Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW

Ganesha Pancharatnam Tamil Lyrics

May 8, 2020 | Total Views : 1,160
Zoom In Zoom Out Print

முழு முதற் கடவுள் என்று போற்றப்படும் விநாயகர்  விக்னங்களைத் தீர்ப்பவர். எந்த ஒரு செயலை நாம் ஆரம்பித்தாலும் முதலில் விநாயகரை வணங்கிவிட்டுத் தான் அந்தச் செயலைத் தொடங்குவது தொன்று தொட்டு நம்மிடையே இருந்து வரும் வழக்கம் ஆகும். பஞ்ச என்றால் ஐந்து என்று பொருள். இரத்தினம் என்றால் விலை மதிப்பற்றது. விநாயகரின் எல்லை இல்லாத  அருளைப் பெற்றுத் தரும் பாடல் தான் கணேஷ பஞ்ச ரத்னம் . ஐந்து பத்திகளைக் கொண்ட இந்த பாடல் கணேஷ பஞ்ச ரத்னம் என்று கூறப்படுகின்றது. ஆறாவது பத்தி இந்தப் பாடலை துதித்துப் பாடுவதன் மூலம் நாம் பெரும் பயனை விளக்குகின்றது. இந்தப் பாடல் அருள் மிகு ஆதி சங்கரர் அவர்களால் இயற்றப்பட்டது. இந்தப் பாடல் சமஸ்கிருத மொழில் அமைந்துள்ளது. எனவே அதன் விளக்கங்கள் தமிழில் வழங்கப்பட்டுள்ளது. கணேஷ பஞ்ச ரத்னம் பற்றி மேலும் அறிய கிளிக் செய்யவும் 

கணேச பஞ்சரத்னம் பாடலும் அதற்கான விளக்கமும்

1. முதாகராத்த மோதகம் ஸதா விமுக்தி ஸாதகம்
கலா தராவ தம்ஸகம் விலாஸிலோக ரக்ஷகம் |
அநாயகைக நாயகம் வினாஸிதே பதைத்யகம்
நதாஸுபாஸு நாஸகம் நமாமி தம் விநாயகம் ||

மிகவும் ஆனந்தமாகக்  கையில் மோதகத்தை வைத்திருப்பவரும், மோக்ஷத்தை விரும்பும் பக்தர்களுக்கு அதை வழங்கும் ஒரு மூலப் பொருளாக இருப்பவரும்,  சந்திரனைத் தலையில் அணிந்திருப்பவரும், மிக எளிதாக உலகத்தைக் காப்பவரும், தனக்கு நிகர் இல்லாதவரும், அதாவது தனக்கு மேல் ஒரு தலைவர் இல்லாதவரும், கஜ முகாசுரனை அழித்தவரும், தனது பக்தர்களை தீமையில் இருந்து காப்பவருமான விநாயகரை வணங்குகிறேன்.

2. நதேதராதி பீகரம் நவோதிதார்க்க பாஸ்வரம்
நமத்ஸுராரி நிர்ஜரம் நதாதிகாப துத்தரம் |
ஸுரேச்வரம் நிதீஸ்வரம் கஜேஸ்வரம் கணேஸ்வரம்
மஹேச்வரம் தமாச்ரயே பராத்பரம் நிரந்தரம் ||

தன்னை வணங்காதவர்களுக்கு விக்னங்களை அளித்து பயம் தருபவராக இருக்கிறார். சூரிய ஒளியைப் போல விளங்குபவர். தேவர்களும் அசுரர்களும் வணங்கத்தக்கவர். தேவர்களுக்குத் தலைவனாக விளங்குபவர், நிதிகளின் அதிபதியாக இருப்பவர். ஓங்கார வடிவானவர். பூத கணங்களுக்குத் தலைவர். பரம்பொருளாய் இருக்கும் விநாயகரை எல்லா நேரமும் சரணடைகின்றேன்

