Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW
Search

Guru Ashtakam Lyrics in Tamil With Meaning - குரு அஷ்டகம்

July 9, 2021 | Total Views : 6,089
Zoom In Zoom Out Print

குரு அஷ்டகம் ஆதி சங்கர பகவத் பாதாள் அவர்களால் இயற்றப்பட்டது. மாதா, பிதா, குரு, தெய்வம் என்பார்கள். தெய்வத்திற்கும் முன் குருவிற்கான இடம் அளிக்கப்பட்டு இருக்கிறது என்பதிலிருந்து குருவின் மகிமையை நாம் உணரலாம். ஏழு உலகத்தை எழுதுகோலாக வைத்து, அதில் ஏழு கடலையும் எழுதப் பயன்படும் மையாக நிரப்பினாலும் குருவின் பெருமை பற்றி எழுத இயலாது. ஏனெனில் கடவுளையே குரு தான் காட்டுகிறார் என்பதால் குருவிற்கு அவ்வளவு மகிமையும் பெருமையும் உள்ளது என்று கபீர்தாஸ் அவர்கள் குருவின் பெருமை பற்றி கூறியுள்ளார். இதையே தான் ஆதி சங்கரர் அவர்கள் உலகியல் சுகங்கள் எத்தனை இருந்தாலும் குருவின் கமலப் பாதங்களில் உன் மனம் ஒன்றாவிட்டால், பிறகு என்ன பயன்? என்ன பயன்? என்ன பயன்?’- என்று மூன்று முறை திரும்பத் திரும்ப சிஷ்யனுக்குச் சொல்லி, குரு பக்தியின் அவசியத்தை ஆணித்தரமாக வலியுறுத்துகிறார்.

“அஷ்ட” என்றால் எட்டு என்று பொருள். குரு அஷ்டகத்தில் எட்டு ஸ்லோகங்களும் ஒரு பலஸ்ருதியும் உள்ளது. எனவே இந்த குரு அஷ்டகம் ஒன்பது ஸ்லோகங்களைக் கொண்டது.

மேலும், ‘குருவின் கமலப் பாதங்களில் உன் மனம் ஒன்றாவிட்டால், பிறகு என்ன பயன்? என்ன பயன்? என்ன பயன்?’ என்ற வரிகள் முதல் எட்டு ஸ்லோகங்களின் கடைசி வரிகளாக பொதுவாக உள்ளன. இதை திரும்பத் திரும்ப சொல்வதன் மூலம், குரு ஸ்தான மதிப்பை உணர்ந்து சிருஷ்யர்கள் குருவை அடிபணிந்து, பணிவிடை செய்து, படிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி, அப்பொழுதுதான் ‘பயன்’ உண்டாகும் என்பதையும் அறிவுறுத்துகிறார் என்பதை உணரவேண்டும்.

guru ashtakam lyrics in tamil

1.சரீரம் ஸுரூபம் ததா கலத்ரம்

யச:சாரு சித்ரம் தனம் மேருதுல்யம்மிமி

மனஸ்சேத் ந லக்னம் குரோரங்க்ரிபத்மே

தத:கிம் தத:கிம் தத:கிம் தத:கிம்

அழகான சரீரம், அழகான மனைவி, பல விதமான புகழ், மேரு மலை போன்ற செல்வம் இவை அனைத்தும் இருந்தாலும் குருவின் கமலப் பாதங்களில் உன் மனம் ஒன்றாவிட்டால் பிறகு என்ன தான் பயன்? என்ன பயன்? என்ன பயன்? குருவை வணங்காவிட்டால் ஒரு பயனும் இல்லை என்று பொருள்படுகிறது.

2.கலத்ரம் தனம் புத்ரபௌத்ராதி ஸர்வம்

க்ருஹம் பாந்தவா:ஸர்வ மேதத்ஹிஜாதம் I

மனஸ்சேத் ந லக்னம் குரோரங்க்ரிபத்மே

தத:கிம் தத:கிம் தத:கிம் தத:கிம் II

மனைவி, செல்வம், புத்ரன், பேரன், வீடு, உறவினர்கள், புகழ் வாய்ந்த குடும்பத்தில் பிறப்பு – ஆகியவைகள் அனைத்தும் இருந்தும் குருவின் கமலப் பாதங்களில் உன் மனம் ஒன்றாவிட்டால், பிறகு என்ன பயன்? என்ன பயன்? என்ன பயன்? குருவை வணங்காவிட்டால் ஒரு பயனும் இல்லை என்று பொருள்படுகிறது.

3.ஷடங்காதி வேதோ முகே சாஸ்த்ரவித்யா கவித்வாதி கத்யம் ஸுபத்யம் கரோதிமி மனஸ்சேத் ந லக்னம் குரோ ரங்க்ரிபத்மே தத:கிம் தத:கிம் தத:கிம் தத:கிம் II

வேதத்தின் ஆறு பகுதிகளிலும் பாண்டித்தியம், நான்கு வேத இலக்கியம் முழுமையும் கரைகண்ட கல்வி, உயர்ந்த இலக்கிய உரை நடை – கவிதை ஆகியவைகளைப் படைக்கும் திறன் – ஆகியவைகள் அனைத்தும் இருந்தும்,குருவின் கமலப் பாதங்களில் உன் மனம் ஒன்றாவிட்டால் பிறகு என்ன பயன்? என்ன பயன்? என்ன பயன்? குருவை வணங்காவிட்டால் ஒரு பயனும் இல்லை என்று பொருள்படுகிறது.

