Arupadai Veedu Muruga Program 2024: Invoke Muruga at His 6 Powerful Abodes During the 6th Moon Powertime Days JOIN NOW

பரணி நட்சத்திரம், பரணி நட்சத்திரம் குணங்கள் ,பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்

April 13, 2020 | Total Views : 2,464
Zoom In Zoom Out Print

இந்த பூமியில் வாழ்க்கை என்னும் பாதையில் நாம் அனைவரும் பயணம் செய்தாலும் நமது இலக்கு, திசை, நோக்கம் வெவ்வேறாகத் தான் இருக்கின்றது. இதனை நாம் யாரும் மறுக்க இயலாது.  நமது உடல் இயக்கமும், நமது உள்ளம்,  உணர்வு சார்ந்த  அத்தனை இயக்கங்களும் இறையருளால் தான் நடக்கின்றது. நீங்கள் இறை நம்பிக்கை இல்லாதவர்கள் என்றால்,  அது உங்கள் சக்திக்கும் மீறிய ஒரு இயற்கை சக்தி என்று கூட நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். நமது முன்னோர்கள் வகுத்த பாதையில் நாம் நமது வசதிக்கென்று  காலத்திற்கு தக்கவாறு பல மாற்றங்களை செய்து கொண்டு வாழ்வில் முன்னேற நினைக்கிறோம். எது நம்மை வழி நடத்துகின்றது? எது நமது வாழ்க்கையை  தீர்மானிக்கின்றது?  இந்த பிரபஞ்சத்தில் ஒரு துளியாய் இருக்கும் நமது வாழ்வில் நமது அத்தனை இயக்கங்களும்  கிரகங்கள் மூலமாக,  நட்சத்திரங்கள் மூலமாக வழிநடத்தப்படுகின்றன என்று கூறினால் அது தான் நிதர்சனமான உண்மை. ஒருவருடைய ஜாதகப்படி, பிறக்கும் போது, சந்திரன் எந்த நட்சத்திரத்தின், எந்த பாதத்தில் நிற்கிறாரோ அதுவே அவருடைய ஜென்ம நட்சத்திரம் ஆகும். நமது முன்னோர்கள் ஜோதிட சாஸ்திரத்தில் 27 நட்சத்திரங்களை முக்கியமாகக் கருதினார்கள். அவற்றுள் இரண்டாவதாக  வரும் நட்சத்திரம் பரணி நட்சத்திரம் ஆகும். 

இது வான் மண்டலத்தில் 13 பாகை 20 கலை  முதல் 26  பாகை 40 கலை வரை வியாபித்து உள்ளது. இது மூன்று நட்சத்திரங்களைக் கொண்டது முக்கோண  வடிவம் உடையது. இது அடுப்பு  போல் தோற்றமளிக்கும் நட்சத்திரம் ஆகும். ஒவ்வொரு நட்சத்திரங்களும் நான்கு பாதங்கள் கொண்டது.  இதன் நான்கு பாதங்களும் மேஷ ராசியில் உள்ளது. இதன் அதிபதி சுக்கிர பகவான்.

ஒரு மனிதனின் குண இயல்புகளைத் தீர்மானிக்கும் சக்தி அந்தந்த நட்சத்திரத்திற்கு இருக்கின்றது. அதே சமயம் அந்த நட்சத்திரத்தால் ஏற்படக் கூடிய பாதிப்புகளை தாங்கிக் கொள்ளும் சக்தி பெற அல்லது நிவர்த்தி செய்து கொள்ள இறையருளால் இயலும். 

