AstroVed Menu
AstroVed
search
search

மகாளய பட்ச காலத்தில் இந்த பொருட்களை தானம் செய்யுங்கள்

dateOctober 12, 2023

முன்னோர்கள் வழிபாட்டினை மேற்கொண்டு அவர்களின் ஆசியை பெறுவதற்குரிய மிக முக்கியமான காலம் மகாளய பட்ச காலம். இந்த சமயத்தில் நமது முன்னோர்கள் நம்முடைய இல்லம் தேடி வருகை தருவதாக ஐதீகம். எனவே இந்த காலத்தில் அவர்களின் மனம் மகிழும் படியான காரியங்களில் நாம் ஈடுபட்டால் அவர்களின் ஆன்மா சாந்தியடையும். இதனால் அவர்கள் முக்தி அடைவார்கள். முன்னோர்களின் மனம் மகிழச் செய்வதால் அவர்களின் பரிபூரண ஆசியும் நமக்கு கிடைக்கும். நமது வாழ்வில் முன்னேற்றத்தில் காணப்படும் தடைகள் யாவும் விலகும்

இந்த 15 நாட்களும் பித்ருலோகத்தில் உள்ள நம்முடைய முன்னோர்களை நினைத்து தானங்கள் வழங்கலாம். அவர்களுக்கு பிடித்தமான உணவுகளை சமைத்து படைக்கலாம். இந்த காலத்தில் வஸ்திர தானம், உணவு தானியம் அளிப்பது மிகவும் சிறப்பானதாகும்.

வஸ்திரம்:

மகாளய பட்சத்தை ஒட்டி முன்னோர்களுக்கு புதிய வஸ்திரங்கள் வாங்க வேண்டும். அந்தப் புது வஸ்திரங்களை முன்னோர்களை எண்ணி பிரார்த்தனை செய்து தானமாகக் கொடுத்தால் முன்னோர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.

பச்சரிசி :

பச்சரிசியையும் மகாளய பட்சத்தின்போது வாங்கலாம். பச்சரியும் சிரார்த்தம் செய்யும்போது பயன்படுத்தப்படும் பொருட்களில் ஒன்றாக உள்ளது. பச்சரிசி வெள்ளிக்கு நிகரான பொருளாகக் கருதப்படுகிறது. மகாளய பட்சத்தில் முன்னோர்களை வேண்டிக்கொண்டு அரிசியை தானம் செய்தால் பணவரவு உண்டாகும்.

கருப்பு எள்:

மகாளய பட்ச நாட்களில்  எள் வாங்கலாம். கருப்பு எள் தான் வாங்க வேண்டும். கருப்பு எள் தர்ப்பணம் செய்யும் போது பயன்படுத்தப்படுகிறது. மகாவிஷ்ணுவுக்கு பிடித்த பொருள் என்ற பெருமையும் கறுப்பு எள்ளுக்கு உண்டு. மகாளய பட்சத்தில் கறுப்பு எள் வாங்கி தானம் செய்து முன்னோர்களின் ஆசியைப் பெறலாம்.

கோதுமை:

கோதுமையும் மகாளய பட்சத்தின்போது வாங்கலாம். பூமியில் உருவானதும் முதன்முதலில் உற்பத்தி செய்யப்பட்ட தானியம் கோதுமை என்று கருதப்படுகிறது. இதனால் கோதுமை தங்கத்துக்கு நிகராக மதிக்கப்படுகிறது. மகாளய பட்ச நாட்களில் கோதுமையை வாங்கியும் தானம் செய்யலாம்.

வெண்ணிற மலர்கள்:

பிச்சி, மல்லி, முல்லை போன்ற வெண்ணிற மலர்களை முன்னோர்களுக்காண சடங்குகளில் பயன்படுத்துவார்கள். இதுபோன்ற வெள்ளைப் பூக்கள் முன்னோருக்கு விருப்பமானவை. மகாளய பட்சத்தின்போது இவற்றை வாங்கி முன்னோரை வழிபடுவதால் அவர்களின் பூரண ஆசீர்வாதம் கிடைக்கும்.

எண்ணெய்:

எண்ணெய் வாங்கி முன்னோர்களை நினைத்து தானம் செய்வதன் மூலமும் அவர்களின் முழு ஆசியையும் பெறலாம்.

வாழைக்காய்

அமாவாசை என்றால் வாழைக்காய் கண்டிப்பாக சேர்க்க வேண்டும்.  வாழைக்காயை வாங்கி அரிசியுடன் சேர்த்து தானம் செய்வதன் மூலம் முன்னோர்களின் ஆசிகள் கிட்டும்.


banner

Leave a Reply