Mahalaya Paksha is the Ultimate Powertime to invoke Ancestral Blessings for Abundance, Material Comforts, Progress & Success Join Now
AstroVed Menu
AstroVed
search
search

கும்பம் ஜூலை மாத ராசி பலன் 2023 | July Matha Kumbam Rasi Palan 2023

June 14, 2023 | Total Views : 634
Zoom In Zoom Out Print

கும்பம் ஜூலை மாத பொதுப்பலன் 2023 :   

கும்ப ராசி அன்பர்கள்  ஏற்கனவே இருக்கும் மற்ற பிரச்சினைகளுக்கு மேல் திருமண / தனிப்பட்ட வாழ்க்கையில் மேலும் சில  பிரச்சினைகளை சமாளிக்க வேண்டியிருக்கும். சமூகத்தில்   பகை மற்றும் கடன்களை எதிர்கொள்ள நேரலாம். குழந்தைகள் உங்களுக்கு எதிராக  மாறுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. இந்த காலகட்டத்தில் உங்களுக்கு  மதம் மற்றும் ஆன்மீக நாட்டம் இருக்கலாம்.  இந்த மாதத்தில் வாழ்க்கைத்துணை / பங்குதாரர் மூலம் குருவின் ஆசியைப் பெறலாம்.

காதல் / குடும்ப உறவு :

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த மாதத்தில் உறவு அம்சங்கள் மிக முக்கியமான விஷயமாக இருக்கும். திருமண சுப காரியங்களில் ஏமாற்றம் ஏற்படலாம். உறவில் உள்ள  எதிர்மறை தாக்கத்தை குறைக்கும் என்பதால், துணையுடன் ஆன்மீக இடங்களுக்கு நீண்ட தூர பயணத்தில்  நேரத்தை செலவிட நீங்கள்  முடிவு செய்யலாம். இந்த காலகட்டத்தில்  வாதங்கள் மற்றும் தவறான புரிதல்கள் தொடரலாம்.

திருமண உறவில் நல்லிணக்கம் காண  : சுக்கிரன் பூஜை

நிதிநிலை :

இந்த மாதம் நிதி நிலைமை நன்றாக இருக்கும்.  இந்த மாதத்தில் தொழில், பங்குதாரர் மற்றும் மூதாதையர் சொத்துக்கள் உட்பட பல ஆதாரங்கள் மூலம் சம்பாதிக்கலாம். பங்குதாரரின் உடல்நலக்குறைவு காரணமாக செலவுகள் ஏற்படலாம்.  வாழ்க்கைத் துணைக்கு  அதிர்ஷ்டமும் யோகமும் இருக்கலாம், இது மறைமுகமாக நிதி விஷயங்களில் பயன் அளிக்கக்கூடும். பங்குச் சந்தையில் முதலீடு மற்றும் ஊக அம்சங்களில் எச்சரிக்கை தேவை.

உங்கள் நிதிநிலை மேம்பட : பிருகஸ்பதி பூஜை

உத்தியோகம் :

கும்ப ராசிக்காரர்களுக்கு தொழில், உத்தியோகத்தில் குழப்பங்கள் ஏற்படும்.  இந்த காலகட்டத்தில் பணியிடத்தில் உங்களது பதவியை பாதுகாக்க நீங்கள் முயற்சி செய்யலாம். பணியிடத்தில் சக ஊழியர்கள் எதிரிகளாக மாறலாம். தொழிலில் முன்னேற்றத்தில் அதிர்ஷ்ட காரணி சாதகமான பங்கை வகிக்கலாம். இந்த காலகட்டத்தில் தொழில் வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தைப் பாதுகாக்க நீங்கள் அறிவுபூர்வமாக செயல்படலாம்..

தொழில் :

கும்பம் ராசிக்காரர்களால் மேற்கொள்ளப்படும் வியாபாரத்தில்  இந்த மாதத்தில் சீரமைப்புகளைச் செய்ய வேண்டியிருக்கும். கூட்டாளர்களுடனான வணிக ஒப்பந்தங்களில் மாற்றம் கூட காணப்படலாம். இந்த காலகட்டத்தில் புதிய முதலீடுகள் மற்றும் விரிவாக்கங்களை தவிர்க்க வேண்டும். தொழிலில் கடன்கள் குவிந்து உங்களுக்கு  சுமையாக இருக்கலாம். இந்த மாதத்தில் ஒட்டுமொத்த பண வரவு நன்றாக இருக்கும்.

தொழில் வல்லுனர்கள் :

கும்பம் ராசியைச் சேர்ந்த தொழில் செய்பவர்களுக்கு மிதமான காலம் இருக்கும். வருமானம் நன்றாக இருக்கும் மற்றும் சொந்த தொழிலில் பணம் மற்றும் லாபம் கூடும். சொந்த தொழிலில் சுதந்திரமாக செயல்பட முயற்சிப்பீர்கள். இருப்பினும், பங்குதாரர்கள் தொழிலில் பாதகமான காரணியாக இருக்கலாம்.  இந்த காலகட்டத்தில் தொழிலில் மறைந்திருக்கும் எதிரிகளை கண்டுபிடிக்கலாம்.

தொழிலில் சிறந்து விளங்க : சனி பூஜை

ஆரோக்கியம் :

உங்கள்  ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை  இந்த மாதத்தில் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மன அழுத்தத்தை சந்திக்க நேரிடும். யோகா மற்றும் தியானம் ஆகியவை மன அழுத்தத்தை குறைக்கும் காரணிகளாக கருதப்படலாம். உடல் நலக் குறைவிலிருந்து ஓரளவு நிவாரணம் / மீட்சி ஏற்படலாம். 

உங்கள் ஆரோக்கியம் மேம்பட : சனி பூஜை

மாணவர்கள் :

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த மாதத்தில் கல்வி மற்றும் போட்டித் தேர்வுகள் வரும்போது ஒப்பீட்டளவில் சிறப்பான காலமாக  இருக்கலாம். மனப்பாடம் செய்யும் திறன் குறையும் போக்குகள் இருக்கலாம் மற்றும் சில சமயங்களில் மாணவர்கள் கல்வி விஷயங்களில் உத்தி மற்றும் தீவிரத்தை தவறாகக் கணக்கிடலாம். தங்கள் லட்சியத்திற்கு  சம்பந்தமில்லாத மற்ற விஷயங்களுக்கு மாணவர்கள் முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது.

கல்வியில் சிறந்து விளங்க : ஹயக்ரீவர் பூஜை

சுப தேதிகள் : 1, 2, 3, 10, 11, 12, 13, 14, 18, 19, 20, 21, 22, 28, 29, 30 & 31.

அசுப தேதிகள் : 4, 5, 6, 7, 8, 23, 24 & 25.

banner

Leave a Reply

Submit Comment