விருச்சிகம் ஆகஸ்ட் 2023 பொதுப்பலன்கள்:
விருச்சிக ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் தொழில் மற்றும் பயணங்களால் ஆதாயம் அடைவார்கள். ரியல் எஸ்டேட் விஷயங்களில் லாபம் கூடும். உடன்பிறந்தவர்களும் உங்களுக்கு சாதகமாக இருக்கலாம். வீட்டில் சில அசௌகரியங்கள் இருக்கலாம். குழந்தைகளுடன் தவறான புரிதல்கள் மற்றும் வாக்குவாதங்கள் இருக்கலாம். இந்த மாதம் நீங்கள் எதிரிகளை சிறப்பாக கையாளலாம்.
காதல் / குடும்ப உறவு :
உறவு விவகாரங்களில் எதிர்பாராத திருப்பங்கள் இருக்கலாம். இது உங்களுக்கு கவலை அளிக்கலாம். காதலர்கள் இந்த மாதம் பிரிவினையை காண்பார்கள். தம்பதியினரிடையே போதுமான அக்கறை மற்றும் பிணைப்பு இல்லாத நேரமாக இருக்கும். வாழ்க்கைத்துணை சிக்கலில் சிக்கலாம். இம்மாதத்தில் குடும்ப விஷயங்களில் தம்பதியினருக்கு இடையே தவறான புரிதல் ஏற்படுவதற்கு தந்தை அல்லது துணைவியின் உடன்பிறந்தவர்கள் காரணமாக இருக்கலாம்.
திருமண உறவில் நல்லிணக்கம் காண : சுக்கிரன் பூஜை
நிதிநிலை:
இந்த மாதம் உங்களின் நிதி விஷயங்கள் நன்றாக இருக்கும். கடன்களை சிறிது சீக்கிரம் அடைக்க முடியும். வாழ்க்கைத் துணை மூலம் நிதி அதிர்ஷ்டம் கூடும்., தந்தையின் உடல்நிலைக்காக செலவுகள் ஏற்படலாம். வீட்டு உபயோகப் பொருள் வாங்குவதற்கான செலவுகள் மேற்கொள்வீர்கள். /தொழில் மூலம் ஆதாயம் பெறலாம்.
உங்கள் நிதிநிலை மேம்பட : பிருகஸ்பதி பூஜை
உத்தியோகம்:
உங்களின் உத்தியோகத்தில் சக பணியாளர்கள் மற்றும் எதிரிகளால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு மத்தியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணியிடத்தில் அதிகாரம் கூடும். வேலை சம்பந்தமான பயணங்கள் ஏற்படலாம். தொழிலில் இந்த மாதத்தில் பண பலன்களும் எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும்,பெண் ஊழியர்களிடமும், பணியிடத்தில் ஆவணம் தொடர்பான விஷயங்களிலும் கவனமாக இருக்க வேண்டும்.
தொழில்:
நீங்கள் மேற்கொள்ளும் வியாபாரம் கடந்த கால அலைச்சலுக்கு நல்ல பலனைத் தரும். முதலீட்டு விஷயங்கள் கண்காணிக்கப்பட வேண்டும். வியாபாரத்தில் நல்ல வருமானமும் பண வரவும் கூடும். இருப்பினும், வியாபாரத்தில் பங்குதாரர்கள் கடமைகளில் இருந்து விலகலாம் மற்றும் அது வியாபாரத்தின் பின்னடைவுகளுக்கு காரணமாக இருக்கலாம். இந்த மாதத்தில் நீங்கள் சாதுரியமாக செயல்படுவீர்கள். வியாபாரத்தில் உங்களின் தலைமைத்துவ திறன்கள் வெளிப்படுத்தப்படும்.
தொழில் வல்லுனர்கள்:
இந்த மாதம் நீங்கள் தொழிலில் சிறப்பான காலகட்டத்தைக் கொண்டிருப்பீர்கள் தொழிலில் எதிரிகளை வெல்வீர்கள். இந்த மாதத்தில் பண வரவு நன்றாக இருக்கும். இருப்பினும், தொழிலில் பங்குதாரர்கள் மூலம் மற்றும் பங்குதாரர்களைக் கையாளும் போது ஏமாற்றங்களைக் காணலாம். இந்த காலகட்டத்தில் வழிகாட்டிகளிடமிருந்து வழிகாட்டுதலைப் பெறுவதில் வெற்றிடம் இருக்கலாம்.
தொழிலில் மேன்மை பெற : சூரியன் பூஜை
ஆரோக்கியம்:
விருச்சிக ராசிக்காரர்களின் ஆரோக்கியம் இந்த மாதத்தில் சில சிறிய அசௌகரியங்களைத் தவிர, சீராகவும் சிறப்பாகவும் இருக்கும். பெற்றோர் மற்றும் மனைவியின் ஆரோக்கியத்திற்காக செலவழிக்க வாய்ப்புகள் உள்ளன. இந்த காலகட்டத்தில் சிறந்த மன அமைதியையும் ஆரோக்கியத்தையும் பராமரிக்க உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும்.
உங்கள் ஆரோக்கியம் மேம்பட : சூரியன் பூஜை
மாணவர்கள்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு ராசி அதிபதி நன்றாக அமைந்திருப்பதால் கல்வி விஷயங்களில் நல்ல நேரம் இருக்கும். இந்த காலகட்டத்தில் உடல் உபாதைகள் இருந்தாலும் போட்டித் தேர்வுகளில் சிறப்பாக செயல்படலாம். மாணவர்கள் புதிய முயற்சிகளில் வெற்றி காண்பர். விளையாட்டு மற்றும் யோகாவில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வது இந்த காலகட்டத்தில் சிறந்த செயல்திறனுக்கான வாய்ப்பைக் கொடுக்கும்.
கல்வியில் சிறந்து விளங்க : சனி பூஜை
சுப தேதிகள் : 1, 2, 3, 4, 7, 8, 9, 10, 16, 17, 18, 19, 20, 29, 30 & 31.
அசுப தேதிகள் : 11, 12, 13, 21, 22, 23, 24, 25 & 26.

Leave a Reply