3. ஸமஸ்த லோக சங்கரம் நிரஸ்த தைத்ய குஞ்சரம்
தரேதரோதரம் வரம் வரேபவக்த்ரமக்ஷரம் |
க்ருபாகரம் க்ஷமாகரம் முதாகரம் யசஸ்கரம்
மநஸ்கரம் நமஸ்க்ருதாம் நமஸ்கரோமி பாஸ்வரம் ||

உலகத்திற்கு மங்களத்தை அளிப்பவர். கஜ முகாசுரனை அழித்து உலக மக்களுக்கு மங்களம் அளிப்பவர். பருத்த தொந்தியும் யானை முகமும் உடையவர். கருணை வடிவானவர். மன்னிக்கும் குணமும் பொறுமையும் உடையவர். நமக்கு சந்தோசத்தையும் நல்ல புகழையும் அளிப்பவர். நல்ல மனதை அருள்பவர்.  அந்த ஒளி வடிவான கணபதியை நான் வணங்குகிறேன்.

4. அகிஞ்சனார்த்தி மார்ஜனம் சிரந்தனோக்த்தி பாஜனம் |
புராரி பூர்வநந்தனம் ஸுராரி கர்வ சர்வணம்
ப்ரபஞ்சநாசபீஷணம் தனஞ்ஜயாதி பூஷணம்
கபோல தான வாரணம்பஜே புராண வாரணம் ||

வறியவர்களின் துன்பத்தை துடைப்பவர். வேத வசனங்களால் துதிக்கப்படுபவர். முப்புரம் எரித்த சிவனின் மூத்த மைந்தனாய் இருப்பவர். அசுரர்களின் கர்வத்தை அடக்கியவர். பிரபஞ்சத்தை அழிக்கக் கூடிய பிரளயம் போன்றவர். தனஞ்சயன் என்ற பாம்பை அணிந்திருப்பவர். மத ஜலம் ஒழுகும் யானை வடிவானவர். அத்தகைய பரம்பொருளை பூஜிக்கிறேன்.

5. நிதாந்த காந்த தந்த காந்தி மந்த காந்த காத்மஜம்
அசிந்த்ய ரூப மந்தஹீன மந்தராய க்ருந்தனம் |
ஹ்ருதந்தரே நிரந்தரம் வஸந்தமேவ யோகினாம்
தமேக தந்தமேவ தம் விசிந்தயாமி ஸந்ததம் ||

பளிச்சென்று ஒளி வீசும் தந்தம் உடையவர். மார்கண்டேயனுக்காக எமனைக் கொன்ற சிவனின் மைந்தன். வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத ரூபம் உடையவர். முடிவற்றவர். பக்தர்களின் இடையூறுகளைப் போக்குபவர். யோகிகளின் இதயத்தில் வசிப்பவரான அந்த ஏக தந்தனை தியானம் செய்கிறேன்.

6. மஹா கணேஸ பஞ்சரத்ன மாதரேண யோ(அ)ன்வஹம்
ப்ரஜல்பதி ப்ரபாதகே ஹ்ருதி ஸ்மரந் கணேஸ்வரம் |
அரோகதாமதோஷதாம் ஸுஸாஹிதீம் ஸுபுத்ரதாம்
ஸமாஹிதாயு ரஷ்டபூதி மப்யுபைதி ஸோசிராத் ||

இந்த கணேச பஞ்சரத்னத்தை எவர் தினமும் காலையில்  கணபதியை மனதில் தியானித்துக் கொண்டு பாராயணம் செய்கிறாறோ, அவர் திடமான ஆரோக்கியத்தையும், நல்ல கல்விச் செல்வத்தையும்,  நன்மக்களையும், அஷ்ட ஐஸ்வர்யங்களையும்  பெற்று நீண்ட ஆயுளுடன் வாழ்வார்கள்.

…ஸ்ரீ மகா கணேச பஞ்சரத்னம் ஸம்பூர்ணம்…

banner

Leave a Reply

Submit Comment