Arupadai Veedu Muruga Program 2024: Invoke Muruga at His 6 Powerful Abodes During the 6th Moon Powertime Days JOIN NOW
Search

சித்திரை நட்சத்திரம், சித்திரை நட்சத்திரம் குணங்கள் ,பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்

May 2, 2020 | Total Views : 3,775
Zoom In Zoom Out Print

இந்த பூமியில் வாழ்க்கை என்னும் பாதையில் நாம் அனைவரும் பயணம் செய்தாலும் நமது இலக்கு, திசை, நோக்கம் வெவ்வேறாகத் தான் இருக்கின்றது. இதனை நாம் யாரும் மறுக்க இயலாது.  நமது உடல் இயக்கமும், நமது உள்ளம்,  உணர்வு சார்ந்த  அத்தனை இயக்கங்களும் இறையருளால் தான் நடக்கின்றது. நீங்கள் இறை நம்பிக்கை இல்லாதவர்கள் என்றால்,  அது உங்கள் சக்திக்கும் மீறிய ஒரு இயற்கை சக்தி என்று கூட நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். நமது முன்னோர்கள் வகுத்த பாதையில் நாம் நமது வசதிக்கென்று  காலத்திற்கு தக்கவாறு பல மாற்றங்களை செய்து கொண்டு வாழ்வில் முன்னேற நினைக்கிறோம். எது நம்மை வழி நடத்துகின்றது? எது நமது வாழ்க்கையை  தீர்மானிக்கின்றது?  இந்த பிரபஞ்சத்தில் ஒரு துளியாய் இருக்கும் நமது வாழ்வில் நமது அத்தனை இயக்கங்களும்  கிரகங்கள் மூலமாக,  நட்சத்திரங்கள் மூலமாக வழிநடத்தப்படுகின்றன என்று கூறினால் அது தான் நிதர்சனமான உண்மை. ஒருவருடைய ஜாதகப்படி, பிறக்கும் போது, சந்திரன் எந்த நட்சத்திரத்தின், எந்த பாதத்தில் நிற்கிறாரோ அதுவே அவருடைய ஜென்ம நட்சத்திரம் ஆகும். நமது முன்னோர்கள் ஜோதிட சாஸ்திரத்தில் 27 நட்சத்திரங்களை முக்கியமாகக் கருதினார்கள். அவற்றுள் பதினான்காவதாக வரும் நட்சத்திரம் சித்திரை நட்சத்திரம் ஆகும். 

இது வான் மண்டலத்தில் 173  பாகை 20கலை முதல் 186 பாகை 40 கலை வரை வியாபித்து உள்ளது. இது ஒரு நட்சத்திரம் மட்டுமே கொண்டது. இது பார்ப்பதற்கு முத்து போன்ற தோற்றம் கொண்ட நட்சத்திரம் ஆகும். ஒவ்வொரு நட்சத்திரங்களும் நான்கு பாதங்கள் கொண்டது.  இதன் முதல் இரண்டு பாதங்கள் கன்னி ராசியிலும் மீதி இரண்டு பாதங்கள் துலா ராசியிலும் உள்ளது. இதன் அதிபதி செவ்வாய் ஆகும். 

ஒரு மனிதனின் குண இயல்புகளைத் தீர்மானிக்கும் சக்தி அந்தந்த நட்சத்திரத்திற்கு இருக்கின்றது. அதே சமயம் அந்த நட்சத்திரத்தால் ஏற்படக் கூடிய பாதிப்புகளை தாங்கிக் கொள்ளும் சக்தி பெற அல்லது நிவர்த்தி செய்து கொள்ள இறையருளால் இயலும். 

அவரவர் பிறந்த நட்சத்திரத்திற்கென்று, தேவதை, உருவகம், பறவை, மிருகம், விருட்சம் என்று உள்ளது. அந்த வகையில் இந்த நட்சத்திரத்தின் தோற்றம் முத்து போன்றது ஆகும். இதன் அதிபதி செவ்வாய் என்பதால் இவர்களிடம் செவ்வாயின் ஆதிக்கம் அதிக அளவில் இருக்கும். இவர்கள் முன்கோபம் உடையவர்களாகவும் அதிகம் கோபப்படுபவர்களாகவும் இருப்பார்கள். 

இந்த நட்சத்திரம்  ஆண் பாலினத்தை சார்ந்தது.  இதன் நிறம் வெண்மை  ஆகும். இராட்சஸ கணத்தைச் சார்ந்தது.  இதன் பறவை மரங்கு  ஆகும். இதற்கு வணங்க வேண்டிய, வளர்க்க வேண்டிய, பராமரிக்க வேண்டிய  மரம் வில்வ  மரம் ஆகும். இந்த  நட்சத்திரத்தின் வேறு

பெயர்கள் : அளக்கு, நெய், பயறு, மீன், தச்சன், தூசு.

