Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW
Search

அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம் | Ashtalakshmi Stotram In Tamil

June 25, 2021 | Total Views : 3,530
Zoom In Zoom Out Print

அஷ்ட” என்னும் சம்ஸ்கிருத சொல்லுக்கு எட்டு என்று பொருள். செல்வத்தின் கடவுளாம் லக்ஷ்மி தேவி எட்டு வடிவங்களில் காட்சி தருகிறாள். லக்ஷ்மி என்றாலே செல்வம் என்று பொருள். எனவே தான் அவளது திருநாமம் “திருமகள்” என்றும் உள்ளது. செல்வம் என்றால் பணம் மட்டுமல்ல. நமது வளமான வாழ்விற்கு பணம் மட்டுமின்றி தைரியம், ஞானம், குழந்தைப்பேறு அதிர்ஷ்டம், ஆரோக்கியம் மற்றும் குடும்பம் போன்ற பல விஷயங்களையும் குறிக்கிறது.

லக்ஷ்மி தேவி எட்டு வடிவங்களில் எண்வகை அருளாசிகளை வழங்குகிறார். அவளைப் போற்றிப் பாடும் பாடல்கள் பல உள்ளன. லட்சுமி தேவியின் எட்டு வடிவங்களை புகழ்ந்து வணங்குவதற்கும், அவளின் கடைக் கண் பார்வையின் கடாட்சத்தைப் பெறுவதற்கும் ஒவ்வொரு வடிவையும் புகழ்ந்து  போற்றிப் பாடும் பாடலே அஷ்டலக்ஷ்மி ஸ்தோத்திரம். லக்ஷ்மி தேவியின் புகழைப் போற்றிப் பாடும் பல பாடல்களுள் இந்தப் பாடலும் சிறந்த ஒன்றாகும்’

AstroVed-இல் நடத்துகின்ற லக்ஷ்மி ஹோமத்தில் (​Lakshmi Homam in Tamil) பங்கு கொள்ளுங்கள்.

அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம் என்பது லட்சுமி தேவியின்  எட்டு வடிவங்களுக்கும் அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பக்தி ஸ்தோத்திரமாகும். இந்த ஸ்தோத்திரத்தின் எட்டு சரணங்கள் லட்சுமி தேவியின் எட்டு தெய்வீக வடிவங்களை விவரித்து புகழ்கின்றன.

இந்தப் பாடல் வரிகள் முடிவில் அன்னையின் நாமம் வைத்துப் பாடல் இயற்றப்பட்டுள்ளது. இதனால் இந்த ஸ்தோத்திரம் எளிதில் நம்மால் நினைவில் கொண்டு பாட இயலும். 

அஷ்டலட்சுமி ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்வதால் ஏற்படும் பலன் :

அஷ்டலட்சுமி ஸ்தோத்திரத்தை பாடிப் பாராயணம் செய்வதால், அவளின் அருளாசிகளால் சிறந்த வாழ்விற்கு தேவையான  நல்ல பண்புகள், தைரியம், கல்வி, அதிர்ஷ்டம், செல்வம், குழந்தைகள் மற்றும் வெற்றியை அடையலாம் என்பது ஐதீகம்;

அஷ்ட லக்ஷ்மிகள் :

ஆதி லக்ஷ்மி, சந்தான லக்ஷ்மி, கஜ லக்ஷ்மி,  தன லக்ஷ்மி, தான்ய லக்ஷ்மி, விஜய லக்ஷ்மி, வீர லக்ஷ்மி, தைரிய லக்ஷ்மி 

1.ஆதி லக்ஷ்மி:

அனைத்து விதமான செல்வத்திற்கும் அதிபதியாக விளங்குபவள். ஆதி என்றால் ஆரம்பம் அல்லது மூலம் என்று பொருள். அனைத்து செல்வங்களுக்கும் மூல காரணியாக ஆதி லக்ஷ்மி விளங்குகிறாள். வேதங்கள் போற்றும் அன்னையாக இவள் விளங்குகிறாள். தாமரை மலரில் வசிக்கும் அன்னை, தேவர்களால் போற்றி வணங்கப்படும் அன்னை, தன்னை வணங்கும் பக்தர்களுக்கு நல்ல குணங்களை அளிக்கிறாள். முக்தியை வழங்குகிறாள். 

