்றாம் தரப்பினரின் தலையீடு தவிர்க்கப்பட வேண்டும்.
திருமண உறவில் நல்லிணக்கம் காண : சுக்கிரன் பூஜை
நிதிநிலை :
நிதி ரீதியாக, இந்த காலகட்டத்தில் இந்த மாதத்தில் கலவையான பலன்கள் கிட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பண வரவு நன்றாக இருந்தாலும், கடன்கள் மற்றும் நிதி நிறுவனங்களில் இருந்து பெறும் லோன் மூலம் பணம் வரலாம். முதலீடுகள், பங்குச் சந்தை மற்றும் ஊக வணிகம் மூலம் நஷ்டம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இந்தக் காலக்கட்டததில் அதிகமாகக் கருதப்படுகிறது.
உங்கள் நிதிநிலை மேம்பட : அங்காரகன் பூஜை
உத்தியோகம் :
மீன ராசிக்காரர்களின் தொழில் இந்த காலகட்டத்தில் சிறப்பாக இருக்கும். நீங்கள் பணியிடத்தில் செயல்படுத்தக்கூடிய புதுமையான யோசனைகளைப் பெறுவீர்கள், மேலும் அது தொழிலில் உங்களுக்கு அங்கீகாரம் மற்றும் பணப் பலன்களைப் பெற்றுத் தரலாம். இந்த காலகட்டத்தில் தொடர்பு திறன் மூலம் சம்பாதிக்கும் வாய்ப்பு கிட்டும். . எதிரிகள் மூலம் பிரச்சனைகள் வந்தாலும், வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு அது அதிர்ஷ்டமாக மாறும்.
தொழில் :
மீன ராசிக்காரர்களால் மேற்கொள்ளப்படும் வியாபாரம் ஜூலை மாதத்தில் சுமாரான பலன்களை அளிக்கும். இந்த காலகட்டத்தில் விரிவாக்க வாய்ப்புகள் உள்ளன. வணிக கூட்டாளிகளின் ஆதரவைக் காணலாம். இந்த மாதத்தில் வியாபார எதிரிகளை எதிர்கொள்வதில் வெற்றி பெறுவீர்கள். தேவையற்ற செலவுகளைச் செய்ய வாய்ப்புகள் உள்ளன. இவற்றை தவிர்ப்பது நல்லது.
தொழில் வல்லுனர்கள் :
மீன ராசிக்காரர்கள் புத்திசாலித்தனம் மற்றும் உள்ளுணர்வு திறன்களின் அடிப்படையில் தொழிலில் சாதகமான காலகட்டத்தை கடக்கலாம். தனிப்பட்ட திறன்களை வளர்த்துக்கொள்வதோடு, தொழிலில் உள்ள பங்காளிகள், தொழிலில் முன்னேற்றத்திற்கான முக்கியமான தகவல் / யோசனைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். நீங்கள் இந்த மாதத்தில் புதிய ஒப்பந்தங்களில் ஈடுபடலாம். இருப்பினும், மாதத்தின் இரண்டாம் பாதியில் தொழிலில் பெண் பங்குதாரர் / பணியாளர் மூலம் நீங்கள் பின்னடைவைக் காணலாம்.
தொழிலில் சிறந்து விளங்க : பிருகஸ்பதி பூஜை
ஆரோக்கியம் :
இந்த காலகட்டத்தில் உறவினர்களின் மருத்துவ சிகிச்சை செலவுகள் ஏற்படலாம். உங்களுக்கு இந்த மாதத்தில் தூக்கப் பிரச்சினைகள் ஏற்படலாம். ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கத்தால் வயிறு உபாதைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இவ்விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
உங்கள் ஆரோக்கியம் மேம்பட : அங்காரகன் பூஜை
மாணவர்கள் :
மீன ராசிக்காரர்களுக்கு கல்வியில் நடப்பு மாதத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நீங்கள் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறலாம். புத்திசாலித்தனம் தொடர்பான விஷயங்களில் நீங்கள் சிறந்தவராக இருக்கலாம். மாணவர்கள் விளையாட்டுப் போட்டிகளிலும் வெற்றி பெறலாம். வெளிநாடுகளில் உயர்கல்வி கற்கும் மாணவர்கள் இந்த காலகட்டத்தில் படிப்பில் சிறப்பாக செயல்படுவார்கள்
கல்வியில் சிறந்து விளங்க : ராகு பூஜை
சுப தேதிகள் : 2, 3, 4, 5, 13, 14, 15, 16,17, 21, 22, 30 & 31.
அசுப தேதிகள் : 6, 7, 8, 9, 10, 25, 26 & 27.

Leave a Reply