அவரவர் பிறந்த நட்சத்திரத்திற்கென்று, தேவதை, உருவகம், பறவை, மிருகம், விருட்சம் என்று உள்ளது. அந்த வகையில் பரணி  நட்சத்திரத்தின் அதிபதி சுக்கிர  பகவான். இதன் அதி தேவதை யமன். இவர்கள் வணங்க வேண்டிய தெய்வம் துர்க்கை  தேவி ஆவாள்

இந்த நட்சத்திரம்  பெண்  பாலினத்தை சார்ந்தது.  இதன் நிறம் வெண்மை  ஆகும். மனித கணத்தை சார்ந்தது.  இதன் பறவை காக்கை ஆகும். இதற்கு வணங்க வேண்டிய, வளர்க்க வேண்டிய, பராமரிக்க வேண்டிய  மரம் நெல்லி  மரம் ஆகும். இந்த நட்சத்திரத்தில் தோன்றியவர் துரியோதனன்  ஆவார். உடலில் தொடையைக் குறிக்கக் கூடியது. இந்த நட்சத்திரத்தின் வேறு பெயர்கள் : பகலவன், தாழி, முக்கூட்டு, கிழவன், அடுப்பு.

பரணி நட்சத்திரம் குணங்கள்:

இவர்கள் எப்பொழுதும் கட்டுப்பாடுடன் இருப்பார்கள். தலைமை தாங்கும் பண்பு உடையவர்கள். பெற்றோர்களிடம் மரியாதை கொண்டவர்கள். பரணி தரணி ஆளும்’ என்ற பழமொழிக்கு ஏற்ப பரணி நட்சத்திரக்காரர்கள் அரசாங்கம் மற்றும் இதர பணிகளிலும் அதிகபட்ச அதிகாரங்கள் பெற்ற பதவியில் அமர்வார்கள். சிறந்த ஆளுமை மற்றும் நிர்வாக திறன் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். போராட்டங்களையும் தடைகளையும் தாண்டி  வெற்றி பெறுபவர்கள். சூழ்நிலை மற்றும் மனிதர்களின் தன்மைகளுக்கேற்ப செயல்பட்டு காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பார்கள். மற்றவர்கள் கடுமையான வார்த்தைகளை பிரயோகித்தாலும், நடத்தைகளை வெளிப்படுத்தினாலும் அமைதியிழக்காமல் சூழ்நிலையை கச்சிதமாக கையாள்வார்கள்.அனைவராலும் பாராட்டாப்படுபவர்கள். 

இவர்கள் தங்கள் வாழ்வில் சந்திக்கும் எந்த ஒரு சிக்கலையும் சாமர்த்தியமாக சமாளித்து  அதில் வெற்றியும் பெறுவார்கள். பிறருக்கு ஆறுதல் கூறுவதில் வல்லவர்கள். இவர்களுக்கு வெளியிடங்களில் சுற்றுவது மிகவும் பிடித்தமான விஷயம் ஆகும். இயற்கையை ரசிப்பவர்கள். வாழ்வில் ரசனை உள்ளவர்கள்.  இவர்களிடம் காதல் உணர்வும் காம உணர்வும் அதிகமாக காணப்படும். 

பரணி  நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்

உங்கள் நட்சத்திரக் குறியீடும் உங்கள் குணங்களும்:

ஒரு நபரின் வாழ்க்கை ரகசியம் அவர் பிறந்த நட்சத்திரம் மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்து அம்ஸங்களையும் பொருத்து  அமையும். உதாரணமாக பரணி  நட்சத்திரத்தின் உருவம்  அடுப்பு ஆகும். அடுப்பு அவ்வாறு உணவை பக்குவப்படுத்த துணை புரிகிறதோ அது போல இவர்கள் பிறரின் சோதனை காலத்தில் அவர்களுக்கு சிறந்த ஆறுதல் கூறி அவர்களுக்கு ஒரு பக்குவ நிலையை உணர்த்துவார்கள். மேலும், பரணி அடுப்பு வடிவம் என்பதால், உணவகங்கள் ஆரம்பிப்பவர்கள் சோதனை முறையாகவும், முதன்முதலில் அடுப்பு பற்ற வைப்பதும் பரணி நட்சத்திர நாளில்தான் செய்வார்கள்.பரணி நட்சத்திரத்திற்கான விலங்கு யானை ஆகும். யானையைப் போல பலமமிக்கவர்களாக இவர்கள் இருப்பார்கள். மேலும், பரணி அடுப்பு வடிவம் என்பதால், உணவகங்கள் ஆரம்பிப்பவர்கள் சோதனை முறையாகவும், முதன்முதலில் அடுப்பு பற்ற வைப்பதும் பரணி நட்சத்திர நாளில்தான் செய்வார்கள். 