சித்திரை நட்சத்திரம் குணங்கள்:

இவர்கள்  இனிய சொற்களைப் பேசுவார்கள். தேச பக்தி மிக்கவர்கள். இவர்கள் தந்திரமாகவும் நடந்து கொள்வார்கள். நல்ல புலமை மற்றும் அறிவாற்றல் உள்ளவர்கள். எந்த ஒரு காரியத்திலும் முழு மூச்சாக ஈடுபட்டு வெற்றி அடைவார்கள். பெரும்பாலும் தாராள மனம் இருக்காது ஆனால் கனிவாகப் பேசி காரியங்களை சாதிப்பதில் வல்லவர்கள். எப்போதும் எதைப் பற்றியாவது நினைத்து கவலைப் படுவார்கள்.  அதனால் ஆழ்ந்த உறக்கம் இருக்காது. அடக்கியாளும் திறன் பெற்றவர்கள். அடிக்கடி கோபப்படும் சுபாவம் உள்ளவர்கள். இவர்கள் அரசியலில் செல்வாக்கு பெற்றுத் திகழ்வார்கள். 

இவர்கள் செயல்களில் மந்தத்தன்மை இருக்கும். ஆனால் இவர்கள் தங்கள் பலமான எதிரியையும் தனது வீர தீரச் செயல்களால் முறியடிப்பவர்கள். இவர்கள் நல்ல உடல் ஆரோக்கியம் உள்ளவர்கள். தனது வயதை விட இளமையாக தோற்றம் அளிப்பார்கள். 
இவர்கள் கடின நெஞ்சம் உடையவர்கள். இவர்களிடம் இரக்கமின்மை குணம் இருக்கும். அதிகம் செலவழிக்கமாட்டர்க்ள. இவர்கள் செல்வத்தில் நாட்டம் மிக்கவர்கள். சுக போக வாழ்க்கை விரும்புபவர்கள்.  தனது வேலைகளை சிறப்புடனும் திறமையுடனும் செய்வார்கள். வணிகத்தில் பெரும் பொருள் திரட்டுபவர்கள். எளிதில் ஏமாறுவார்கள். முன்னணியில் இருப்பவர்கள். 

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்

உங்கள் நட்சத்திரக் குறியீடும் உங்கள் குணங்களும்:

ஒரு நபரின் வாழ்க்கை ரகசியம் அவர் பிறந்த நட்சத்திரம் மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்து அம்ஸங்களையும் பொறுத்து  அமையும்.சித்திரையின் சமஸ்கிருதப் பெயரான சித்ரா  என்பது"அழகியது" அல்லது "ஒளி பொருந்தியது" என்னும் பொருள் கொண்டது. இதன் அடையாளக் குறியீடு "ஒளி பொருந்திய மணி" அல்லது "முத்து" ஆகும். இவர்கள் நவரத்தினக் கற்களில் ஈடுபாடு உடையவர்கள். சிப்பிக்குள் இருக்கும் முத்தைப் போல இவர்களுக்குள் ஆன்மீக ஞானம் இருக்கும். கலை உணர்வும், கலைப் பொருட்களில் ஆர்வமும் உள்ளவர்கள். 

உங்கள் நட்சத்திர விருட்சமும் உங்கள் குணங்களும்:

சித்திரை  நட்சத்திர விருட்சம் வில்வ மரம் ஆகும் வில்வ மரத்தினைப் போல இவர்கள் வாழ்வில் சிறந்த வளர்ச்சி காண்பார்கள். 

சித்திரை நட்சத்திரத்தின் அடையாளங்கள் :

முத்து, நெற்றி, நாகம், மீன், நவரத்தினங்கள், ஆன்மீக ஞானம்,கழுத்து

தொழில் ஆர்வங்கள்:கெமிக்கல், சிவில் இன்ஜினியரிங், பிரிண்டிங் டெக்னாலஜி, சட்டம் ஒழுங்குத் துறை,  பாதுகாப்புத் துறை, காவல் துறை , ட்ராபிக் போலிஸ், கருவூலத்துறை, நெருப்பு சார்ந்த தொழில்கள், மருத்துவத் துறை, டிடெக்டிவ் ஏஜென்சி, கொரியர் சர்வீஸ், திருமண தகவல் மையம்.

