AstroVed's End of Season Sale: Up to 50% OFF on our Packages, Fire Labs, Monthly Powertimes, Mantra Writing & Sacred Products Order Now

கால பைரவரை எப்படி வணங்க வேண்டும் தெரியுமா?

May 2, 2020 | Total Views : 832
Zoom In Zoom Out Print

கால பைரவர் சிவபெருமானின் ருத்ர ரூபம் ஆவார். காசி மாநகரில் காவல் தெய்வமாகவும் காக்கும் கடவுளாகவும்காலபைரவர் திகழ்கிறார். பெரும்பாலும் சிவன் கோவிலில் கால பைரவருக்கு தனி சன்னிதி இருக்கும். கால பைரவர் சனியின் குருவாகவும், பன்னிரண்டு ராசிகள், எட்டு திசைகள், பஞ்ச பூதங்கள், நவகிரகங்களையும், காலத்தையும் கட்டுப்படுத்துபவராகவும் கூறப்படுகிறார்.காசியில் பைரவருக்கு வழிபாடுகள் முடிந்த பிறகுதான் காசி விஸ்வநாதருக்கு வழிபாடுகள் நடைபெறும் வழக்கம் உள்ளது. காசி யாத்திரை செல்பவர்கள் கங்கையில் நீராடி வழிபட்டு இறுதியாக காலபைரவரையும் வழிபட்டால்தான் காசி யாத்திரை செய்ததன் முழுப் பலனும் கிட்டும் என்பது விதியாகும்.

பஞ்சகுண சிவமூர்த்தங்களில் பைரவர் ஒருவர் ஆவார்.

பஞ்ச குணங்கள் என்பன வக்ரம்,சாந்தம்,வசீகரம்,ஆனந்தம் மற்றும் கருணை.இந்த பஞ்சகுணங்களில் வக்ர மூர்த்தியாக பைரவர் காணப்படுகிறார். காலபைரவர்,ருத்திர வடிவம் தரித்தவர் ஆவார். இந்த வடிவ பைரவரைத் தொழ வாழ்வில் பயம் நீங்கும் மகிழ்ச்சி பொங்கும். செல்வங்கள் பெருகும்.

காலத்தை தன்கட்டுக்குள் வைத்திருக்கும் கடவுளாகக் கால பைரவர் விளங்குகிறார். பஞ்சபூதம்,எட்டுதிக்குகள்,நவகிரகங்கள்,பன்னிரண்டுராசிகள்,காலம் என அனைத்தையும் தன் கட்டுக்குள் வைத்திருக்கும் கடவுளாகக் கால பைரவர் விளங்குகிறார்.

கால பைரவரை வணங்குவதற்கு உகந்த நாள்

நாம் நமது வாழ்நாளின் எல்லா நாட்களிலும் இறைவனை வணங்க வேண்டியது மிகவும் அவசியம். என்ற போதும் ஒவ்வொரு தெய்வத்திற்கும் வணங்குவதற்கு ஒரு குறிப்பிட்ட நாள் உள்ளது. அந்த நாளில் அந்த தெய்வத்தின் அருள் நிறைந்து இருக்கும். அந்த வகையில் கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி திதி மிகவும் உகந்த நாள் ஆகும். ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை திதி பைரவருக்கு உகந்த நாள் என்றாலும் கார்த்திகை மாதம் வரும் தேய்பிறை அஷ்டமி தான் காலபைரவாஷ்டமி என்று கூறப்படுகின்றது.

அஷ்டமிவிரதம்:

பௌர்ணமிக்கு பிறகு வரும் எட்டாவது நாள் அதாவது தேய்பிறை அஷ்டமி அன்றுவிரதம் இருந்து கால பைரவரை வழிபட நம் வாழ்வில் நலன்கள் யாவும் பெருகும். கால பைரவ அஷ்டமி விரதம் நாம் வாழ்வை சிறக்கச் செய்யும் என்று கூறினால் அது மிகையாகாது.

ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமிதிதி பைரவருக்கு உகந்தநாளாக கருதப்படுகின்றது. ஒவ்வொரு அஷ்டமிதிதிக்கும் ஒருபெயர் உண்டு. இதில்கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமிருத்ராஷ்டமி என்றும் காலபைரவாஷ்டமி என்றும் சொல்லப்படுகிறது. அன்று பைரவரை வணங்கினால்அவரின் பரிபூரண அருளை நாம் பெறலாம்.