ஆதிலக்ஷ்மிக்கு உரிய மந்திரம் :

யா தேவி ஸர்வ பூதேஷூ லக்ஷ்மீரூபேண ஸம்ஸ்த்திதா நமஸ்தஸ்யை 
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம 

2.சந்தான லக்ஷ்மி :

உலக மக்களுக்கெல்லாம் தாயாக விளங்கி அனைவரையும் காக்கும் தாயாக விளங்குபவள். பறவையை வாகனமாகக் கொண்டவள்.  கரங்களில் சக்கரத்தைத் தரித்தவள். சப்த ஸ்வரங்களாலும் போற்றிப் பாடப்படுபவள். சூரர்கள், அசுரர்கள் தேவர்கள், முனிவர்கள் என அனைவராலும் வணங்கப்படும் அன்னை இவள். அறிவின் உருவாகத் திகழும் இவள் தன்னை வணங்கும் பக்தர்களுக்கு நன்மையை அருளுபவள்.  

சந்தான லக்ஷ்மிக்கு உரிய மந்திரம் :

யா தேவி ஸர்வ பூதேஷூ மாத்ரூ ரூபேண ஸம்ஸ்த்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம 

3.கஜ லக்ஷ்மி :

உலகமக்களுக்கு நிம்மதியையும், சுகமான வாழ்க்கையையும் வழங்குபவள். ரதங்கள், யானைகள், குதிரைப்படை மற்றும் காலாட்படை கொண்டவள்.  ஹரி , ஹரன், பிரம்மா என அனைவராலும் வணங்கி சேவை செய்யப்படுபவள். உலகெங்கிலும் உள்ள மக்களால் வணங்கப்படுபவர். நிறைவேறாத விருப்பங்களையும் நிறைவேற்றுபவள். தீய கர்ம வினைகளை அறுப்பவள். 

கஜ லக்ஷ்மிக்கு உரிய மந்திரம் :

யா தேவி ஸர்வ பூதேஷூ முஷ்டி ரூபேண ஸம்ஸ்த்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம 

4.தன லக்ஷ்மி :

செல்வத்தின் அதிபதியாக விளங்குபவள். துந்துபி போன்ற இசைக் கருவிகளின் ஒலிகளில் பூரணமாய் இருப்பவள். ஒலிகளால் வணங்கப்படுபவள்.  நீதியின் பாதையைக் காட்டும் வேதங்கள், புராணங்கள் மற்றும் இதிஹாசங்கள் இவளைப் போற்றிப் பாடுகின்றன.

தன லக்ஷ்மிக்கு உரிய மந்திரம்:

யா தேவி ஸர்வ பூதேஷூ புஷ்டி ரூபேண ஸம்ஸ்த்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம – 

5.தான்ய லக்ஷ்மி :

உலக ஜீவராசிகள் அனைத்திற்கு உன்ன உணவை வழங்கி தானியத்திற்கு அதிபதியாக விளங்குபவள்
புனிதத் தன்மையுடன் தாமரை மலரில்  வீற்றிருப்பவள். கலியுகத்தின் தோஷங்களை அழிப்பவள். வேதங்களை ஆளுபவள். பாற்கடலில் தோன்றியவள். திருப்பாதம் பணிபவர்களுக்கு அடைக்கலம் தருபவள். மங்களங்களை அருளுபவள்.