4.விதேசேஷ மான்ய:ஸ்வதேசஷ தன்ய:

ஸதாசார வ்ருத்தேஷ மத்தோ ந சான்ய: I

மனஸ்சேத் ந லக்னம் குரோரங்க்ரிபத்மே

தத:கிம் தத:கிம் தத:கிம் தத:கிம் II

வெளி நாடுகளில் புகழ், சொந்த நாட்டில் பெரும் செல்வம், நல்லொழுக்கம், கீர்த்தி – ஆகியவைகள் அனைத்தும் இருந்தும் குருவின் கமலப் பாதங்களில் உன் மனம் ஒன்றாவிட்டால் பிறகு என்ன பயன்? என்ன பயன்? என்ன பயன்? குருவை வணங்காவிட்டால் ஒரு பயனும் இல்லை என்று பொருள்படுகிறது.

5.க்ஷமாமண்டலே பூப பூபாலப்ருந்தை:

ஸதா ஸேவிதம் யஸ்ய பாதாரவிந்தம்மி

மனஸ்சேத் நலக்னம் குரோ ரங்க்ரிபத்மே

தத:கிம் தத:கிம் தத:கிம் தத:கிம் II

இந்தப் பார் முழுவதையும் ஆட்சி செய்யும் அரசர்கள் அனைவரும் உனக்கு சேவை செய்ய உன் பாதங்களில் தவம் கிடந்தாலும், குருவின் கமலப் பாதங்களில் உன் மனம் ஒன்றாவிட்டால் பிறகு என்ன பயன்? என்ன பயன்? என்ன பயன்? குருவை வணங்காவிட்டால் ஒரு பயனும் இல்லை என்று பொருள்படுகிறது.

6.யசோ மே கதம் திக்ஷதானப்ரதாபாத்

ஜகத் வஸ்து ஸர்வம் கரே யத்ப்ரஸாதாத்மி

மனஸ்சேத் ந லக்னம் குரோரங்க்ரிபத்மே

தத:கிம் தத:கிம் தத:கிம் தத:கிம் II

உன் கொடைத்திறன் காரணமாக உன் புகழ் திக்கெட்டும் பரவி, இந்த உலகத்தில் எதையும் நீ அடையும் திறன் பெற்றிருந்தாலும் குருவின் கமலப் பாதங்களில் உன் மனம் ஒன்றாவிட்டால்,பிறகு என்ன பயன்? என்ன பயன்? என்ன பயன்? குருவை வணங்காவிட்டால் ஒரு பயனும் இல்லை என்று பொருள்படுகிறது.

7.நபோகே நயோகே நவா வாஜிராஜௌ

நகாந்தா முகே நைவ வித்தேஷ சித்தம்வீ

மனஸ்சேத் ந லக்னம் குரோ ரங்க்ரிபத்மே

தத:கிம் தத:கிம் தத:கிம் தத:கிம் II

சுக போகம், ராஜ்யம், மனைவி, குடும்பம், செல்வம் –ஆகியவைகளில் உன் மனம் ஈடுபடாமல் துறவற மனப்பான்மையில் மூழ்கினாலும், குருவின் கமலப் பாதங்களில் உன் மனம் ஒன்றாவிட்டால்,பிறகு என்ன பயன்? என்ன பயன்? என்ன பயன்? குருவை வணங்காவிட்டால் ஒரு பயனும் இல்லை என்று பொருள்படுகிறது.

8.அரண்யே ந வா ஸ்வஸ்ய கேஹே ந கார்யே

ந தேஹே மனோ வர்ததே மே த்வநர்க்யேவீ

மனஸ்சேத் ந லக்னம் குரோரங்க்ரிபத்மே

தத:கிம் தத:கிம் தத:கிம் தத:கிம் II

காட்டில் அல்லது வீட்டில் வசித்தாலும், உடலை வருத்திச் செயலில் ஈடுபட்டாலும் அல்லது பெரிய சிந்தனையில் மூழ்கினாலும், குருவின் கமலப் பாதங்களில் உன் மனம் ஒன்றாவிட்டால், பிறகு என்ன பயன்? என்ன பயன்? என்ன பயன்? குருவை வணங்காவிட்டால் ஒரு பயனும் இல்லை என்று பொருள்படுகிறது.

9.குரோ ரஷ்டகம் ய:படேத் புண்யதேஹீ

யதிர்பூபதி:ப்ரஹ்மசாரீ ச கேஹீவீ

லபேத் வாஞ்சிதா ர்த்தம் பதம் ப்ரஹ்மஸம்ஜ்ஞம்

குரோருக்தவாக்யே மனோ யஸ்ய லக்னம்மிமி

சந்நியாசியாக இருந்தாலும், அரசராக இருந்தாலும், பிரம்மசாரியாக இருந்தாலும், அல்லது கிருஹஸ்தனாக இருந்தாலும், எவரொருவர் குருவின் மூலம் போதிக்கப்பட்ட இந்த ஸ்லோகங்களை மனத்தில் பதிய வைத்து, பாராயணம் செய்கிறார்களோ அவர்கள் விரும்பியதை அடைவார்கள். பிரம்ம பதவியையும் அடைவார்கள்.

banner

Leave a Reply

Submit Comment