கால பைரவரும் பன்னிரு ராசிகளும்:

காலபைரவரின் திரு உருவத்தில் பன்னிரண்டு ராசிகளும் அவற்றிற்குரிய நட்சத்திரங்களும் அடங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது. சிரசில் மேஷ ராசியும், திருவாய் பகுதியில் ரிஷப ராசியும், ஹஸ்தங்களில் மிதுன ராசியும், திரு மார்பினில் கடக ராசியும், உந்திப் பகுதியில் சிம்ம ராசியும், இடையினில் சிம்ம இராசியும், புட்டப் பகுதியில் துலா இராசியும், லிங்கப் பகுதியில் மகர இராசியும், தொடைப் பகுதியில் தனுசுஇராசியும், முழந்தாள்களில் மகர இராசியும், காலின் கீழ்பகுதிகளில் கும்ப இராசியும், காலின் அடிப்பகுதிகளில் மீனஇராசியும் அமைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

சனி பகவானும் கால பைரவரும்:

சனி பகவானுக்கு குருவாக விளங்குபவர் காலபைரவர் தான் என்பதால், பைரவரை வழிபடுபவர்களுக்கு சனி பகவானால் எந்தவித இடைஞ்சலும் நேராது. சிவபெருமானின் திருக்கோயில்களில் வடகிழக்கு திசையினில் பைரவருக்குத் தனி சன்னதி இருக்கும். ஆலயங்களில் இருக்கும் பைரவரை எந்த நேரத்தில் வழிபட்டாலும் அதற்குண்டான பலன் நிச்சயம் உண்டு.

என்னென்ன கிழமைகளில் என்னென்ன வழிபாடுகளை செய்யலாம்?:

ஞாயிறு அன்று ராகு கால வேளையில், எலுமிச்சம் பழ மாலை சாற்றி விபூதியால் அபிஷேகம் செய்து பின்பு வடைமாலை சாற்றி எள் கலந்த அன்னம் இனிப்புப்பண்டங்கள் சமர்ப்பித்து வழிபட வேண்டும். திங்கள் அன்று ராகுகாலவேளையில் அல்லிமலர்புனுகு சாற்றி பாகற்காய் கலந்த அன்னம் நைவேத்தியம் செய்ய வேண்டும்.

செவ்வாய் அன்று ராகுகால வேளையில் செவ்வரளி மாலை சாற்றி .துவரம் பருப்பு கலந்த அன்னம் நைவேத்தியம் செய்ய வேண்டும். புதன் கிழமை ராகு கால வேளையில், மருக்கொழுந்து மாலை சாற்றி பாசிப் பருப்பு கலந்த அன்னம் நைவேத்தியம் செய்ய வேண்டும்.

வியாழக்கிழமை ராகு கால வேளையில் மஞ்சள் நிறமுடைய மலர்களை மாலையாகச் சாற்றி பால் பாயசம், சுண்டல் ஆகியவற்றை நைவேத்தியம் செய்ய வேண்டும். வெள்ளிக்கிழமையன்று ராகு கால வேளையில் தாமரைமலர்கள்சாற்றி, கேசரி பானகம் சர்க்கரைப் பொங்கல் ஆகியவற்றை நைவேத்தியம் செய்ய வேண்டும். சனிக்கிழமை ராகு கால வேளையில் நாகலிங்கப்பூ சமர்ப்பித்து, பால் பாயசம், எள் கலந்த அன்னம், கருப்பு திராட்சை ஆகியவற்றை நைவேத்தியம் செய்ய வேண்டும்.

6 சனிக்கிழமைகள் 6 எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால் தடைபட்ட காரியங்கள் யாவும் நடைபெறும். திருமணத் தடைகள் யாவும் நீங்கும். குடும்பத்தில் ஒற்றுமை காணப்படும். திருஷ்டி தோஷங்கள் அகலும்.

கால பைரவரை வணங்க அஷ்ட லட்சுமிகளின் அருள் கிடைக்கும்

தனந்தரும்வயிரவன்தளிரடிபணிந்திடின்

தளர்வுகள் தீர்ந்துவிடும்

மனந் திறந்தவன் பதம் மலரிட்டுவாழ்த்திடின்

மகிழ்வுகள் வந்துவிடும் சினந்த விர்த்தன்னையின்

சின்மயப் புன்னகை சிந்தையில் ஏற்றவனே

தனக்கிலையீடுயாருமே என்பான் தனமழைபெய்திடுவான்

banner

Leave a Reply

Submit Comment