உங்கள் நட்சத்திர விருட்சமும் உங்கள் குணங்களும்:

உங்கள் நட்சத்திர விருட்சம் நெல்லி  மரம் ஆகும். நெல்லி மரம் பல மருத்துவ குணங்கள் உடையது. பரணி நட்சத்திரக்காரர்கள்  சிறந்த மருத்துவர்களாக இருக்கும் வாய்ப்பு  உண்டு.  இளமையை நிலைக்கச் செய்து ஆயுளை அதிகரிக்கச் செய்யும் நெல்லிக்கனியை மன்னர் அதியமான் ஔவைப் பிராட்டிக்கு கொடுத்தார். நெல்லி மரம் பரணி நட்சத்திரக்காரர்கள் விருட்சம் என்பதால் இவர்கள் இளமையுடன் இருப்பார்கள், ஆரோக்கியத்துடன் இருப்பார்கள். நெல்லி மரம் லட்சுமியின் அம்சம் என்பதால் இவர்கள் செல்வச் செழிப்புடன் இருப்பார்கள்.  

பரணி  நட்சத்திரத்தின் அடையாளங்கள் :

அடுப்பு, யானை, யானையின்  தந்தம், முக்கோணம், வெண்தாமரை, மொச்சை, மாலைப் பொழுது, இயற்கை வளம் மிக்க இடங்கள் போர் புரிதல்

தொழில் ஆர்வங்கள்: மருத்துவம், வணிகவியல், பல் , கண், காது மருத்துவத் துறைகள், வணிக மேலாண்மை, ஃபைனான்ஸ் துறை, கட்டிடத் தொழில், கலை, ஓவியம், இசைத்துறை. சட்டம் சார்ந்த தொழில்கள் முன்னேற்றத்தை தரும். ஒருசிலர் விளம்பரத் துறையில் பிரகாசிப்பார்கள்.

விருப்பமான செயல்கள் : நடனம், இசை, பாட்டு . ஓவியம். வாசனைத் திரவியங்கள், ஆடை ஆபரணங்கள், நல்ல உணவு உண்ணுதல்

நோய் :  வாந்தி, மயக்கம், தலை சுற்றல், மலச்சிக்கல், உடல் பருமன், ஹார்மோன் குறைபாடு, டான்சில்ஸ், பால்வினை நோய்கள், நீரிழிவு நோய்.

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் நான்கு பாதங்கள் உண்டு. பரணி  நட்சத்திரத்தின் நான்கு பாதங்களும் மேஷ ராசியில் அமைகின்றது. ஒவ்வொரு பாதத்தில் பிறந்தவர்களுக்கும் வெவ்வேறு குணநலன்கள் காணப்படும்.  அதனை இப்பொழுது காண்போம்.

பரணி பாதம்-1

சூரியன்  ஆளும் ராசியான சிம்மத்தின் நவாம்சத்தில் பரணியின் முதல் பாதம் அமைகின்றது. பரணி நட்சத்திரம் முதல்  பாதத்தில் பிறந்தவர்கள்  படைப்பாற்றல் மிக்கவர்கள், நகைச்சுவையாளர்கள். இவர்கள் தன்னுடைய மற்றும் பிறருடைய கருத்துக்களை தொடர்ந்து பின்பற்றுபவர்கள். சற்று பருமனான உடல் வாகு கொண்டவர்கள். நற்குணங்கள் மிக்கவர்கள். நல்ல செயல்களைச் செய்பவர்கள். எதிரிகளை எளிதில் வெற்றி கொள்பவர்கள். நன்றி உணர்வு மிக்கவர்கள். இவர்களிடம் காம உணர்வு அதிகமாக இருக்கும். அகங்கார குணமும் ஓங்கி இருக்கும். 

