Dattatreya Jayanthi 2023: Power Day to Invoke Dattatreya to Remedy Problems in Life, Regain Prosperity & Attain Material Fulfillment Join Now
India's No. 1
Online Astrology &
Remedy Solution

February Month Rasi Palan 2019 in Tamil

January 10, 2019 | Total Views : 9,936
Zoom In Zoom Out Print

கும்பம் பிப்ரவரி மாத ராசி பலன் 2019 - February Matha Kumbam Rasi Palan in Tamil 2019

தவறுகளைச் சரிசெய்து கொள்வதற்கு இது மிகச் சிறந்த நேரமாகும். இந்தக் காலகட்டம் சிறப்பாக அமைய உங்கள் முயற்சிகள் உதவும். மேல் அதிகாரிகள் உங்கள் திறமைகளை நன்கு அடையாளம் காண்பார்கள். உங்களில் சிலருக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பு உண்டு. தொலைதூர நாடுகளில் இடம்பெயர்வதற்கு நீங்கள் செய்யும் முயற்சிகள் வெற்றி பெறலாம். போலியான எண்ணங்களைத் தவிர்த்து விடுங்கள். ஏனென்றால் அவை உங்கள் வேலையைப் பாதிக்கலாம்.

உங்கள் பணிகளை செய்வதில் சோம்பேறித்தனமாக இருக்காதீர்கள். இது மன அழுத்தத்தையும், தாமதத்தையும் ஏற்படுத்தும். நம்பகமானவர்கள் கூட உங்களை திடீரென்று ஏமாற்ற முயலலாம், அதைப் பற்றி எச்சரிக்கையாக இருங்கள். நெருக்கமான உறவுகளை நீங்கள் நன்றாகவே பராமரித்துப் போற்றுவீர்கள். சமூக வாழ்க்கையில், நீங்கள் பல்வேறு கலாச்சாரங்களைச் சேர்ந்த மக்களைச் சந்திப்பீர்கள். உங்கள் உடல் நலத்தில் நீங்கள் செலுத்தும் கவனம், உங்களை, சுறுசுறுப்பாகவும் சந்தோஷமாகவும் இருப்பதற்கு உதவும். மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்

உங்களது ஜாதக பிரத்யேக பலன்களை தெரிந்து கொள்ள ஜோதிட வல்லுனரை அணுகவும்

மேஷம் பிப்ரவரி மாத ராசி பலன் 2019 - February Matha Mesham Rasi Palan in Tamil 2019

இந்த மாதம், உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் சாதாரணமாக காணப்படும். நீங்கள் சூழ்நிலையை சரியாக பயன்படுத்த வேண்டும். மேலும், எதிர்பார்க்கும் பலன்களை பெறுவதற்கு பொறுமையாக இருக்க வேண்டும். பணியில் உங்களின் சிறந்த சேவைக்காக அரசாங்கத் துறையிலிருந்து நீங்கள் விருதுகளைப் பெறுவீர்கள். சமூக சேவை செய்வதில் உங்கள் ஆர்வமும் ஈடுபாடும் மனதிற்கு திருப்தி அளிக்கும். பொருளாதார விவகாரங்களில் நீங்கள் மிகப் பெரும் சாதனைகள் செய்யக் கூடும். பல புதிய, விலையுயர்ந்த உடைமைகள் உங்களை வந்து சேரும்.

குடும்ப உறுப்பினர்கள் குறித்த உங்கள் எண்ணங்களையும், நடத்தையையும் ஜாக்கிரதையாகக் கையாளவும். யோகா பயிற்சிகள், உங்கள் எண்ணங்களுக்கு வலுவூட்டும், பொறுமையையும் அளிக்கும். உங்கள் நம்பிக்கை, பல முக்கியமான பிரச்சினைகளைத் தீர்க்கும். தேக ஆரோக்கியம் சாதாரணமாக இருக்கும். மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்

உங்களது ஜாதக பிரத்யேக பலன்களை தெரிந்து கொள்ள ஜோதிட வல்லுனரை அணுகவும்

கடகம் பிப்ரவரி மாத ராசி பலன் 2019 - February Matha Kadagam Rasi Palan in Tamil 2019

இந்த மாதம் உங்கள் விருப்பங்கள் நிறைவேறுவதற்கு சிறந்த மாதம் என்று கூற இயலாது. சாதாரண மாதமாக இருக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில், உங்கள் நடவடிக்கைகளை நீங்கள் எந்தவொரு தாமதமும் இன்றி செய்ய நீங்கள் தயாராக இருக்க வேண்டும். எவ்வளவு விரைவில் முடிக்க முடியுமோ அவ்வளவு விரைவில் எல்லாவற்றையும் முடிக்கப் பாருங்கள். ஏனென்றால் உங்களிடம் அதிக நேரம் இல்லாமல் போகலாம்.