தான்ய லக்ஷ்மிக்கு உரிய மந்திரம்:

யா தேவி ஸர்வ பூதேஷூ க்ஷுதா ரூபேண ஸம்ஸ்த்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம 

6.விஜயலக்ஷ்மி :

கருணை வடிவமாக இருந்து அனைவரையும் காப்பவள். தாமரை மலரில் வீற்றிருப்பவள். பக்தர்களுக்கு நற்கதியை அருளுபவள். விலைமதிப்பற்ற ரத்தினங்களை உடையவள். துக்கங்களை நீக்குபவள். லக்ஷ்மி மற்றும் சரஸ்வதி தேவியால் போற்றப்படுபவள். நவநிதிகளையும் வாரி வழங்குபவள்

விஜயலக்ஷ்மிக்கு உரிய மந்திரம்:

யா தேவி ஸர்வ பூதேஷூ தயா ரூபேண ஸம்ஸ்த்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம 

7. தைரிய லக்ஷ்மி :

வீரத்திற்கும் வெற்றிக்கும் அதிபதியாக விளங்குபவள். மந்திரங்களின் வடிவமாய்த் திகழ்பவள். சூரர்களால் போற்றப்படுபவள்.  சாஸ்திரங்களால் புகழப்படுபவள். ஆழ்ந்த அறிவை வழங்குபவள்  அச்சங்களை நீக்குபவள்.

தைரிய லக்ஷ்மிக்கு உரிய மந்திரம்:

யா தேவி ஸர்வ பூதேஷூ த்ரூதிரு ரூபேண ஸம்ஸ்த்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம 

8. வித்யா லக்ஷ்மி :

கலைக்கும் கல்விக்கும் அதிபதியாக விளங்குபவள்

தாமரை மலர் மீது அமர்ந்திருப்பவள். இசையின் வடிவில் இருப்பவள். இசைகருவிகளின்  இன்னிசையில் மகிழ்பவள். மந்திரங்கள் ஓதி வழிபடும் பகதர்களுக்கு வெற்றியை அருளுபவள். 

வித்யா லட்சுமி:

யா தேவி ஸர்வ பூதேஷூ புத்தி ரூபேண ஸம்ஸ்த்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம 

எப்பொழுது பாராயணம் செய்வது?

அஷ்ட லக்ஷ்மி தோத்திரப் பாடலை ஒருவர் எப்பொழுது வேண்டுமானாலும் பாராயணம் செய்யலாம். தோத்திரத்தை எப்போது பாராயணம் செய்வது என்பது குறித்து சிறப்பு நிபந்தனைகள் எதுவும் இல்லை. தினமும் காலை மற்றும் மாலை வேளையில் அஷ்டலட்சுமி ஸ்தோத்திரத்தை உச்சரிப்பது புனிதமானது என்று நம்பப்படுகிறது. குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் பாடுவது சிறப்பு என்றும் கருதப்படுகிறது

லட்சுமி தேவி - அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம்

அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம்

1. ஆதி லட்சுமி தேவிக்கு பாடல் ஸ்தோத்திரம்

ஸூமநஸ வந்தித ஸூந்தரி மாதவி
சந்த்ர சகோதரி ஹேமமயே
முநிகண மண்டித மோக்ஷ ப்ரதாயினி
மஞ்சுள பாக்ஷிணி வேதநுதே
பங்கஜ வாஸினி தேவஸூ பூஜித
ஸத்குண வர்ஷினி சாந்தியுதே
ஜெய ஜெய ஹே மதுஸூதன காமினி
ஆதிலெக்ஷ்மி ஸதா பாலயமாம்

2. சந்தான லட்சுமி தேவிக்கு பாடல் ஸ்தோத்திரம்

அயிதக வாஹினி மோஹினி சக்ரிணி
ராக விவர்த்தினி ஞானமயே
குணகண வாரிதி லோக ஹிதைஷினி
ஸ்வர ஸப்த பூஷித கானறுதே
சகல ஸூராஸூர தேவ முநீஸ்வர
மாநவ வந்தித பாத யுதே
ஜெய ஜெய ஹே மது ஸூதன காமினி
சந்தான லக்ஷ்மி பாலயமாம்