விருப்பமான செயல்கள் :அறிவியல், கலைத்துறை,கை வேலைப்பாடுகள், பிரயாணங்கள், வண்டி, வாகனம் ஓட்டுதல், பேச்சுக் கலை 
நோய் :நுரையீரல் சார்ந்த பிரச்சினை, நரம்பு மண்ட பாதிப்புகள், வயிற்றுப் புண், கர்பப்பை சார்ந்த பிரச்சினை, அறுவை சிகிச்சைகள், கிட்னி, விரை வீக்கம், மர்ம உறுப்புகளில் பிரச்சினை

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் நான்கு பாதங்கள் உண்டு. சித்திரை நட்சத்திரத்தின் முதல் இரண்டு பாதங்கள் கன்னி ராசியிலும் மீதி ரி\\இரண்டு பாதங்கள் துலாம் ராசியிலும் அமைந்துள்ளது. ஒவ்வொரு பாதத்தில் பிறந்தவர்களுக்கும் வெவ்வேறு குணநலன்கள் காணப்படும்.  அதனை இப்பொழுது காண்போம்.

சித்திரை 1 ஆம் பாதம்

தனது காரியங்களில் குறியாக அதாவது காரியவாதியாக இருப்பவர்கள். ஊர் சுற்றும் பழக்கம் உள்ளவர்கள். இவர்களுக்கு கண் சம்பந்தமான வியாதி இருக்கும். இவர்கள் சொன்ன வார்த்தைகளையே திரும்பத் திரும்பச் சொல்லும்  குணம் உடையவர்கள். இவர்கள் சிறந்த கல்வி அறிவு உடையவர்கள். இவர்கள் கடுமையாக உழைப்பவர்கள். துணிந்து செயல்படமாட்டார்கள். தனியாக எந்த முடிவையும் எடுக்க மாட்டார்கள். இவர்கள் பிறரின் வழிகாட்டுதல் இருந்தால் ஜெயிப்பார்கள்.

சித்திரை 2 ஆம் பாதம் :

இவர்கள் வாழ்வில் ஏழ்மையும் வறுமையும் இருக்கும். இவர்கள் உயரமான தோற்றம் உடையவர்களாக இருப்பார்கள்.   வெளியில் சுற்றுபவர்களாக இருப்பார்கள். கல்வியில் ஊக்கம் உடையவர்கள். எதிரிகள், பகைவர்கள் குணம் அறியாது அவர்களுடன் நட்பு கொண்டிருப்பார்கள். தெய்வ பக்தி, நல்லொழுக்கம் உடையவர்கள். இவர்களிடம் தன்னம்பிக்கை குறைவாக இருக்கும்.

சித்திரை 3 ஆம் பாதம்:

இவர்கள் மிகவும் தைரியசாலிகள். படிப்பாளிகள். ஆசை அதிகம் உடையவர்கள். நல்ல குணம் மற்றும் பரந்த நோக்கம் உடையவர்கள். நல்லதையே நினைத்து நல்லதையே செய்பவர்கள். பராக்கிரமசாலிகள். குடும்பத்தை நேசிப்பவர்கள்.

சித்திரை 4ஆம் பாதம்:

இவர்கள் மிகவும் திறமை சாலிகள். பிறரின் குணம் அறிந்து நடப்பவர்கள். வெற்றியாளர்கள். நல்ல பேச்சாளர்கள். எடுத்துக் கொண்ட காரியத்தை உறுதியுடன் முடிபவர்கள். கோபமும் ஆவேசமும் உடையவர்கள் என்றாலும் எதிரிகளிடம் தாழ்ந்து போகுதல் மற்றும் அடிபணிதல் போன்ற குணங்கள் இவர்களிடம் இருக்கும்.

காயத்திரி மந்திரம்

ஓம் மஹா த்வஷ்டாயை வித்மஹே 
ப்ரஜாரூபாயை தீமஹி 
தன்னோ சைத்ரா ப்ரசோதயாத்

இந்த நட்சத்திரத்தில் செய்யும் சுப காரியங்கள்

விவாகம் செய்யலாம், புதுமனை புகு விழா, வித்யா ஆரம்பம், உபநயனம், பதவி ஏற்றல், காது குத்தல், தொழில் செய்தல், ஆபரணம் அணிதல், வியாதி உள்ளவர்கள் மருந்து உண்ணுதல். 

இந்த  நட்சத்திரத்தில் செய்யக் கூடாதவைகள்:

கடன் கொடுக்கவோ வாங்கவோ கூடாது, பிரயாணம் செய்தல் கூடாது. ஆபரேஷன் செய்வது கூடாது

இந்த நட்சத்திரத்தின் எழுத்துக்கள் : 

முதல் பாதம் பே
இரண்டாம் பாதம் போ
மூன்றாம் பாதம் ர
நான்காம் பாதம் ரி

banner

Leave a Reply

Submit Comment