AstroVed Menu
AstroVed
search
search

தானத்தின் பலன்கள்

dateJune 9, 2023

நமது வாழ்நாளில், நாம் சம்பாதிக்கும் பணத்தில் சிறிதளவேனும்  தான தருமங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்று பெரியோர்கள் கூறுவார்கள். நம்மைச் சுற்றி எத்தனயோ பேர் பொருள் இல்லாத நிலையில் இருக்கிறார்கள். தானம் அளிப்பதன் மூலம் அவர்களுக்கு உதவியது போலும் இருக்கும். நமக்கு புண்ணியத்தை சேர்த்துக் கொண்டது போலவும் இருக்கும். தானங்களில் சிறந்தது அன்னதானம் என்றாலும் ரத்த தானம், கண் தானம், உடல் உறுப்பு தானம் என்று எத்தனயோ தானங்கள் உள்ளன. அது மட்டும் இன்றி நாம் அன்றாடம் உபயோகிக்கும் சில பொருட்களை தானம் அளிப்பதன் மூலம் வெவ்வேறு பலன்கள் கிட்டும். அவற்றைப் பற்றி இங்கு காண்போம்.

அன்ன தானம்

பூர்வ ஜென்ம கர்ம வினைகள் நீங்கும். கடன் தொல்லைகள் நீங்கும்; பித்ருக்களின் ஆசிகள் கிட்டும்.

அரிசி தானம்

நாம் செய்யும் பாவங்கள் விலகும்
வஸ்திர தானம்

ஆயுளை விருத்தி செய்யும். சுகபோக வாழ்வு அமையும்

பால் தானம்

துக்கம் நீங்கும்; துன்பங்கள் விலகும்

தயிர் 

 இந்திரிய விருத்தி ஏற்படும்

நெய் தானம்

பிணிகள் நீங்கும்; மோட்சம் கிட்டும் ; தேவதைகளின் அனுக்கிரகம் கிட்டும்

கோதுமை தானம்

ரிஷிகடன், தேவகடன் மற்றும் பித்ரு கடன்களை நீக்கும்

தேங்காய் தானம்

குடும்ப குழப்பங்கள் நீங்கும். எடுத்த காரியங்களில் வெற்றி கிட்டும்

தீப தானம்

எதிர்பாராத யோகத்தை கொடுக்கும் ; முன்னோர்களின் ஆசிகள் கிட்டும்

தேன் தானம்

புத்திர பாக்கியம் கிட்டும் ; இனிய குரல் வளம் கிட்டும்

பூமி தானம்

பிறவா நிலை உண்டாகும்

பழங்கள் தானம்

மன அமைதி உண்டாகும்; ஜீவன்களை வதைத்த சாபம் நீங்கும்

வஸ்திர தானம்

ஆயுள் விருத்தி உண்டாகும்

கம்பளி தானம்

பயம் நிவர்த்தி ஆகும். துர் சொப்பனங்கள் நீங்கும்

கோ தானம்

   பித்ரு கடன் நீங்கும்

தயிர் தானம்

இந்திரிய விருத்தி உண்டாகும்

நெல்லிக்கனி தானம்

ஞானம் மற்றும் அறிவு மேம்படும்

குடை தானம்

தவறான வழியில் செல்வம் சேர்த்த பாவங்கள் விலகும்.  எண்ணிய எதிர்காலம் உண்டாகும்

பாய் தானம்

அமைதியான மரணம் உண்டாகும்

காய்கறிகள் தானம்

குழந்தை ஆரோக்கியம் மேம்படும்

பூ தானம்

விரும்பிய இல்வாழ்க்கை அமையும்

சொர்ண தானம்

புண்ணியம் உண்டாகும் தோஷம் நிவர்த்தியாகும்

வெள்ளி தானம்

கவலைகள் நீங்கும்

எண்ணெய் தானம்

அறிந்தும் அறியாமலும் செய்த கர்ம வினைகள் அகலும். ஆரோக்கியம் உண்டாகும்

காலணி தானம்

பெரியோர்களை அவமதித்த பாவம் போக்கும்

மாங்கல்ய சரடு தானம்

  மாங்கல்ய பலம் உண்டாகும் மாங்கல்ய தோஷம் நீங்கும்; திருமணத் தடைகள் நீங்கும்

பொன் மாங்கல்ய தானம்

திருமண தடைகள் நீங்கும்

மஞ்சள் தானம்

சுபிட்சம் உண்டாகும்

எள் தானம்

சாந்தி உண்டாகும்

வெல்ல தானம்

வம்ச விருத்தி உண்டாகும்

தண்ணீர் தானம்

மன மகிழ்ச்சி உண்டாகும்

சந்தன தானம்

புகழ் மற்றும் கீர்த்தி உண்டாகும்

புத்தகம் தானம்

கல்வி ஞானம் உண்டாகும்

காய்கறிகள் தானம்

  பித்ரு சாபங்கள் விலகும், குழந்தைகளின் ஆரோக்கியம் வளரும்

நாம் அறிந்தவர்கள், மற்றும் தெரிந்தவர்களுக்கு தானம் அளிப்பதை விட தேவைப்படுபவர்களுக்கு தானம் அளிப்பது தான் சிறப்பானது. அதே போல தானம் அளிக்கும் பொருளும் சிறப்பானதாக இருக்க வேண்டும். பழைய பொருட்களையோ, சேதம் அடைந்த அல்லது அழுகிய பொருட்களையோ தானம் அளிப்பது சிறந்தது அல்ல.  


banner

Leave a Reply