பரணி பாதம் 2

புதன் ஆளும் ராசியான கன்னியின் நவாம்சத்தில் பரணியின் இரண்டாம் பாதம் அமைகின்றது. இவர்கள் தங்கள் கருத்தில் ஆழ்ந்த விசுவாசம் கொண்டு தனது நம்பிக்கைக்காக போராடும் தைரியமுள்ளவர்களாக இருக்கிறார்கள். அதன் காரணமாக இவர்கள் பிறர் கருத்து கூறினால் தாம் கட்டுப்படுத்தப்படுவதாக உணர்கிறார்கள். அது கசப்பான மோதலில் முடிகின்றது. இவர்கள் மிகுந்த திறமை மிக்கவர்கள். மற்றவர்களை நன்கு புரிந்து கொள்வார்கள். பழகுவதற்கு இனிமையானவர்கள். தான தருமங்களை செய்யும் இயல்பு உடையவர்கள். இவர்கள் எதிரிகளை எளிதில் வெற்றி கொள்வார்கள். நல்ல குணம் படைத்தவர்கள். மற்றவர்கள் மூலம் பெரும் புகழும் அடைவார்கள். 

பரணி பாதம் 3

பரணி நட்சத்திரத்தின் மூன்றாம் பாதம் துலாம் நவாம்சத்தில் அமைகின்றது. இவர்கள் வாழ்வில் பல கஷ்டங்களை சந்திப்பார்கள். இந்த நட்சத்திரமானது வாழ்வை புதுப்பிக்க தொடர்ந்து புதிய வாய்ப்புகளை உருவாக்கித் தருகின்றது. அந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்வதும் அல்லதாதும் அவரவர் கையில் உள்ளது. இவர்கள் அதிர்ஷ்ட தேவதைகளின் அருளினால் எந்தக் காரியங்களிலும்  வெற்றியைப் பெறுவார்கள். வாழ்வில் சந்தோசம் மற்றும் சௌகரியங்கள் மிக்கவர்கள். ஆரோக்கியமான தேகம் உடையவர்கள். பெரிய கண்கள் உடையவர்கள். இவர்கள் சிவந்த நிறத்துடன் இருப்பார்கள்.

பரணி பாதம் 4

பரணி நட்சத்திரத்தின் நான்காம் பாதம் செவ்வாய் ஆளும் விருச்சிகம்  நவாம்சத்தில் அமைகின்றது. அழகான பற்களுடனும் காணப்படுவார்கள். இவர்கள் வாழ்வில் அழகான பொருட்களை விரும்புவார்கள். இவர்கள் கலைகளில் வல்லவர்களாக இருப்பார்கள்.  இவர்களுக்கு ஒவியம் மற்றும் புகைப்படம் போன்ற கலைத் துறைகளில் நாட்டம் காணப்படும்.இவர்கள் சற்று பருமனாக இருப்பார்கள். சில தீய குணங்களை கொண்டிருப்பார்கள். பிடிவாதம் மிக்கவர்களாக இருப்பார்கள். சாதாரண வேலை செய்பவர்களாக இருப்பார்கள், தன்னுடைய காரியங்களை சாதித்துக் கொள்வதில் வல்லவர்கள். . 

காயத்திரி மந்திரம்

ஓம் க்ருஷ்ணவர்னாயை வித்மஹே 
தண்டதராயை தீமஹி 
தன்னோ பரணி ப்ரசோதயாத்

இந்த நட்சத்திரத்தில் செய்யும் சுப காரியங்கள்

ஆயுத பிரயோகம், வியாதிஸ்தர்கள் குளிக்கலாம். கதிர் அறுக்கலாம். மாடு கன்று வாங்கலாம், அடுப்பு வைக்கலாம், தானியம் களஞ்சியத்தில் வைக்கலாம். 

இந்த  நட்சத்திரத்தில் செய்யக் கூடாதவைகள்:

சுப காரியங்கள் இந்த நடசத்திரத்தில் செய்யக் கூடாது.

இந்த நட்சத்திரத்தின் எழுத்துக்கள் : 

முதல் பாதம் அ
இரண்டாம் பாதம் இ
மூன்றாம் பாதம் உ
நான்காம் பாதம் எ

banner

Leave a Reply

Submit Comment