பொருளாதாரம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் பிரச்சனைகள் காணப்படலாம். இது, பதட்டமான சூழ்நிலைக்கு வழி வகுக்கும். பிறருடன் உரையாடும் போது நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் நண்பர்களுடனும், உறவினர்களுடனும் நீங்கள் தேவையற்ற பேச்சுகளைத் தவிர்க்க வேண்டும். சரியான நேரத்தில் உணவு உட்கொள்ளாததால், உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொள்ளலாம். உங்கள் உணவு மற்றும் உடற்பயிற்சியில் கவனம் செலுத்தி உடல் வலிமை பெறுங்கள். மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்

உங்களது ஜாதக பிரத்யேக பலன்களை தெரிந்து கொள்ள ஜோதிட வல்லுனரை அணுகவும்

மகரம் பிப்ரவரி மாத ராசி பலன் 2019 - February Matha Makara Rasi Palan in Tamil 2019

இந்த மாதம் உங்களுக்கு ஒரு நல்ல காலகட்டமாக இருக்கும். முழு வேகத்துடன் கடமைகளை முடிப்பதற்கான தகுந்த நேரமும் இது தான். பிறர் அளிக்கும் உத்தரவாதங்களை நீங்கள் நம்ப வேண்டும். அது உங்களுக்கு நன்மையை அளிக்கும். அவசர முடிவெடுக்காதீர்கள். நிலுவையிலுள்ள வேலைகளை முடிப்பதற்கு தொடர்ந்து முயற்சி செய்வது நல்லது. உங்களுக்குச் சொந்தமாக, நிலையான சொத்து ஒன்றை வாங்கவும் வாய்ப்பு கிடைக்கும்.

உறவினர்களுடன் உங்கள் தொடர்பு விரைவாக மேம்படும். சமூக தொடர்புக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். நீங்கள் குடும்பத்துடன் பயணம் மேற்கொள்ளுவீர்கள். அது குடும்பம் முழுவதற்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கும். தொழிற்துறை மேன்மை அடையும். உங்கள் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் வழங்குவீர்கள். இது நல்ல பலனைத் தரும். மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்

உங்களது ஜாதக பிரத்யேக பலன்களை தெரிந்து கொள்ள ஜோதிட வல்லுனரை அணுகவும்

மிதுனம் பிப்ரவரி மாத ராசி பலன் 2019 - February Matha Mithunam Rasi Palan in Tamil 2019

இந்த மாதம் உங்களுக்கு சுமாரான காலமாக இருக்கும். குடும்பத்தில் ஏற்படும் சண்டைகள் மற்றும் தேவையற்ற பதற்றங்கள் காரணமாக நீங்கள் உணர்வு பூர்வமாக பாதிக்கப்படலாம். சமூக அளவில், தகவல் தொடர்புகள் மிகவும் அதிகரிக்கக்கூடும். இவற்றைக் கையாள்வதில் உங்களுக்குத் தெளிவு தேவை. அண்டை வீட்டாருடனான உறவுகள் குறிப்பிடத்தக்க வகையில் மேம்படும்.

தனிப்பட்ட வாழ்க்கையில் உங்களுக்கு எதிர்பாராத கஷ்டங்கள் வரக்கூடும், இவற்றுக்குத் தீர்வு காண, தகுந்த நடவடிக்கைகள் தேவைப்படலாம். பணிகளை ஆற்றும் போது, நீங்கள் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். தேவையற்ற செலவினங்களை கண்காணிக்க வேண்டும். உங்கள் ஆரோக்கியத்தை நன்றாக பாதுகாத்தல் உங்கள் குடும்ப வேலைகளை நீங்கள் சுறுசுறுப்பாக செய்ய முடியும். மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்

சிம்மம் பிப்ரவரி மாத ராசி பலன் 2019 - February Matha Simha Rasi Palan in Tamil 2019

சரியாக திட்டமிட்டு, முறையாகச் செயல்படுவதற்கு ஏற்ற மாதம் இது. கடமைகளை, சாக்குப் போக்கு சொல்லாமல் நிறைவேற்றுங்கள். உங்கள் ஒவ்வொரு முயற்சியும் நிறைவேறும், அது உங்கள் முன்னேற்றத்துக்கு வழி வகுக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும், அது உங்களுக்கு திருப்தி அளிக்கும். கடன்களை விரைவாகத் தீர்த்து, நிவாரணம் பெறுவீர்கள். உங்கள் அறிவாற்றலும், கடின உழைப்பும், சமூக வாழ்க்கையில் மதிப்பு பெற்றுத் தரும்.

