AstroVed Menu
AstroVed
search
search

துலாம் ஆகஸ்ட் மாத ராசி பலன் 2023 | August Matha Thulam Rasi Palan 2023

dateJuly 21, 2023

துலாம் ஆகஸ்ட் 2023 பொதுப்பலன்கள்:

துலாம் ராசிஅன்பர்களே! நீங்கள் இந்த மாதம் தொழில் மற்றும் லாபங்களை குவிப்பதில் கவனம் செலுத்தலாம். உத்தியோகத்தில் உள்ள வாய்ப்புகளை மறுபரிசீலனை செய்யத் தூண்டும் எதிர்பாராத நிகழ்வுகள் இருக்கும். உங்களின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் முன்னேற்றம்  இருக்கலாம். உங்களை வெளிப்படுத்தும் விதத்தில் மாற்றம் இருக்கலாம். இந்த மாதத்தில் வாழ்க்கையின் நிதி அம்சத்தில் அதிர்ஷ்டம் இருக்கலாம்.

காதல்/ குடும்ப உறவு

இந்த காலகட்டத்தில் உறவு மற்றும் திருமண வாழ்க்கையில் சாதகமற்ற முடிவுகள் இருக்கும்.  வாழ்க்கைத்துணை, உங்களை  விட்டு தூர இடத்தில் தங்க வேண்டியிருக்கும். துலாம் ராசிக்காரர்களில் சிலருக்கு திருமண வாழ்வில்/உறவில் பிரிந்து செல்லும் வாய்ப்புகள் உள்ளன. காதல் மற்றும் உறவில் கர்ம நிகழ்வுகள் தூண்டப்படக்கூடிய காலகட்டம் என்பதால் உறவு விஷயங்களில் ஒதுங்கி இருக்க நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும். இந்த  மாதத்தில் வாழ்க்கைத் துணை / பங்குதாரர் மீதான செலவுகள் இருக்கலாம்.

திருமண உறவில் நல்லிணக்கம் காண : அங்காரகன் பூஜை

நிதிநிலை:

இந்த காலகட்டத்தில் துலாம் ராசிக்காரர்களின் பொருளாதார நிலை நன்றாக இருக்கும். இந்த மாதத்தில் பண வரவு நன்றாக இருக்கும். பணியிடத்தில் எதிர்பாராத பணப்பலன்கள் கிடைக்கலாம். இந்த காலகட்டத்தில் முதலீடு மற்றும் வர்த்தகம் போன்ற விஷயங்களில் அதிர்ஷ்டம் கூடும். இருப்பினும், மனைவி / பங்குதாரருக்கு மருத்துவமனை சார்ந்த செலவுகள் இருக்கலாம், இதனால்  பணத்தை சேமிப்பதில் சிரமம் இருக்கலாம்.

உங்கள் நிதிநிலை மேம்பட : அங்காரகன் பூஜை

உத்தியோகம் :

உத்தியோக வாழ்க்கையில் மாற்றம் ஏற்படலாம். பணியிடத்தில் உள்ள பிரச்சனைகளில் இருந்து வெளிவர, உத்தியோகத்தில் வழக்கத்திற்கு மாறான முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம். இக்காலகட்டத்தில் பெண் ஊழியர்களால் உத்தியோகத்தில் சிரமமான சூழ்நிலைகள் ஏற்படலாம். உத்தியோகத்தில்  மேலதிகாரிகளின் அங்கீகாரமும் ஆதரவும் கிடைக்கும். இருப்பினும், பணியிடத்தில் பங்குதாரர்களைக் கையாள்வதில் கவனமாக இருக்க வேண்டும்.

தொழில்:

துலாம் ராசி அன்பர்கள் இந்த மாதம் வியாபார கூட்டாளர் மற்றும் விநியோக சேனல்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும், கருத்து வேறுபாடுகள் மற்றும் ஒப்பந்தங்களை புதுப்பித்தல் போன்ற அசாதாரண அறிகுறிகள் இருக்கலாம். வியாபாரச் சூழலில் புதிய இயல்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த மாதத்தில் லாபம் மற்றும் வருமானம் நன்றாக இருக்கும். தொழிலில் முக்கிய செயல்பாடுகளில் பின்னடைவுகள் இருந்தாலும் உங்கள் தொழில் சிறப்பாக நடக்கும்.

தொழில் வல்லுனர்கள் :

துலாம் ராசிக்காரர்களுக்கு, தொழிலில் தவறான புரிதல்களும், கருத்து வேறுபாடுகளும் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால், சுமாரான காலம் இருக்கும். பெண் கூட்டாளிகளால் தொழிலில் சங்கடங்கள் மற்றும் அவப்பெயர் ஏற்படலாம். சொந்த தொழிலில் சுதந்திரமாக செயல்பட வேண்டும்.  இருப்பினும் இந்த காலகட்டத்தில் வருமானம் நன்றாகவே இருக்கும்.

தொழிலில் மேன்மை பெற : சுக்கிரன் பூஜை

ஆரோக்கியம்

இந்த மாதத்தில் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் பின்னடைவுகள் ஏற்படலாம். மன அமைதியை குலைக்கும் வகையில்  பயம் மற்றும் பதட்டம் இருக்கலாம். இந்த மாதத்தில் தூக்கமின்மை ஏற்படலாம்.  வாழ்க்கைத் துணைக்கும் ஆரோக்கியத்தில் பின்னடைவை ஏற்படுத்தலாம்.

உங்கள் ஆரோக்கியம் மேம்பட : முருகன் பூஜை

மாணவர்கள் :

மாணவர்கள் கல்வியில் ஒட்டுமொத்த கலவையான முடிவுகளைப் பெறுவார்கள். இந்த காலகட்டத்தில் ஒருபுறம் மந்தமான தன்மையும், மறுபுறம் பாடங்களில் உள்ள நுணுக்கங்களைப் புரிந்துகொள்வதும் இருக்கலாம். துலாம் ராசியை சேர்ந்த மாணவர்களுக்கு இந்த மாதத்தில் கவனக்குறைவு ஏற்படலாம். உயர்கல்வி தொடர்பான விஷயங்களில் நீண்ட தூர பயணம் இருக்கலாம்

கல்வியில் சிறந்து விளங்க : புதன் பூஜை

சுப தேதிகள் : 1, 2, 5, 6, 7, 8, 14, 15, 16, 17, 18, 27, 28 & 29.

அசுப தேதிகள் : 9, 10, 11, 19, 20, 21, 22 & 23.


banner

Leave a Reply