Dattatreya Jayanthi 2023: Power Day to Invoke Dattatreya to Remedy Problems in Life, Regain Prosperity & Attain Material Fulfillment Join Now
India's No. 1
Online Astrology &
Remedy Solution

மே மாத மகரம் ராசி பலன்கள் 2018 (May Matha Rasi Palan for Makaram 2018)

March 7, 2018 | Total Views : 1,837
Zoom In Zoom Out Print

மகரம் ராசி - பொதுப்பலன்கள் இந்த மாதம் பலன்கள் தாமதமாக கிடைக்கும். உங்களுக்கு பொறுமை அதிகம் வேண்டும். உங்களிடம் காணப்படும் சிறப்பான தகுதிகள் உங்களுக்கு வெற்றியை பெற்றுத் தரும். மற்றவர்கள் உங்களிடம் பொய்யான வாக்குறுதி அளிப்பார்கள். அதனால் உங்களுக்கு பாதிப்பு ஏற்படும். சொத்துக்களை வாங்கி மகிழ்வீர்கள். பொது விழாக்கள் மற்றும் விருந்துகளுக்கு ஏற்பாடு செய்வீர்கள். அது உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும். மற்றும் நண்பர்களிடத்தில் அன்பை அதிகரிக்கும். உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் தொலை தூர பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள். அது உங்களுக்கு மறக்க முடியாத தருணங்களாக அமையும். நீங்கள் பணத்தை முதலீடு செய்ய ஆரம்பிப்பீர்கள். ஆரோக்கியம் சாதரணமாக இருக்கும். சிறந்த ஆரோக்கியத்தை பராமரிக்க கண்டிப்பான உணவு முறையை பின்பற்றவும். மகரம் ராசி - காதல் / திருமணம் இந்த மாதம் உங்கள் காதல் சிறப்பாக இருக்கும். திருமணம் கை கூடி வரும். நீங்கள் பேசும் பேச்சுக்கள் சில சமயங்களில் உங்களையே திருப்பித் தாக்க வாய்ப்புள்ளது. அதனால் உங்கள் பதட்டத்ம் அதிகரிக்கலாம். எனவே நீங்கள் அமைதியாகப் பேச வேண்டும். தம்பதியர்களிடையே இனிமையான உறவு காணப்படும். உங்கள் துணையின் தேவைக்கு நீங்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடக்க இது உகந்த மாதம். திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம் : சுக்கிரன் பூஜை 2018 May Matha Rasi Palan for Makaram மகரம் ராசி - நிதிநிலைமை உங்கள் நிதிநிலைமை சாதரணமாக இருக்கும். உங்கள் நண்பர்களிடமிருந்து நிதி உதவி பெறுவீர்கள். நீங்கள் ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். ஆன்மீகத்தில் ஈடுபடுவீர்கள். உங்கள் செலவுகள் அதிகரிக்கும். கவனமாக திட்டமிட வேண்டும். நண்பர்களிடமிருந்து நிலுவைத்தொகையை வசூல் செய்வீர்கள். உங்கள் நிதிநிலைமை மேம்பட பரிகாரம் : குரு பூஜை மகரம் ராசி - வேலை இந்த மாதம் உங்கள் பணி முன்னேற்றம் மந்தமாகவும் தாமதமாகவும் காணப்படும்.சக பணியாளர்களுடன் வீணான வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். எரிச்சலூட்டும் உணர்வு காரணமாக நீங்கள் பணியில் கவனம் செலுத்த இயலாது. கூடுதல் முயற்சி மற்றும் நேரம் எடுத்து உங்கள் பணிகளை சிறப்பாக முடிப்பது நல்லது. வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம் : அங்காரக பூஜை மகரம் ராசி - தொழில் தொழிலில் சில சூழ்நிலைகளை நீங்கள் திடமாக எதிர் கொள்வீர்கள். முன்னேற்றகரமான மாறுபாடுகளை ஏற்படுத்துவீர்கள். அதன் மூலம் பல நன்மைகள் கிடைக்கும். உங்கள் இலக்குகளை அடைய நீங்கள் ஒழுங்குமுறையுடன் பணியாற்ற வேண்டும். வாடிக்கையாளர்களுடன் நட்பான அணுகுமறை வேண்டும். சில சலுகைகள் அல்லது தள்ளுபடிகளை வழங்குங்கள். நீங்கள் புதிய கூட்டு ஒப்பந்தம் மேற்கொள்வீர்கள். அது உங்களுக்கு சாதகமாக இருக்கும். மகரம் ராசி - தொழில் முறை உங்கள் தொழில் வளர்ச்சி சாதாரணமாக இருக்கும். உங்கள் திறமையை நிரூபிக்க வாய்ப்பு கிடைக்கும். உங்கள் அனைத்து செயல்களிலும் வெற்றி கிடைக்கும். உங்கள் கடின உழைப்பிற்கு வெற்றி கிடைக்கும். நீங்கள் உங்கள் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். இல்லையெனில் அது பல ஏமாற்றத்திற்கு வழி வகுக்கும். மகரம் ராசி - ஆரோக்கியம் இந்த மாதம் அஜீரணக் கோளாறு ஏற்பட வாய்ப்புள்ளதால் நீங்கள் உங்கள் உணவு முறையில் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் தேக ஆரோக்கியத்தை பராமரிக்க நீங்கள் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். உணர்ச்சி வசப்படுவதன் மூலம் உங்கள் இரத்த அழுத்தம் அதிகரிக்கும். ஆரோக்கியமான வாழ்விற்கு பரிகாரம் : ஸ்ரீ வைத்தியநாத பூஜை மகரம் ராசி - மாணவர்கள் மாணவர்கள் தங்கள் படிப்பில் வெற்றி பெறுவார்கள். வெளிநாட்டு மொழிகளை கற்க இது உகந்த நேரம். நீங்கள் அதில் வெற்றி பெறுவீர்கள். மேற்படிப்பிற்கு உயர்தர கல்வி நிறுவனத்தாரால் நீங்கள் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். உங்கள் செயல்திறனுக்கு ஆசிரியரின் பாராட்டு பெறுவீர்கள். கல்வியில் சிறந்து விளங்க பரிகாரம் : சரஸ்வதி ஹோமம் சுப தினங்கள் : 1st, 2nd, 6th, 11th, 17th, 18th, 19th, 20th, 26th, 27th and 28th அசுப தினங்கள்: 5th, 9th, 13th, 22nd, 24th, 29th and 30th

Leave a Reply

Submit Comment