3. கஜ லட்சுமி தேவிக்கு பாடல் ஸ்தோத்திரம்

ஜய ஜய துர்கதி நாசினி காமினி
சர்வ பலப்ரத சாஸ்த்ரமயே
ரதகஜ துரசு பதாதி சமாவ்ருத
பரிஜன மண்டித லோகநுதே
ஹரிஹர ப்ரம்ம ஸூ பூஜித சேவித
தாப நிவாரிணி பாதயுதே
ஜெய ஜெய ஹே மதுஸூதன காமினி
கஜலக்ஷ்மி ரூபணே பாலயமாம்

4. தன லட்சுமி தேவிக்கு பாடல் ஸ்தோத்திரம்
 
திமிதிமி திந்திமி திந்திமி திந்திமி
துந்துபி நாத ஸூ பூர்ண மயே
கும கும குங்கும குங்கும குங்கும
சங்க நிநாத ஸூவாத் ய நுதே
வேத புராணே திஹாச ஸூ பூஜித
வைதிக மார்க ப்ரதச்ச யுதே
ஜெய ஜெய ஹே மதுஸூதன காமினி
தனலக்ஷ்மி ரூபணே பாலயமாம்

5. தான்ய லட்சுமி தேவிக்கு பாடல் ஸ்தோத்திரம்

அபிகலி கல்மஷ நாசினி காமினி
வைதிக ரூபிணி வேதமயே
க்ஷீர சமுத்பவ மங்கள ரூபிணி
மந்த்ர நிவாஸினி மந்த்ரநுதே
மங்கள தாயிணி அம்புஜ வாஷினி
தேவ கணார்ச்சித பாதயுதே
ஜெய ஜெய ஹே மதுஸூதன காமினி
தான்யலக்ஷ்மி ஸதா பாலயமாம்

6. விஜய லட்சுமி தேவிக்கு பாடல் ஸ்தோத்திரம்

ஜய கமலாசனி சத்கதி தாயினி
ஞான விகாஸினி கானமயே
அனுதின மர்ச்சித குங்கும தூசர
பூஷித வாஸித வாத்ய நுதே
கனகதாரா ஸ்துதி வைபவ வந்தித
சங்கர தேசித மான்யபதே
ஜெய ஜெய ஹே மதுஸூதன காமினி
விஜயலக்ஷ்மி ஸதா பாலயமாம்

7. வித்யா லட்சுமி தேவிக்கு பாடல் ஸ்தோத்திரம்

ப்ரணத ஸூரேஸ்வரி பாரதி பார்வதி
சோக விநாசினி ரத்னமயே
மணிமய பூக்ஷித கர்ண விபூஷண
சாந்தி ஸமாவ்ருத ஹாஸ்யமுகே
நவநிதி தாயினி கலிகல ஹாரிணி
காமித பலப்ரத ஹஸ்தயுதே
ஜெய ஜெய ஹே மதுஸூதன காமினி
வித்யாலக்ஷ்மி ஸதா பாலயமாம்

8. தைரிய லட்சுமி தேவிக்கு பாடல் ஸ்தோத்திரம்

ஜயவர வர்ணனி வைஷ்ணவி பார்கவி
மந்த்ர ஸ்வரூபிணி மந்த்ரமயே
ஸூரகண பூஜிய சீ க்ர பலப்ரத
ஞான விகாஸினி சாஸ்த்ர நுதே
பவபய ஹாரிணி பாப விமோசனி
சாது ஜநாச்ரித பாதயுதே
ஜெய ஜெய ஹே மதுஸூதன காமினி
தைர்யலக்ஷ்மி ஸதா பாலயமாம்

banner

Leave a Reply

Submit Comment