AstroVed Menu
AstroVed
search
search
x

August Matha Mesham Rasi Palan 2023

dateJuly 20, 2023

மேஷம் ஆகஸ்ட்  2023 பொதுப்பலன்கள்:

மேஷ ராசி அன்பர்களே! நீங்கள் இந்த மாதத்தில் அறிவையும் ஞானத்தையும் விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்தலாம். இந்த மாதத்தில் உங்கள் பிள்ளைகளுடன் தவறான புரிதல்கள் இருக்கலாம். வாகனங்கள் மற்றும் வீட்டில் எதிர்பாராத பழுதுகள் காரணமாக செலவுகள் ஏற்படலாம். இந்த மாதத்தில் உங்கள் அறிவு மேம்படும். எதிரிகள் மீது வெற்றியும், உடல்நலக் குறைபாடுகளில் இருந்து மீள்வதும் இந்த மாதம் எதிர்பார்க்கலாம்.  

காதல் / குடும்ப உறவு

இந்த மாதம் உங்களுக்கு உறவு நிலைகள்  மிதமாக இருக்கும். உறவு விஷயங்களில் உங்கள்  முடிவு குறித்து ஏமாற்றங்களையும் வருத்தங்களையும் சந்திக்க நேரிடும். இந்த மாதத்தில் உறவில் சுகபோக விஷயங்களில் இணக்கம் இருக்க முடியாது. நீங்கள் குடும்பப் பொறுப்பை ஏற்க வேண்டியிருக்கும். இந்த காலகட்டத்தில் வீட்டில் சுபகாரியங்கள் இருக்கலாம்.

திருமண உறவில் நல்லிணக்கம் காண : சுக்கிரன் பூஜை

நிதிநிலை:

இம்மாதத்தில் உங்களின் நிதி நிலைமை குறித்த பலன்கள் கலவையாக இருக்கும். நிதி நெருக்கடிகள் இருந்தாலும் கடன்கள் குறையும். நீங்கள் எதிர்பாராத திடீர் வருமானத்தைப் பெறலாம். முதலீடு மற்றும் வர்த்தகம் நல்ல பலனைத் தரும். இந்த மாதத்தில் எதிர்பாராத செலவுகள் கூடும். பூர்வீக சொத்துக்களை நீங்கள் இந்த காலகட்டத்தில் பெறலாம்.

உங்கள் நிதிநிலை மேம்பட : பிருகஸ்பதி பூஜை

உத்தியோகம்:

உங்களின் உத்தியோக வாழ்க்கை அனுகூலமான காலகட்டத்தைக் காணக்கூடும், குறிப்பாக இந்த காலகட்டத்தில் சக ஊழியர்களால் அனுகூலம் இருக்கும். பணியிடத்தில் அங்கீகாரம் பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இந்த மாதத்தில் உங்களின் புத்திசாலித்தனமான செயல்பாட்டிற்காக மாதத்தின் மத்தியில் அங்கீகாரம் மற்றும் வெகுமதிகள் பெறலாம். இந்த காலகட்டத்தில் வருமானம் நன்றாக இருக்கும்.

தொழில் :

உங்களால் மேற்கொள்ளப்படும் வியாபாரம், இந்த மாதத்தில்  அளவு மற்றும் வருமானத்தின் அடிப்படையில் சிறந்த காலகட்டத்தைக் காணலாம். வியாபாரத்தில் அதிகாரம் பெறலாம். வருமான வரவும் நன்றாக இருக்கும். கடன்களை குறைப்பதற்கான முயற்சிகள் இந்த மாதத்தில் நல்ல  பலனைத் தரும். இந்த மாதத்தில் முதலீடுகளில் சில மாற்றங்களைக் கொண்டு வருவீர்கள்.

தொழில் வல்லுனர்கள்:

நீங்கள் சிறந்த உத்திகளை வகுத்து, அதைத் தொழிலில் வெற்றிகரமாகச் செயல்படுத்துவதுவதற்கு இந்த மாதம் சிறந்த காலகட்டமாக இருப்பதைக் காண்பீர்கள். இந்த மாதத்தில் தொழிலில் உங்கள் எதிரிகள் அழிவதையும் நீங்கள் காணலாம். பண வரவும் அதிகரிக்கலாம். தலைமைத்துவ திறன்கள் இருக்கலாம், மேலும் இந்த மாதத்தில் உங்கள் அணியை சிறப்புடன் நடத்திச் செல்வீர்கள்.

தொழிலில் சிறந்து விளங்க : சுக்கிரன் பூஜை

ஆரோக்கியம் :

உங்கள் ஆரோக்கியம் சுமாராக இருக்கும். இந்த மாதத்தில் உங்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் நிலையான முன்னேற்றம் இருக்கும். இருப்பினும், உங்களின்  வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் சிறிது சிரமங்கள் ஏற்படலாம். இந்த காலகட்டத்தில் மன அழுத்தம் காரணமாக உணர்ச்சிவசப்பட  வாய்ப்புகள் உள்ளன.

உங்கள் ஆரோக்கியம் சிறந்து விளங்க : அங்காரகன் பூஜை

மாணவர்கள்:

மாணவர்கள் இந்த மாதம் போட்டித் தேர்வுகளில் சிறந்த முறையில்  வெற்றி பெறுவார்கள். மாணவர்கள் கல்வியில் நம்பிக்கையையும் புத்திசாலித்தனத்தையும் வெளிப்படுத்துவார்கள்.  பாடங்களில் புதுமையான  சிந்தனையை வெளிப்படுத்தலாம். மற்றும் வெளிநாட்டில் உயர்கல்வியில் சாதிக்கலாம்.

கல்வியில் சிறந்து விளங்க : கணபதி பூஜை

சுப தேதிகள் : 1, 2, 3, 4, 12, 13, 14, 15, 19, 20, 21, 22, 23, 29, 30 & 31.

அசுப தேதிகள் : 5, 6, 7, 8, 24, 25 & 26.


banner

Leave a Reply