கடந்த காலத்தில் நீங்கள் செய்த தவறுகளைத் திருத்திக் கொண்டால், உங்கள் வாழ்க்கை முன்னேற்றம் அடையும். வேலையில் உங்களுடைய உற்பத்தித் திறனை அதிகரித்துக் கொள்வது, நன்மை தரும். நோய்களுக்கு நல்ல நிவாரணம் கிடைத்து, உங்கள் ஆரோக்கியம் சீராக இருக்கும். மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்

துலாம் பிப்ரவரி மாத ராசி பலன் 2019 - February Matha Thulam Rasi Palan in Tamil 2019

நன்மை பயக்கக்கூடிய அனுகூலமான காலம் இது. தனிப்பட்ட வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும். உங்கள் முயற்சிகளுக்கு நீங்கள் விரும்பிய பலன்கள் கிடைக்கும். நிதிநிலை தாராளமாக இருக்கும்; சில எதிர்பாராத நன்மைகளையும் நீங்கள் அனுபவிக்கலாம். வாழ்க்கையில் நிகழும் எதிர்மறை சம்பவங்களைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். அவைகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும்.

நீங்கள் ஈடுபட்டுள்ள வேலைகளில் முழுமனதுடன் தொடர வேண்டும். தொலைதூர இடங்களுக்கு பயணம் செய்ய வாய்ப்பு கிடைத்தால், அதற்குத் தயாராக இருக்க வேண்டும். நீங்கள் சிறந்த முறையில் பணியாற்றியமைக்காக அரசாங்க நிறுவனங்களிலிருந்து விருதுகளைப் பெறுவீர்கள். ஆரோக்கியத்தை பேணுவதன் மூலம் நீங்கள்சிறப்பாக உணரலாம். மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்

மீனம்  பிப்ரவரி மாத ராசி பலன் 2019 - February Matha Meenam Rasi Palan in Tamil 2019

உங்களுடைய உறுதியும், தன்முனைப்பும் உங்களுக்கு வெற்றியின் பாதையைக் காட்டும். சூழ்நிலைகளைக் கையாளுவதில் உங்கள் சுதந்திர இயல்பானது, உங்கள் மனநிலையை மேலும் வலிமையாக்கும். வேலையில் உங்களுடைய நம்பகத்தன்மைக்கு பாராட்டுக்கள் கிடைக்கும். இந்த மாதத்தில் நீங்கள் மிகவும் இயல்பாக இருப்பீர்கள், ஓய்வாக உணருவீர்கள். உங்கள் ஒவ்வொரு முயற்சியும் உங்களைப் பிரபலமாக்கும். நீங்கள் உங்கள் வார்த்தைகளைக் கட்டுப்படுத்த வேண்டும், இந்த நேரத்தில் உங்கள் பேச்சு கடுமையாக இருக்கக் கூடும்.

பல பணிகளையும் ஒரே நேரத்தில் செய்யும் உங்கள் திறன், சில தாமதங்களுக்குப் பிறகு நீங்கள் விரும்பிய வெற்றியை வழங்கும். பொது வாழ்வில் உங்கள் புகழ் அதிகரிக்கப் போகிறது. உங்களுடைய மன திருப்திக்கு நீங்கள் சமூக சேவை செய்வீர்கள். இந்த காலத்தில், ஆரோக்கியத்துக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், ஏனென்றால் இந்த மாதம் வேலை பளு அதிகமாக இருக்கும். மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்

தனுசு பிப்ரவரி மாத ராசி பலன் 2019 - February Matha Dhanu Rasi Palan in Tamil 2019

இந்த மாதம் தனுசு ராசிக்காரர்களுக்கு சுமாரான மாதம் ஆகும். நீங்கள் உற்சாகமாக செயலாற்றிய போதிலும் நீங்கள் விரும்பும் பலன்களைப் பெற முடியாமல் போகலாம். சில பணிகளை பொறுமையுடன் மேற்கொள்ள வேண்டும். நீண்ட காலமாக நிலுவையில் வைக்கப்பட்டுள்ள வேலைகளைப் பற்றிய முடிவுகளை எடுப்பதற்கு இது சரியான நேரம். உங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி நிலுவையில் உள்ள பணிகளை முடித்து வாங்குவீர்கள். உங்கள் கடன்கள் எளிதில் தீர்க்கப்படும். பணியில் உங்களுடைய செயல்திறன் உங்கள் புகழை மேம்படுத்தலாம்.

