AstroVed Menu
AstroVed
search
search

Gho Suktam Lyrics in Tamil - கோ ஸுக்தம்

dateAugust 25, 2021

நமது இந்திய திருநாட்டில் பசு என்பது போற்றுதற்குரிய ஒன்றாக விளங்குகிறது. மனிதர்களுக்கும் பசுக்களுக்கும் உள்ள தொடர்பு காலம் காலமாக இருந்து வருகிறது. “கோ” என்பது பசுவைக் குறிக்கிறது. எனவே தான் பசுவிற்கு கோமாதா என்றொரு பெயரும் உள்ளது. புண்ணிய நதிகள், சமுத்திரங்கள் பசுவின் உடலில் இருப்பதால் பசுவை வலம் வந்து வணங்கினால் பூமியை வலம் வந்து வணங்கிய பலன் கிடைக்கும். பசுவின் பிருஷ்ட பாகத்தில் லட்சுமி வாசம் செய்வதால் பெருமாள் கோவிலில் விஸ்வரூப தரிசனத்தின் போது பெருமாளின் சந்நிதி நோக்கி பசுவின் பிருஷ்ட பாகம் இருக்கும்படி செய்து, பகவானும் மகாலட்சுமியைப் பார்த்துக் கொள்வது போல செய்கிறார்கள். இவ்வளவு சிறப்பு வாய்ந்த கோமாதா போற்றுதலுக்கு உரியவள். கோஸுக்த பாராயணம் அனைத்து தெய்வங்களின் அருளையும் பெற்றுத் தரும். முன்னூற்று முப்பது கோடி தேவர்கள் பசுவின் அங்கத்தில் வாசம் செய்வதாக ஒரு ஐதீகம் இன்றளவும் நிலவுகின்றது.

கோ பூஜை செய்தால் கோடி நன்மை பெறலாம் என்பது நமது முன்னோர் வாக்கு. அன்னை புவனேஸ்வரி இப்பூலோகத்தில் வசிஷ்டர் ஆசிரமத்தில் தேவ பசுவாக இருந்த நந்தினியின் சொரூபமாக அதாவது பசுவின் வடிவில் விளங்குகிறாள் என்று தேவி புராணங்கள் கூறுகின்றன. சகல சவுபாக்கியத்தை அள்ளித்தரும் கோ பூஜையை ஒவ்வொரு வரும் ஆண்டுக்கு ஒருமுறையாவது விதிப்படி கோ ஸுக்த பாராயணத்துடன் செய்து வரவேண்டும். தினமும் கோ பூஜை மற்றும் கோ ஸுக்த பாராயணம் செய்வது நல்லது. அன்றாடம் செய்ய இயலாதவர்கள்கூட வெள்ளிக்கிழமை கோபூஜை செய்ய வேண்டும். வசதியுள்ளவர்கள் 108 பசுக்களைக் கொண்டு பெரிய அளவில் கோபூஜை செய்யலாம். அவ்வாறு கோபூஜை செய்வது ஆலயத்திற்கும் மக்களுக்கும் மட்டுமின்றி அகிலத்திற்கே நன்மை அளிக்கும்.

gho suktam lyrics in tamil

கோ ஸுக்தம் பாராயணம் தரும் பயன்கள்

  • கிரக கோளாறுகள் நீங்கும்
  • தீராத வியாதிகள் தீரும்
  • சகல சௌபாக்கியங்கள் கிட்டும்

கோ ஸுக்தம்

ஆ கா3வோ அக்3மன்னுத ப4த்ரக்ரன்சீதந்து கோஷ்ட ரண யந்த்வஸ்மே

பிரஜாவதி: புருரூபா இஹ ஸ்யுரிந்த்ராய பூர்விரூஷஸோ துஹானா: ||

இந்த்3ரோ யஜ்3வனே ப்ருனதே ச ஷிக்ஷத்யுபேத்3யதாதி நஸ்வம் முஷாயதி

பூ4யோபூ4யோ ரயிமிதஸ்ய வர்தயன்னபின்னே கி2ல்யே நி த3தா4தி தே3வயும்||

ந தா நஷந்தி ந த3பா4தி தஸ்கரோ நாசாமாமித்ரோ வ்யதிரா த3த4ர்ஷதி

தே3வாம்ஷ்ச் யாபி4ர்யஜதே த3தா3தி ச ஜ்3யோகி3த்தாபி4: ஸசதே கோ3பதி : சஹ||

ந தாஅர்வா ரேணுககாடோ1 அஷ்நுதே ந சம்ஸ்க்ருதத்ரமுப யந்தி தா அபி4

உரகாயமபயம் தஸ்ய தா அனு காவோ மர்த்ஸ்ய வி சரந்தி யஜ்வன||

கா3வோ ப4கோ கா3வ இந்த்ரோ மே அச்சான்கா3வ: சோமஸ்ய பிரதமஸ்ய ப4க்ஷ:

இமா யா கா3வ: ஸ ஜ3னாஸ இந்த்ர இச்சாமீத்4 த்3ருதா மனஸா சிந்தி3ந்த்3ரம்||

யூயம் கா3வோ மேத3யதா க்ருஷம் சித3 க்ஷீரம் சித் க்ருனுதா சுப்ரதீகம் ப4த்ரம் க்ருஹம் க்3ருனுத ப4த்3ரவாசோ ப்3ருஹத்3வோ வய உச்யதே ஸசபா4ஸு||

பிரஜாவதி ஸுயாவஸம் ரிஷந்தி ஷுத்தா3 அப : சுப்ரபானே பிப3ந்தி மா வ ஸ்தேன ஈஷத் மாகா4ஷம்ஸ் : பரி வோ ஹேதி ருத்3ரஸ்யா வ்ருஜ்யா||

உபேத3முப பர்சனமாஸு கோ3ஷூ ப ப்ருச்யதாம் உப ரி ஷ ப4ஸ்ய ரேதஸ்யுபேன்ந்3த்ர தவ வீர்யே||


banner

Leave a Reply