நீங்கள் தன்னம்பிக்கையுடன் பணியாற்றுவீர்கள் ஆனால் அவற்றை முடிப்பதில் தாமதம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சமூகத்தில் வலுவான உறவுகளை நீங்கள் பராமரிப்பீர்கள். குடும்ப விஷயங்களை புரிந்து கொண்டு நடக்க முயல்வீர்கள். உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். நீங்கள் சிறிய பிரச்சினைகளைக் கூட புறக்கணிக்கக் கூடாது. மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்

விருச்சிகம் பிப்ரவரி மாத ராசி பலன் 2019 - February Matha Viruchigam Rasi Palan in Tamil 2019

இந்த மாதம் பணிகளை வேகமாக முடிப்பதற்கு ஏதுவான மாதம் ஆகும். உங்கள் முக்கிய பணிகள் நிறைவேறும். தொழில் சார்ந்த பயணங்களுக்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும். உங்கள் செயல்கள் தனிப்பட்ட வாழ்க்கைக்கு முக்கியத்துவம் அளிப்பதாக அமையும். நீங்கள் பலருக்கும் சிறந்த ஆலோசனைகள் வழங்குவீர்கள். அது உங்களுக்கு மன திருப்தியை அளிக்கலாம்.

 

நிலுவையில் உள்ள வேலைகளை முடிப்பதற்கு இது உகந்த நேரம். நண்பர்களுடன் சேர்ந்து, வெளிப்புற விளையாட்டுகளில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். இது உங்களுக்கு மன அமைதியும், ஓய்வும் அளிக்கும். நீங்கள் நிலையான சொத்து வாங்குவதற்கும் திட்டமிடுவீர்கள். அது உங்களுக்கு சந்தோஷம் தரும். குடும்பத்தில் ஏற்படும் மகிழ்ச்சியால் நீங்கள் புத்துணர்வு கொள்வீர்கள். உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்

ரிஷபம் பிப்ரவரி மாத ராசி பலன் 2019 - February Matha Rishabam Rasi Palan in Tamil 2019

இந்த மாதம் சிறந்த முடிவுகளைக் கொடுக்கக்கூடிய நல்ல ஒரு மாதமாக இருக்கும். உங்கள் வெளிப்படையான செயல்கள் பாராட்டப்படும். உங்கள் முயற்சிகள் வெற்றியைத் தரும். மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ உதவும். உங்கள் வேலையில் செய்யும் நல்ல முயற்சிகளுக்கு, அதிகாரிகளிடமிருந்து பாராட்டும், சலுகைகளும் கிடைக்கும். உங்கள் கருத்துக்களுக்கு பிறர் முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

 

உங்கள் வழக்கமான செயல்களில் அதிர்ஷ்டம் காண்பீர்கள். சமூக வட்டாரத்தில், உயர் நிலையில் உள்ளவர்களுடன் நட்பை வளர்த்துக் கொள்வீர்கள். தொழிலில், நல்ல வருவாயுடன் முன்னேறுவீர்கள். இம் மாதத்தில் சிறு பயணங்கள் இருக்கும். அவைகளில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். உடல்நலம் நன்றாக இருக்கும். மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்

கன்னி பிப்ரவரி மாத ராசி பலன் 2019 - February Matha Kanni Rasi Palan in Tamil 2019

உங்களுக்கு இது, முன்னேற்றமும், வெற்றியும் நிறைந்த ஒரு மாதமாக அமையும். நீங்கள் மேற்கொள்ளும் எளிய சில மாற்றங்கள், இனிமையான அனுபவங்களைத் தரும். உங்கள் வேலைத் திறன், எதிர்பார்த்த பதவியைப் பெற்றுத் தரும். தொழில் தொடர்பாக, விமானப் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்புகளும் வரலாம். துணிச்சல் உங்களுக்குக் கைகொடுக்கும்; சவாலான வேலைகளையும் முடிக்க உதவும். பணியிடத்தில் சுமுக உறவு நிலவும். பணி விஷயங்களில் மிகவும் ரகசியம் காக்கத் தேவையில்லை.

சந்தோஷமும், கொண்டாட்டமும் நிறைந்த குடும்ப வாழ்க்கை மனமகிழ்ச்சி தரும். வெகு நாட்களாய் நீங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த குழந்தை வரம், இப்போது கிட்டலாம். தனிப்பட்ட வாழ்க்கையில், கடமைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயலாற்றினால், அவை நன்றாகவே நிறைவேறும். உடல் ஆரோக்கியமும், உங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப, நன்றாகவே இருக்கும். மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்

Leave a Reply

Submit Comment
  • ANYA
    February Month Rasi Palan 2019 in Tamil, Is this available in English? Thank you
    February 14, 2019